(3493)

மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத மாபெ ரும்போர்,

பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய்,

விண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள்,

நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக் கார்பிறர் நாயகரே?

 

பதவுரை

மண் மிசை பெருபாரம் நீங்க

-

பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக

ஓர் பாரதம்மா பெருபோர் பண்ணி

-

மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி

மாயங்கள் செய்து

-

ஆச்சரியச் செயல்களைச் செய்து

சேனையை பாழ்பட நூற்றிட்டு

-

எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து

போய்

-

இவ்விடம்பிட்டுப் புற பிட்டு

விண் மிசை தன தாமமே புக மேவிய

-

பரமாகரசத்திலே தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின.

சோதி தன் தாள்

-

பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை

நான் நண்ணி வணங்கப்பெற்றேன்

-

நான் கிட்டி வணங்கப் பெற்றேன்.

எனக்கு பிறர் நாயகர் ஆர்

-

எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மண்மிசை) பூமிதேவிக்குத் தன்மீது ஸஜ்ஜனங்கள் எத்தனை கோடிக்கணக்காக இருந்தாலும் அவர்களைச் சுமப்பது இலவம்பஞ்சைச் சுமப்பதுபோல வருத்தமற்றிருக்கும். ஒரு துஷ்டனுண்டாகிலும் இரும்புமூட்டையைத் தாங்குவதுபோல மிகவருத்தமாம். ஆகவே த்வாபரயுகத்தில் இப்பூமியின்கண் பிறந்திருந்த கம்ஸன் சிசுபாலன் முதலிய அஸுரர்களின் பாரத்தைப் பொறுக்கமாட்டாமல் பூமிப்பிராட்டி கோரூபத்தைத் தரித்து மேருமலையினுச்சியிலுள்ள தேவர்களின் ஸபையை யடைந்து, அச்சபைநடுவில் வீற்றிருக்கும் நான்முகனை வேணுமென வேண்டிக்கொள்ள, அதற்கு நான்முகன் சிறிதுகாலம் ஆலோசித்து ‘இது நம்மாலாகாது, ஸர்வஜ்ஞனாய் ஜர்வசக்தனாய் ஸர்வலோ பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கு அறிவித்து அவர்மூலமாக இக்காரியத்தை நிறைவேற்றிக்கவேணும்‘ எனக்கருதி அந்தப் பூமி தேவியையும் மற்றுமுள்ள தேவர்களையுங் கூட்டிக்கொண்டு போய்ப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரமனைத் தொழுது துதித்தனன். பின்பு திருமால் அருள்புரிந்த சிந்தைகொண்டு அவர்கட்குக் காட்சிதந்து யோகக்ஷேமங்களை விசாரித்து அவர்கள் வந்த வரலாற்றை உணர்ந்தருளி ‘ஓ தேவர்களே! உங்கள் கருத்தை அறிந்துகொண்டேன், உங்கள் குறையைத் தீர்க்கிறேன், நீங்கள் போகலாம் என்று சோதிவாய்திறந்தருளிச்செய்ய, அவர்கள் பரமனாந்தத்துடன் விடைபெற்றுப் போக, அவர்கட்கு அபயமளித்தவண்ணமாகவே வந்து அவதரித்து, பாரதயுத்தத்திற்குத் துணைபுரிகிற வியாஜத்தாலே பூபாரங்களையெல்லாம் தொலைத்திட்டுத் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளினவளவும் இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டதாயிற்று.

மாயங்கள் செய்து – (இங்கே ஈடு.) “பகலை இரவாக்குவது, ஆயுதமெடேன் என்று ஆயுதமெடுப்பது, எதிரியுடைய மர்மத்தைக் காட்டிக்கொடுப்பதானவை தொடக்கமானவற்றைச் செய்து“ மூன்றாமடிக்குச் சார்பாக க்ருத்வா பரராவதரணம் ப்ருதிவ்யா, ப்ருதுலோசந, மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத, ஸ்வம் ஸ்தாந முத்தமம். என்ற மஹாபாரத ச்லோகம் அநுஸந்திக்கத்தகும்.

*விண்மிசைத் தனதாம்மே புக மேவியசோதி என்றவிடத்து நட்டில் ஓர் ஐதீஹ்யம் காட்டப்பட்டுளது. அதாவது – நம்பெருமான் ஸந்நிதியில் ஒரு ப்ரஹ்மோத்ஸவம் நடந்து முடிந்தவன்று ஆண்டாலும் எம்பாரும் சந்தித்து ‘அஹங்கார மமகார தூஷிதராயிருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே அதிஸுகுமரமான திருமேனியைக் காணப்பெற்றோமே! என்று சொல்லி ஒருவரை யொருவர் தொண்டனிட்டுத் தழுவிக்கொண்டார்களாம். அதை நஞ்சீயர் கண்டிருந்து வெளியிட்டருளினார்.

 

English Translation

To rid the burden of the world, he waged a mighty war, and showed his wonder-form, routing and killing armies.  He then left and entered his own dear resort in the sky.  Through worshipping his feet alone, I have found a master without a peer.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain