(3432)

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?

பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,

மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்

நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே.

 

பதவுரை

தோழிமீர்காள்

-

தோழிகளே!

நீர் எம்மை நிச்சலும் நலிந்து என் செய்தீர்

-

நீங்கள் எம்மை எப்போதும் ஹிம்ஸித்து என்ன லாபமடைந்திகோள்!

பச்சிலை நின் கமுகும்

-

பசுத்த இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும்

பலவும்

-

பலாமரங்களும்

தேங்கும்

-

தென்னை மரங்களும்

வாழைகளும்

-

வாழை மரங்களும்

மச்ச அணி மாடங்கள் மீது அணவும்

-

மச்சுகளின் நிரையையுடைய மாடங்களின் மேலே தழைத்துப் பொருந்தும்படியான

தன் திருவல்ல வாழ்

-

குளிர்ந்த திருவல்ல வாழிலே

நஞ்சு அரவு இன் அணைமேல்

-

(ஆச்ரித விரோதிகளின் மேலே) நஞ்சை யுமிழ்கிற அரவாகிய இனிய படுக்கையின்மேலே யளித்திருக்கிற

எம் பிரானது

-

எம் பெருமானுடையதாக ஆய்விட்டது (எதுவென்னில்)

நல்நலம்

-

(எனது) நற்சீவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நீச்சலும்.) தோழிகளே! என்னுடைய நற்சீவன் என் அதீனமாக இருந்தாலன்றோ நீங்கள் கண்டித்துச் சொல்லும் வார்த்தைகளுக்கு நான் செவி சொடுக்க முடியும்; அங்ஙனல்ல காண்மின், பார்க்கப் பார்க்கக் கண்ணும் நெஞ்சும் பிணிப்புண்ணும்படியான பாக்கு மரங்களும் பலா மரங்களும் முதலியவை மச்சணி மாடங்களளவும் ஓங்கி விளங்கப்பெற்ற திருவல்லவாழிகே எழுந்தருளியுள்ள அனந்தநராயிக்கன்றோ என்னுயிர் அதீனமாயற்றது; இனி உங்கள் பேச்சு விலைச்செய்து மளவன்றே என்றாளாயிற்று.

உய்ந்தபிள்ளை யென்கிற அரையர் இசையாடும்போது “பச்சிலை நின்கமுகம், பச்சிலை நீள் பலவும், பச்சிலை நீள் தெங்கும், பச்சிலை நீள் வாழைகளும்” என்று கூட்டிக் கூட்டிப் பாடுவராம்.

திருவல்லவாழில் எம்பெருமான் நின்ற திருக்கோலமேயன்றி சயனத்திற்குக் கோலமன்று; * திருவல்லவாழ்நகருள் நின்றபிரான்* என்று கீழே இரண்டாம் பாட்டிலு மருளிச்செய்துள்ளது. இப்பாட்டில் “திருவல்லவாழ் நச்சரவினணை மேல் நம்பிரான்” என்று சயனத்திருக்கோலமாகக் கூறுகின்றாரென்று நினைக்க வேண்டா; நச்சரவினணை மேல் நம்பிரானென்ற அத்தலாத்து ஸ்திதியைச் சொன்னபடியன்று; எம்பெருமானுடைய பொதுவிசேஷண மிருக்கிறபடி ‘அத்தியூரான்... அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்* என்ற விடம்போல.

 

English Translation

O Sakhis! Why do you hut me thus endlessly?  The Lord who reclines on a hooded snake stands in Tiruvallaval amid fall mansions nestling in the bowers of Betel and Areaca, jackfruit, coconut and plantation.  His well-being alone is our good.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain