nalaeram_logo.jpg
(3452)

காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்!

வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,

நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,

பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே.

பதவுரை

காதல்மென் பெடையோடு

-

காதலையே நிரூபகமாகவுடைய அழகியபேடையோடு

உடன்

-

கூட

மேயும்

-

இரை தேர்கின்ற

கரு நாராய்

-

நல்லவர்ணமுடைய நாரையே!

வேதம் வேள்வி ஒலி முழங்கும்

-

வேதகோஷமும் வைதிக்கரியைகளின் கோலாஹலமும் முழங்கப் பெற்ற

தண்

-

குளிர்ச்சி பொருந்திய

திருவண்வண்டுர்

-

திருவண்வண்டூரிலே

நாதன்

-

ஸர்வேச்வரனும்

ஞாலம் எல்லாம் உண்ட

-

(பிரளயகாலத்தில் ஸகல ஜகத்தையும் விழுங்கினவனுமான

நம் பெருமானை

-

எம்பெருமானை

கண்டு

-

நேராகக் கண்டு

பாதம் கை தொழுது

-

அவனது திருவடிகளை நோக்கி அஞ்ஜலி பண்ணி

அடியேன் திறம்

-

அடியேன் விஷயமாக

பணியீர்

-

ஒருவார்த்தைசொல்ல வேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (காதல் மென்பெடை) ஆர்த்தர்களுக்கு ஆர்த்தியைப் பரிஹரித்து ரக்ஷணம்டி செய்வதிலேயே தீக்ஷை கொண்டிருக்கின்ற எம்பெருமான் திருவண்வண்டூரிலே வேதவாலியையும் வேளவியொலியையும் காதாரக்கேட்டுக்கொண்டு தன்னுடைய ஆர்த்தரக்ஷ தீக்ஷையையும் மறந்து அங்கே தங்கிக்கிடக்கிறான், அவனுடைய பதாரவிந்தங்களிலே சென்று அஞஜலிபண்ணி நின்று என் விஷயமாகச் சில வார்த்தைகள் சொல்லவேணுமென்று நாரையை இரக்கிறார்.

கருநாராய்! – நாரைக்கு வெண்மை நிறம் ப்ரஸித்தமாயிருக்க “கருநாராய்“ என்றது எங்ஙனே? என்று சங்கிக்கவேண்டா. உடம்பிலே வைவர்ணிய முண்டானால் “உடம்பு வெளுத்துப்போயிற்று“ என்று சொல்லுவதுண்டு, அப்படிப்பட்ட வெண்மையின்றிக்கே மேனி புகர் பெற்றிருக்கிறபடி, பிரிந்தவன்வடிவுக்கு ஸ்மாரகமாயிருக்கிறபடி என்பது இருபத்தினாலாயிரம். “கூடத்திரிகையாலே நரைதிரை நீங்கி வடிவுபுகர்த்தபடி பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காதாகாதே, தான் உடம்பு வெளுத்துக்கிடக்கிறாளிறு என்பது ஈடு முப்பதாயிரம். “காதல் மென்பெடையோடுடன் மேயும்“ என்றதனால் ஸ்வாபதேசத்தில் ஆழ்வான் ஆனந்தாழ்வான் போன்ற கருஹஸ்தாசரமிகளின் பெருமை தெரிவிக்கப்படுகிறது. அன்றியே, சிஷ்யர்களோடு கூடி பகவத் குணாநுபவம் பண்ணுகின்ற ஆசார்யர்களைச் சொல்லிற்றாகவுமாம்.

வேதவேள்வியொலிமுழங்கும் – ஸ்ரீசக்ரவர்த்திதிருமகன் காட்டுக் கெழுந்தருளினபின் அயோத்திமக்கள் புலம்புகையில் –தாநயஜ்ஞவிவாஹேஷு மஹத்ஸு ச, ந த்ரக்ஷ்யாம புநர் ஜாது தார்மிக் ராம்மந்தரர்“ என்கிறார்கள். இதனால் வேதவேள்வியொலி முழங்குமிடங்களிலெல்லாம் இராமபிரான் வந்து நின்று ஸேவைஸாதிப்பனென்று காட்டப்பட்டது. இது எம்பெருமானுடைய தன்மையாதலால் திருவண்வண்டூரிலே அந்த முழக்கத்திலே கால்தாழ்ந்து தன்னைமறந்தொழிந்த்தாகப் பராங்குசநாயகி கருதுகின்றாளென்க. இவ்விடத்தில் ஈட்டில் – “வேதகோஷமும் யாகத்தில் சஸ்த்ராதி கோஷமும் ஸமுத்ரகோஷம்போலேயிருக்கிற ச்ரமஹரமான ஊர்“ என்றுள்ளது. யாகத்தில் சஸ்த்ராதி கோஷமாவது – பசுவிசஸநம் பண்ணுகைக்காகப் பிரயோகிக்கப்படுகிற  சஸ்த்ரங்கள் (கத்திகள்) முதலானவற்றின் கோஷம் என்று சிலர் ப்ரமித்துக்கூறுவதுண்டு. அது பொருளன்று. வேதத்தில் சொல்லியிருக்கிறபடி சஸ்த்ரமென்பது மந்த்ரவிசேஷம் வேதார்த்தஸங்கரஹ தாத்பர்யதீபிகையில் (பக்கம் 362ல்).

‘திருவண்வண்டூர் நாதன்‘ என்றவாறே அறப்பெரியான் பக்கலிலே நாங்கள் சென்று கிட்டப்போமோ? என்று பறவைகளுக்குச் சங்கையாக, அவனுடைய நீர்மைக்குணத்தை யெடுத்துக்காட்டுகிறாள் “ஞாலமெல்லாமுண்ட“ என்று ஆபத்துவருவதற்கு முன்னே ரக்ஷிக்கையை இயல்வாகவுடையவனாகையாலே அவனருகிற் செல்லக் கூசவேண்டா என்று காட்டினவாறு. அடியேன்திறம் பணியிர் – இங்கே ஈடு – “அவன்திறம்போலன்று, என்னிடையாட்டத்தைச் சொல்லுங்கோள். சொல்லில் ஒரு மஹாபாரதத்துக்குப் போரு மரகாதே“.

English Translation

O Dark egret searching for worms, with your love-bird companion! Our Lord who swallowed all the worlds resides in cool Tiruvan-Vandur, resonant with Vedic chants. Go fall at his feet, and tell him of my lowly plight.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain