(3433)

நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,

மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,

கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,

என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?

 

பதவுரை

நல் நலம் தோழியீர்காள்

-

சிறந்த நேசமுள்ள தோழிகளே!

நல்ல அந்தணர் வேள்ளி புகை

-

வைதிக ப்ரஹ்மணர்கள் செய்யும் யாகங்களிலுண்டான புகை

மை நலம் கொண்டு

-

ஸமயீனுடைய நல்ல நிறத்தைக்கொண்டு

உயர் விண் மறைக்கும்

-

உயர்ந்த ஆகாசத்தை மறைக்குமிடமான

தண் திருவல்லவாழ்

-

குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளியிருப்பவனும்

கன்னல் அம்கட்டி தன்னை

-

கோதற்ற கன்னற்கட்டி போன்றவனும்

கனியை

-

பரிபக்குவமான பழம்போன்றவனும்

இன் அமுதம் தன்னை

-

இனிய அமுதமாயிருப்பவனும்

என் நலம் கோள்

-

என்னுடைய ஸர்வல்லத்தையும் கொள்ளை கொண்டவனும்

சுடரை

-

(அத்தாலே) ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை

கண்கள்காண்பது என்று சொல்

-

எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நன்னலத் தோழியீர்காள்.) தோழிகளே! உங்கள் குணங்கண்டன்றோ நான் உங்களோடு பழகியிருப்பது; நீங்கள் நன்னல தோழிகளல்வீரோ? தாய்மார் போலவே நீங்களும் எனக்குப் பகையாளிகளாக இருந்திகோலாகில் உங்களுக்குத் தோழிமாரென்னும் பெயர் அடுக்குமோ? திருவல்லவாழில் நல்லவந்தணர்கள் பகவத்ஸமாராதனமாக அனுஷ்ட்டிக்கும் வேள்விகளில் தோன்றும் புகையானது ஆகாசப்பரப்பெங்கும் பரவியிருந்து என்னை யீர்க்கின்றது; இது ஒருபுறமிருக்க, அத்தலத்தெம்பெருமானடைய அளவுகடந்த யோக்யதையோ என்னை ஆத்மாபஹாரம் பண்ணாநின்றது; அந்தத் திருமூர்த்தியைக் கண்ணால் காணப்பெற்றால் போதுமென்றிருக்கிற வெனக்கு அது என்னைக்குக் கைகூடும்? சொல்லுங்கோளென்கிறாள்

 

English Translation

O Good-natured sakhis! The smoke from the good Vedic seers' sacrifices clouds the sky in Tiruvallaval, Our Lord, -that sweet ambrosia, that fruit, that sugar-candy, -has stolen my well-being.  Alas!  When will my eyes see his radiant form?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain