nalaeram_logo.jpg
(3451)

வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,

செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,

கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,

கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

பதவுரை

வைகல்

-

எப்போதும்

பூ கழி வாய்

-

அழகிய நீர்நிலத்திலே

வந்து மேயும்

-

வந்திருந்து இரையுண்கிற

குருகு இனங்காள்

-

கொக்கின் கூட்டங்களே!

செய் கொள் செந்நெல் உயர்

-

கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற

திரு வண் வண்டூர் உறையும்

-

திருவண் வண்டூரிலே நித்யவாஸம் பண்ணா நிற்பவனும்

கை கொள் சக்கரத்து

-

திருக்கையிலே திருவாழியாழ்வானைக் கொண்டவனும்

கனி வாய்

-

கனிபோன்ற திருவந்ரத்தையுடையவனுமான

என் பெருமானை

-

எம்பெருமானை

கண்டு

-

நேரில் பார்த்து

கைகள் கூப்பி

-

அஞ்ஜலி செய்து

வினையாட்டியேன் காதன்மை சொல்லீர்

-

இங்ஙனே பிரிந்திருக்கும் பாவமுடையளான என்னுடைய ஆவலைச் சொல்லுங்கோள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வைகல் பூங்கழிவாய்) திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள் பராங்கு சநாயகிகாள்“ என்று விளிக்கின்றாள். கடலையடுத்த நீர்ப்பரப்புக்குக் கீழ் யென்று பெயர், பூங்கழியென்று – மநோஹரமாயிருக்குந்தன்மை சொல்லுகிறது. வாய் – ஏழனுருபு. கழியிலே யென்றபடி. வைகல் வந்து மேயும் – எப்போதும் நீங்கள் உங்களுடைய உண்வை மாத்திரமேயோ நோக்குவது பிறர்காரியமும் சிறிது செய்யவேண்டாவோ என்று காட்டுகிறபடி. எம்பெருமான் என் கைக்கு எட்டாதே போனானாகிலும் அவனைப் பெறுவிக்கும்வர் இதுவொரு சந்தோஷம் என்று காட்டுகிறபடியுமாம். குருகினங்காள் – “தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே“ என்கிறாப்போலே நீங்கள் துணைபிரியாதே வாழ்கிற இவ்வாழ்ச்சி என் காரியம் செய்வதற்காகவே யென்றிருக்கிறேன் என்று தெரிவிக்கிறபடி.

“குருகினங்காள்“ என்று விளித்தவாறே, இப்பிராட்டி நம்மை விளிப்பது எங்கேனும் தூதுபோகவிடுகைக்கேயாமென்று உணர்ந்த அவை “இப்போது நாங்கள் எங்கே போகவேணும்? என்ன, திருவண்வண்டூர்க்குப் போகவேணுமென்கிறாள் இரண்டாமடியில். உங்களுக்கு வேண்டிய உணவு அங்கும் கொள்ளைகொள்ளையாகக் கிடைக்குங்காணும் என்பாள் போன்று “செய்கோள் செந்நெலுயர்“ என்று அடைமொழி கொடுக்கின்றாள். அங்கு எம்பெருமானை நாங்கள் எவ்வடையாளங்கொண்டு தெரிந்துக்கொள்வதென்ன, இரண்டு அடையாளங்கள் கூறுகின்றாள். (கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானை) கீழ்த்திருவாய்மொழியாலே “பிறந்தவாறும்“ என்று ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தை அநுஸந்தித்து மோஹித்தவளாகையாலே அவ்வவதாரந்தன்னில் ••••••   (ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகதார) என்னும்படியாகக் கையும் திருவாழியாக அவதரித்தவாறு திருவுள்ளத்தில் ஊற்றியிருக்கையாலே முதலில் அவ்வடையாளத்தைக் கூறுகின்றாள். பிறகு வளர்ந்தவாறும் என்று கோகுலத்திலே வளர்ந்தபடியை அநுஸந்தித்தவளாகையாலே அவ்வ்வ்விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர் அணுக்கனாய்க் கொவ்வைக் கனிவாய்கொடுத்துக் கூழைமை செய்தபடிகளெல்லாம் திருவுள்ளத்திலே நிழலிட்டுத் தோற்றியிருக்கையாலே கனிவாய் என்கிற அடையாளத்தைக் கூறுகின்றாள்.

கைகள் கூப்பிச் சொல்லீர் – அப்பெருமான் இங்கே என்பக்கலிலே வந்தணையுங்காலத்து ‘அடியேன் குடியேன்‘ என்று கள்ளக்குழைச்சல்கள் காட்டித் தன்னுடைய ஸௌசீல்யம் தோற்றவிருந்து, இப்போது பிரிந்து சென்றவாறே பாத்வம்பாராட்டி நிற்கையாலே அதற்று ஏற்றபடி அஞ்ஜலிபண்ணிக்கொண்டு விஜ்ஞாபனம் செய்யுங்கோளென்கிறார். எதை விஜ்ஞாபிப்பது? என்ன, (விளையாட்டியேன் காதன்னா) என்கிறாள். பாராங்குச நாயகியின் காதல் என்றால் அது ஸாமான்யமாக இருக்குமோ? லோகவிலக்ஷணமாக இருக்குமன்றோ. இன்னாள் உம்மை ஆசைப்பட்டிரா நின்றாளென்று தெரிவித்தால் போதுமென்கிறாள். இங்கே நம்பிள்ளையீடு, “வன்னெஞ்சர் காதல்போலன்றிறே மென்னஞசர்காதல், மெல்லியலார்காதலளவல்லாத என் காதல் சொல்லீர், சொல்லுவார் தாழ்வே வரவுதப்தென்க்கிறாள்.

தங்களைப்பிரியில் தியாத ப்ரேம்முடைய சிஷ்யர்களுடனே கூட மனத்துக்கினிய காலக்ஷேப கூடங்களிலேசென்று பகவத்குணாநுபவம் பண்ணுகின்ற சுத்தஸ்பாவரான ஆசார்ய ரொருவரை விளித்து எனக்கு பகவத்ந்ஸம்ச்லேஷம் பண்ணுவிக்கவேணுமென்று பிராந்தியத்தல் இதற்கு உள்ளுரை பொருள். ஆசார்யஹ்ருதயத்தில்“ ஆசறுதூவியென்ணும் பாஹ்யாப்யந்தரசுத்தியோடே“ இத்யாதி சூர்ணையின் வியாக்கியானத்திலே ஸ்வாபதே சார்த்த விரிவுகாண்க.

English Translation

O Flocking egrets picking worms in my flowery marshes! My berry-lipped Lord with discus in hand, resides in beautiful prosperous Tiruvan-vandur, where paddy grows tall.  Go tell him with folded hands my sad tale of love.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain