(3430)

என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?

பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,

தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்

நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே?

 

பதவுரை

தோழிமீர்காள்

-

தோழிகளே!

நீர் எம்மை தலிந்து

-

நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி

என் செய்தீர்

-

என்ன காரியம் செய்தீர்கள்!

தென்றல்

-

தென்றல் காற்றானது

பொன் திகழ் புள்ளை

-

பொன்போல் விளங்குகிற தாதுகளையுடைய புன்னை மரங்களென்ன

மகிழ்

-

மகிழமரங்களென்ன

புது மாதவி

-

புதிய குருக்கத்திகளென்ன

மீது அணவி

-

ஆகிய இவற்றின் மேலே படிந்து

மணங்கமழும்

-

பரிமளத்தை வீசி உலாவிடமான

திருவல்லவாழ்நகரும்

-

திருவல்லவாழ்ப்பதியிலே

நின்ற பிரான்

-

நிலைபெற்றிருக்கிறஸ்வாமியினுடைய

அடி நீறு

-

ஸ்ரீபாத ரேணுவை

அடியோம் கொண்டு சூடுவது

-

அடியோம் ஸ்வீகரித்து அணிந்து கொள்வது

என்று கொல்

-

என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என்று கொல். தோழிகாள்! என்ப்ரக்ருதியை அறிந்திருக்கிற நீங்கள் எனக்கு ப்ரியமானவற்றைச் சொல்லி என்னைத் தேற்ற வேண்டியது ப்ராப்தமாயிருக்க, என்னைக் கண்டிப்பதிலே ஒருப்பட்டிருப்பதனால் உங்கட்கு என்ன பயனுண்டாகும். உங்கள் வழியிலே நான் மீளப்போகிறேனென்று எண்ணமோ; அது ஒருநாளுமில்லை.திருவல்லவாழ்நகர் சோலைகளிலிருந்து வீசுகின்ற நறுமணம் மிக்க தென்றலானது என்னை அவ்வழியே இழுக்க நான் உங்கள் வழியே வருவதற்கு ப்ரஸந்தியுண்டோ; அத்தலத்துப் பெருமானுடைய பாதாரவிந்த ரேணுவைச் சிரமீது அணியப்பெறவேணுமென்றன்றோ எனக்கு ஆவலிருப்பது; அது பற்றி ஏதேனும் சொல்லவல்லிகோலாகில்- சொல்லுங்கோள்; வீணாக என்னை நலிவது வேண்டா என்றாளாயிற்று.

 

English Translation

O Sakhis, why do you torment me thus?  The Lord stands Tiruvallaval where the soft breeze wafts the fragrance of fresh golden Punnai, Magil and Madavi flowers.  Alas!  when will be carry the dust of his feet on our heads?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain