nalaeram_logo.jpg
(3457)

ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,

செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,

கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,

செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே.

பதவுரை

ஒண் கிளியே

-

அழகிய கிளியே!

செரு

-

ப்ரணயகலஹாஸ்

ஓண் பூ பொழில் சூழ்

-

அழகியபூஞ் சோலைகளாலே சூழப்பட்டதும்

செக்கர் வேலை

-

செந்நிறமான பக்கப் பிரதேசங்களையுடையதுமான

திருவண்வண்டூர்

-

திருவண்வண்டூரிலே

ஒரு வண்ணம் சென்று புக்கு

-

ஒரு விதமாகச் சென்று புகுந்து

கரு வண்ணம்

-

கரிய வடிவமும்

செய்ய வாய்

-

சிவந்த அதரமும்

செய்ய கண்

-

சிவந்த திருக்கண்களும்

செய்ய கை

-

சிவந்த திருக்கைகளும்

செய்ய கால்

-

சிவந்த திருவடிகளும்

செரு ஒண் சக்கரம் சங்கு

-

போர்க்களத்திலே ஒண்மைபெற்று விளங்குகிற சக்கரமும் (கையை விட்டு அகலாத) சங்குமான

அடையாளம்

-

லக்ஷணங்களை

திருந்த கண்டு

-

நன்றாகப் பார்த்து

எனக்கு ஒன்று உரை

-

எனக்காக வொரு வார்த்தைசொல்லு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஒரு வண்ணம்) ஒருகிளியை விளித்து அவனுடைய அடையாளங்களைச் சொல்லி இவ்வடையாளப்படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கொரு வார்த்தை அறிவியுங்கோளென்கிறாள்.

ஒரு வண்ணம் சென்றுபுக்கு – இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி –“இதுக்கு இரண்டுபடியாக அருளிச் செய்வர், இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே போர முதலிகளாயிருப்பர், மேன்மேலனப் பிரம்புகள் விழும், அத்தைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் அன்றியே, வழி நெஞ்சையபஹரிக்கும் போக்யதையையுடைத்து, அதில் கால்தாழாதே வருந்தி ஒருபடி சென்றுபுக்கு.“ என்பதாம்.

எம்பெருமான் ஸௌசீல்யமே வடிவெடுத்தவனாயினும் பரத்வம் பாரட்டி நிற்பது முண்டாகையாலே அதற்கேற்ப அருகே அணுகவொண்ணாதபடி நேரவுங்கூடும், அப்படி நேர்ந்தாலும் அதை ஒருவாறு ஸஹித்துக்கொண்டு உள்ளே புகுங்கோள் என்பது முற்பொருள். மலைநாடாகையாலே வழியெல்லாம் பூவியில் பொழிலும் தடமுமாயிருக்கும், அவற்றிலே கண் செலுத்தினால் ஆங்காங்கு லயிக்கவேண்டிற்றாகுமேயல்லது எம்பெருமானிடம் சென்று சேரமுடியாது, ஆகவே வழியில் கண் செலுத்தாதே ஒருவாறு வழியைக் கடந்து போங்கள் என்பது இரண்டாவது பொருள்.

செருவொண்பூம் பொழில் – செரு – யுத்தம் பொழில்களிலே யுத்தமாவது பறவைகளும் ப்ரண்ணரோஷத்தாலே சீறுபாறென்றிருத்தல். செக்கர் வேலை – பொழிலில் உதிர்ந்த தாதுகளாலே சிவந்த பக்கங்களையுடையது, அன்றியே கடற்கரையாகையாலே சிவந்த மணலீட்டையுடையது.

திருவண்வண்டூரிலுள்ள எம்பெருமான் கரியதிருமேனிக்குப் பரபாகமாக வாய் கண் கை கால் ஆகிய அவயங்கள் சிவந்து கையுந்திருவாழியுமாக இருப்பான், அவ்வடையாளங்கொண்டு அவனைக்கண்டுபிடித்து எனக்காக ஒருவார்த்தை சொல்லவேணுமென்றாளாயிற்று.

“சொல்லிற்றுச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை“ என்னுமாபோலே * முன்னோர்மொழிந்தமுறை தப்பாமற்கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப்பேசும் ஏக்கண்டர்களான ஆசிரியர்களைக் கிளி யென்கிறது.

English Translation

O Beautiful parrot, go this once, then speak your good words!  Flower groves and red shores surround Tiruvan-Vandur.  The Lord has a dark hue, red lips, lotus eyes and lotus feet.  Discus and conch are his identification marks.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain