nalaeram_logo.jpg
(3510)

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,

மண்புரை வையம் இடந்த வராகற்கு,

தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்

கண்புனை கோதை இழந்தது கற்பே.

பதவுரை

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு

-

சீர்மைமிக்க வேதங்களை (ப்பிரமனுக்கு) உபகரித்தருளின பரம புருஷனும்,

மண்புரை இடந்தவராகற்கு

-

மண்மிக்க பூமியை யிடந்தெடுத்த வராஹமூர்த்தியும்,

தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு

-

தெளிந்த நீரையுடைய ஏகார்ணவத்திலே பள்ளிக்கொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் (ஈடுபட்டு)

என் கண்புளை கோதை இழந்தது

-

கண்ணைக்கவர்கின்ற கூந்தலையுடையளான என் மகள் இழந்தது.

கற்பு

-

அறிவுடைமை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பண்புடை வேதம்) இப்பாட்டில் தன்மகள் கற்பிழந்தாளாகக் கூறுகின்றாள். “கற்பு  - கல்வி, அதாவது ஜ்ஞானம்“ என்பது ஈடு. தன்னறிவையிழந்தாளென்றபடி. அறிவு புஷ்கலமாயிருக்கையாவது – எதிலும் ஸந்தேஹமில்லாமலும் விபரீ தவுணர்ச்சியில்லாமலும் மறப்பில்லாமலுமிருத்தல். அறிவையிழக்கையாவது – ஸந்தேஹவுணர்ச்சியும் விபரீதவுணர்ச்சியும் மறப்புமுடைமையும் எம்பெருமான் அடியார்க்குப் பல காரியங்கள் செய்தருளினதாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகின்றதே! அதெல்லாம் உண்மையாயிருக்குமோ இராதோ என்று தன்மகள் சிலஸமயங்களில் ஸந்தேஹப்படுவதாகவும், சிலஸமயங்களில் ‘அதெல்லாம் பொய்தான், வ் பரஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகளான மஹர்ஷிகளுக்குக் கைக்கூலிகொடுத்து எழுதுவித்துக்கொண்டதத்தனையே‘ என்று விபரீத நிச்சயம் கொள்வதாகவும் தாய் கூறுகன்றாளென்க.

பண்புடைவேதம் பயந்தபரனுக்கு - * யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வைவேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை * என்று உபநிஷத்து ஓதினபடியே வேதங்களைப் பிரம்மனுக்கு ஒதுவித்தானென்கிறபடியை யுணர்ந்து, இங்ஙனே கண்ணிழந்தார்க்குக் கண்கொடுத்து அறிவிழந்தார்க்கு அறிவு கொடுத்துப் பேருதவிசெய்யுமவன் எனக்க உள்ளதையும் கொள்ளை கொள்ள நின்றானே! என்று நைகின்றாள் என்க. வேதத்திற்குப் பண்புடைமையாவது நச்வரனை உள்ளபடியே காட்டித்தரும் நீர்மையாய்.

ஆசார்யஹ்ருதயம் முதல் பிரகாணத்தில் “பண்ணார்பாடல் பண்புரையிரைகொள் வேதம்போலே“ என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகளில் கண்டதில்லையேயாகிலும் ஆப்ததமரானவிவர் இப்பிரபந்தத்திலே இப்படி அருளிச்செய்கையாலே இப்படியும் கொள்ள வேணும்“ என்று அருளிச்செய்திருக்கையாலே இங்கு மூலத்தில், பண்புரை வேதம் என்பதாகவும் ஒரு பாடம் கொள்ளத்தற்கும். “பண்புரை வேதம் என்றது பண்புரை வேதம் என்றது பண்ணைப் புரைத்திருக்கிற வேதமென்றதாய் அப்பண்ணுக்கு ஆச்ர்யமான வேதமென்றதுபடி என்று மாமுனிகளே வியாக்கியானமும் செய்தருளினார்.

மண்புரை வையமிடந்த வராகற்கு – * பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந்தேசுடைய தேவர் * என்கிறபடியே என்னைப்போலே ஒருதக்தியை உத்தரிங்க்கைக்காக தன்னையிழயமாறியுமு இழிவா வடிவெடுத்து அரிய பெரிய காரியஞ் செய்தவன் எனக்கு அந்தத்திருக்கோலத்தைக் காட்டவும் மாட்டே – னென்கிறானேயென்று நைகின்றாளென்க. * எறிதிரை வையம்முற்றும் எனத்துருவாயிடந்தபிரான் ஞானப் பிரானையல்லாமல் நான் கண்ட நல்லது வே * என்று முதல் பிரபந்தத்திலும், * கோலவராகமொன்றாய் நிலங் கோட்டிடைக் கொண்ட வெந்தாய், உன்னைப் பெற்றினிப் போக்குவனோ * என்று சரமப் பிரபந்தத்திலும் ஆழ்வார் மிக ஈடுபட்ட திருக்கோலம் இதுவேயாகும்.

தெண்புனற்பள்ளி – அழிந்த ஜகத்தை மீண்டும் படைத்தற்காக ஏகார்ணவத்திலே பள்ளி கொண்டு ஸங்கல்பித்து ஸ்ருஷ்டி செய்வதாக நூற் கொள்கை. இங்ஙனே மேன்மேலும் படைக்கவிருக்கிறவர் ஏற்கனவே படைத்த வென்னைப் பாழ்படுத்தலாமோ வென்று கரைகின்றா ளென்க. இங்கே ஈடு – “ஸத்தையே பிடித்து உண்டாக்கி அறிவு கொடுக்கக்கடவ அவன்கிடீர் உண்டான அறிவை வாங்கிக் கொள்ளுகிறான்!“

எம் தேவபிரானுக்கு – பிரயோஜநாந்தரபரர்களான தேவர்களுக்காக அரியன செது காரங்கள் பண்ணுபவன் ஒரு பிரயோஜனத்தையும் விரும்பாத என்திறத்திலே இப்படி உபேக்ஷித்திருக்கவேணுமோவென்றுநைகின்றாள். * பேணலமில்லாவரக்கர் முந்நீரபெரும்பதிவாய் நீணகர் நீளெரிவைத்தருளாயென்று, நின்னைவிண்ணோர் தாள்நிலம் தோய்ந்து தொழுவா நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காணலு மாங்கொலென்றே வைகல் மாலையுங் காலையுமே (திருவிருத்தம்) என்று, இந்திரன் முதலிய தேவர்கள் எம்பெருமானை முச்சந்தியும் தொழுவது “எங்கள் விரொதிகளைத் தொலைக்க எழுந்து வரவேணும்“ என்றேதவிர, அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகை ஸேவிக்கவேணுமென்கிற அவாவினால் ஒருவராவது  தொழுவதுண்டோ, இதில், நான் அப்படி ஒரு பிரயோஜனத்திற்காக என்றிக்கே ஸ்வயம் பிரயோஜனமாகத் தொழச் செய்தேயும் என்னளவிலே கருணை பிறக்கவில்லையே! என்று நைகின்றாளென்பது உள்ளுறை.

கண்புளை கோதை – கண்டர் கண்ணைக் கவரும்படியான மயிர் முடியையுடைய இப்பெண்பிள்ளை என்றபடி.

English Translation

My well-coiffured daughter has lost her mind, -to the Lord who gave the good Vedas, to the one who came as a boar and lifted the Earth, to the Lord who sleeps on clear waters.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain