(3437)

கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,

குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,

மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,

சுழலின் மலிசக்கரப் பெருமானது ¦ தால்லருளே?

 

பதவுரை

குளிர் சோலையுள்

-

குளிர்ந்த சோலைகளிலே

தேன் அருந்தி

-

மதுவைப் பருகி

மழலை வரி வண்டுகள்

-

மழலைத் தொனியையுடைய அழகிய வண்டுகள்

குழல் என்ன யாழ் என்ன

-

வேஸ கானமோ வீணா கானமோ என்னும்படியாக

இசை பாலும்

-

இசைபாடப்பெற்ற

திருவல்லவாழ்

-

திருவல்லவாழிலே

சுழலின் மலி சக்கரம்

-

சுறுற்சி பொருந்திய திருவாழியையுடையனான

பெருமானது

-

ஸர்வேச்வரனுடைய

தொல் அருளா

-

இயற்கையான திருவருளாலே

சுழல் வனை பூரிப்ப யாம் கண்டு கை தொழ கூடும் கொல்

-

சுழல் வளைகள் பூரிக்கும்படியாக நாம் கண்டு தொழநேருமோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சுழல்வளை) குளிர்ந்த சோலைகளிலே  தேனைப்பருகி, ‘இது வேணுகாலமோ? அல்லது வீனா கானமோ? என்று சந்தேகிக்குமாறு வண்டுகள் இசைபாடுமிடமான திருநல்வாழிலே கையும் திருவாழியுமாகக் காட்சி தாரா நின்றுள்ள எம்பெருமானை அவன்றன்னுடைய திருவருளாலே யாம் கண்டு கை தொழ நேருமோ? என்கிறாள்.

பிரிவாற்றாமையால் கைவலை சுழலுமென்றும் கலவியின்பத்தால் மேனி தடித்து வளை பூரிக்குமென்றும் அநுபவமாதலால் “சுழல்வளை பூரிப்ப” எனப்பட்டது. பாட்டு முடிவிலுள்ள சுருள் என்பதை எழுவாயாகவைத்து, அருளானது யாம் கைதொழும்படியாக, கூடுங்கொலோ என்னவுமாம்.

 

English Translation

The Lord of abiding grace wielding a spinning discus resides in Tiruvallaval amid cool groves, where young bumble bees drink nectar and hum like the flute and the Yal-harp.  When will I worship his form and wear my slipped bangles again?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain