nalaeram_logo.jpg
(3455)

உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,

திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,

புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,

புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே.

பதவுரை

ஊடல் உணர்த்தல் உணர்ந்து

-

(பிரிவு சிறிது உண்டா) ஊடலும் உணர்த்தலுமாகிற சிரமங்கள் நேருமென்ற்றிந்து

உடன் மேயும்

-

கணப்பொழுதும் விட்டுப்பிரியாமல் கூடவே திரிகின்ற

மடம் அன்னங்காள்

-

துவண்ட அன்னங்களே!

திணர்த்த வண்டல்கள் மேல்

-

கொழுத்த வண்டல் மணல்களின் மேலே

சங்கு சேரும்

-

சங்குகள் சேருமிடமான

திரு வண்வண்டூர்

-

திருவண்வண்டூரிலே

புணர்த்த பூ தண் துழாய் முடி

-

தொடுக்கப்பட்ட அழகிய செவ்வித்துழா யணிந்த திருவபிஷேகத்தையுடையனான

நம் பெருமானை கண்டு

-

நமது ஸ்வாமியைக் கண்டு

புணர்த்த கையினர் ஆய்

-

கை கூப்பினவர்களாய்க் கொண்டு

அடியேனுக்கும்

-

அடியேனுக்காகவும்

போற்றுமின்

-

அத்தலைக்கு மங்களாசாஸனம் பண்ணுங்கோள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உணர்த்தனுடலுணர்ந்து) இப்பாட்டில் ப்ரகாரத்தான் மூன்று வகைப்பட்டாயிற்றிருப்பது, அவையாவன ஊடலுணர்தல் புணர்தலிவை மூன்றும், காமத்தாற்பெற்றபயன் என்று மூன்றையும் கூடினால் அஹேதுகமாக விளைவதொன்று. அதுதான் ‘என்னையொழிக்குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், உன் உடம்பு பூநாறிற்று‘ என்னையொழிக்குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், குளித்தேன் என்கையும் உனக்கு ஆம் என்று பார்த்தேன் என்கையும் “உன்வரவுக்கு ஒப்பித்தேன்“ என்றாற்போலே சொல்லுமிவை. இவையிரண்டின் அனந்தரத்தே வருவது கல்வி“ என்றருளிச்செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீஸூக்தியில் உதாஹரிக்கப்பட்டுள்ள தமிழ்ச்செய்யுள் திருவள்ளுவர் குறள். அது “ஊடலுணர்தல் புணர்தலிவை மகிழ்தல் கூடியார்பெற்றபயன்“ என்னும் பாடமாகவே குறளிற் காண்கிறது. (புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் இது.) உணர்தல் என்பதற்கு – தலைமகன் தன்னுடைய தவறில்லாமையைச் சொல்லி நாயகியினுடைய ஊடலை நீக்குதல்“ என்று பொருளுரைக்கப்பட்டிருக்கின்றது. உணர்த்ல், உணர்தல் இவையிரண்டும் இங்குப் பரியாயமேயென்க.

மூலத்தில் “உணர்த்தலூடலுணர்ந்து“ என்றிருந்தாலும் பாடக்ரமத்திற்காட்டிலும் அர்த்தக்ரமம் வலிது என்ற நியாயத்தினால் “ஊடல் உணர்த்தல் உணர்ந்து“ என்று அடைவுபடுத்திக்கொள்ளலாம். ஊடல் உண்டான பிறகே உணர்த்தல் நெருமாதலால் அதற்குச் சேர இங்ஙனம் கொள்ளக்கடவது. ஊடல் என்கிற ப்ரணயரோஷமும் அதற்குப்பரிஹாரமான உணர்த்தலும் நேருவதற்குப் பிரிவு காரணமாகும், பிரிவின்றிக்கே கூடியேயிருந்துவிட்டால் அவை நேரமாட்டா. ஆகவே, நாம் பிரியவும் வேண்டா, பிரிந்து ஊடலுணர்த்தல் ஆயாஸங்களை அனுபவிக்கவும் வேண்டாஎன்று கொண்டு கூடியேயிருக்கின்ற அன்னங்களே! என்றதாயிற்று.

புணர்ந்த பூந்தண்டுழாய்முடி யென்றது – அப்பெருமான் ஆச்ரிதரக்ஷணத்திற்கென்றே தனி மாலை மூடி சூடியிருத்தலால் நீங்கள் கூசாதேசென்று காணலாமென்று காட்டுகிறபடி.

“அடியேனுக்கும் போற்றுமினே“ என்கிற விப்பாசுரம் திவ்யதேச யாத்திரை செல்கின்றவர்களனைவரையும் நோக்கி அந்த பாக்கியமில்லாதவர்கள் சொல்லுவதற்குரியது. தேவரீர்கள் திவ்யதேசங்களிலே சென்று ஸேவிக்கும்போது அடியேனுக்காவும் ஸேவிக்கவேணு மென்கிற பாவனை.

English Translation

O Swan pair, you know how to make peace after a quarrel  My Lord wearing a Tulasi garland on his crown resides inTiruvan-vandu where conches fill the dunes, Go see him with folded hands and pray for me also.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain