(3439)

நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,

சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,

நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,

சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே.

 

பதவுரை

நாமங்கள் ஆயிரம் உடைய

-

ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான

நம் பெருமான்

-

எம்பெருமானுடைய

அடிமேல்

-

திருவடிகளின்மேலே

சேமம் கொள்

-

திண்ணிய அத்யவஸாய முடையவரான

தென் குருகூர் சடகோபன்

-

ஆழ்வார்

தெரிந்து உரைத்த

-

ஆராய்ந்து அருளிச் செய்த

நாமக்கள் ஆயிரத்துள்

-

அவனது திருநாமம் போன்றதான ஆயிரத்தினுள்ளே

திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர் மேல் இவை பத்தும்

-

திருவல்லுலாழாகிற அரணமைந்த அழகிய திருப்பதி விஷயமான இப்பத்தையும்

செப்புவார்

-

ஓதவல்லவர்கள்

பிறந்தே

-

இவ்விருள் தருமா ஞாலத்தில் பிறந்து வைத்தே

சிறந்தார்

-

சிறந்தவராவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நாமங்களாயிரம்.) இத்திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸம்ஸாரிகளாயிருக்கச் செய்தேயும் மற்றையோர்களிற் நாட்டில் சிறப்புப் பெற்றாராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருக்கல்யாண குணங்களுக்கும் திவ்ய சரித்திரங்களுக்கும் வாசகமான ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களை யெல்லாம் வைத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய், அந்தஸஹஸ்ரநாமம் போலவே பகவத்குண விபூதிகளை ஒழுங்குபடத் தெரிவிக்குமதான இவ்வாயிரத்தினுள் இவை பத்தையும் திருவல்ல வாழ் விஷயமாகச் சொல்லவல்லவர்கள் சரீரஸம்பந்தத்தோதே யிருந்து வைத்தும் பகவதநுபவமாகிய சிறப்பையுடையவர் என்றதாயிற்று.

சேமம்- ஷேம மென்ற வடசொல் விகாரம்

 

English Translation

This decad of the thousand songs, on peaceful Tiruvallaval sung by kurugur satakopan with knowledge and understanding, addresses the Lord of thousand names. Those who can sing it will excel in this world.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain