nalaeram_logo.jpg
(3456)

போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள்,

சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,

ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,

மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே.

பதவுரை

புன்னை மேல் உறை

-

புன்னை மரங்களின மேலே வாழ்கிற

பூ குயில்காள்

-

அழகிய குயில்களே!

யான்

-

அடியேன்

போற்றி இரந்தேன்

-

துதித்து வேண்டுகின்றேன்,

வாளை

-

வாளை மீன்களானவை சேற்றில் துள்ளும்

சேற்று நிலங்களிலே களித்து உகளப்பெற்ற

திரு வண்வண்டூர் உறையும்

-

திருவண்வண்டூரிலே வாழ்பவனும்

ஆற்றல் ஆழி அம் கை

-

சக்திமிகுந்த திருவாழியை அழகிய கையிலே உடையவனுமான

அமரர் பெருமானை கண்டு

-

தேவாதிதேவனைக் கண்டு

மையல் தீர்வது ஒரு வண்ணம்

-

என்னுடைய வியாமோஹம் தீரும்படியான

மாற்றம் கொண்டு அருளீர்

-

ஒரு நல்வார்த்தை கொண்டுவந்து உதவவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (போற்றியானிரந்தேன்) சில குயில்களைக்குறித்து, திருவண்வண்டூரிலே சென்று எம் பெருமானைக்கண்டு எனக்குள்ள நிலைமை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு வார்த்தை என்பதை “போற்றியாம் வந்தோம்“ என்றவிடத்திற்போல வினையெச்சமாகக் கொண்டால் ‘மங்களாசாஸனம் பண்ணி‘ என்று பொருளாய், மேலே இரந்தேனென்பதில் அந்வயிக்கிறது. அங்ஙன்னறிக்கே * அன்றிவ்வுலகமளந்தாபடி போற்றி * என்றவிடத்திற்போலே கொண்டால் ‘மங்களமுண்டாகுக‘ என்று பொருள்பட்டுத் தனியேநிற்கும். வடமொழியில் ‘ஸவஸ்தி‘ என்று முதலிட்டுப்பேச ஆரம்பிப்பது போலாமிது.

யான் இரந்தேன் – தூது போகவேணுமென்று இரப்பவன் அவனென்று ஸ்ரீராமயணாதிகளில் ப்ரஸித்தமாயிருக்க, இப்போது நான் இரக்கும்படியாவதே! என்கிற அவஸாதம் தோன்றும்.

புன்னைமேலுறை பூங்குயில்காள்! –“வளர்த்ததனால் பயன் பெற்றேன்“ என்னும்படியாக ஆசிரியர் பக்கலிலேயே வளருமவர்கள் (ஸ்வாபதேசத்தில்) குயிலாகச் சொல்லப்படுபவர்கள். –வநப்ரிய பரப்ருக கோகில் பிக * என்கிற அமரகோசத்தின்படி குயில்களுக்கு வடமொழியில் பரப்ருத மென்றுபெயர், காக்கையின் கூட்டிலே கொண்டுவிடப்பெற்று அவற்றால் போஷிக்கப்பட்டு வளரும் குருகுலவாஸிகளைச் சொல்லிற்றாகிறது.

“புன்னை மேலுறை“ என்றது புன்னையின் கீழுறை என்றபடி. இதில் ஒரு விசேஷார்த்தமுண்டு. நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஒருமிடறாக ஈடுபட்டதலமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே திருப்புன்னைமரம் நெடுநாளாக ஸுப்ரஸித்தம். பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே – •••••• புந்நாகதல்லஜமஜஸ்ரஸஹஸ்ரகீதி ஸேகோத்த திவ்ய நிஜஸௌரபமாமநாம * என்று அந்தத்திருப் புன்னயை வருணிக்கின்றார். முன்புள்ள நம்முதலிகளெல்லாரும் அந்தத்திருப்புன்னையின் கீழேயிருந்து பகவத் விஷயார்த்த விசாரங்கள். செய்தவர்களென்று நன்கு தெரிகின்றதனால் இங்கு ஆழ்வார் அன்னவர்களையே விளிக்கின்றாரென்று கொள்ளத்தகும். அன்றியும், பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் * மாம்பொழில் தளிர்கோதிய மடக்குயில்வாயது துவர்ப்பு எய்த்ததீம் பலங்கனிதேனதுநுகர் * என்று குயில்களின் ஓர் இயற்கையை அருளிச்செய்கின்றார். முதலில் மாந்தளிர்களிலே வாய்வைத்ததனால் சொல்லுகிறவிதனால், முதலில் ஸாமாந்ய சாஸ்த்திரங்களிலெ வாய்வைத்துப் பிறகு விசேஷ (அத்யாத்ம) சாஸ்திரங்களிலே இன்பமாகப் போதுபோக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களும் குயிலாகக் கூறப்படுவார்கள்.

“ஆற்றலாழியங்கையமரர் பெருமானை“ என்ற மூன்றாமடியில் ஆற்றல் என்பது ஆழிக்கும் அடைமொழியாகலாம், பெருமானுக்கும் அடைமொழியாகலாம். ஆறாயிரப்படியில் “ஆச்ரிதர்க்கு ஆர்மதானம் பண்ணினாலும் ஒன்றும் செய்யாதனாயிருக்கும் ஸ்வபாவனாய்“ என்றருளிச் செய்தது ஆற்றலென்பதைப் பெருமானுக்கு விசேஷணமாக்கி யென்க. இப்போது ஆற்றலாவது நோவுபாடு. திருவாழிக்கு விசேஷணமாகில் மிடுக்கென்று பொருள்.

மையல் தீர்வதொருவண்ணம் மாற்றம் கொண்டருள் – எம்பெருமான் பக்கலிலிருந்து ஏதேனுமொரு வார்த்தை கொணர்ந்து அருளினாலல்லது என்னுடைய வியாமோஹம் தீர மாட்டாதென்றபடி. பொதுவிலே மாற்றம் எறுள்ளதேயன்றி இன்ன மாற்றமென்றதில்லை, இதனால், அநூகூலமாகவுமாம், பிரதிகூலமாகவுமாம், அத்தலையில் வார்த்தை என்று ஏதேனுமொரு வார்த்தை கிடைத்தால்போதுமென்பது காட்டப்பட்டது. * பாவி நீயென்று ஒன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே * மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைத்தான் தருமேல் மிகநன்றே * என்ற பாசுரங்கள் இங்கே நினைக்கத்தக்கன.

English Translation

O Punnai-dwelling koels, I beg of you, please! The Lord of gods with a discus in his radiant hand resides in Tiruvan-Vandur where fish jump in watered fields.  Go ask him for a reply, and rid me of my swoon.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain