(3406)

கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்

குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை

வாய்ந்த வழுதி நாடன் மன்னு

குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,

ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்

இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்

ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்

அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே.

 

பதவுரை

கூந்தல்

-

விலக்ஷணமான மயிர் முடியையுடையனான

மலர் மங்கைக்கும்

-

பெரியபிராட்டிக்கும்

மண் மடந்தைக்கும்

-

பூமிப்பிராட்டிக்கும்

குலம் ஆயர் கொழுந்துக்கும்

-

நல்லகுடிப்பிறப்பையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கும்

ஆய்ந்த

-

ஆராய்ந்து அருளிச் செய்த

தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;

உலகில்

-

இவ்வுலகத்திலே

ஏந்து பெரு செல்வத்தர் ஆய்

-

எல்லாரும்கொண்டாடும்படியான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியையுடையராய்க் கொண்டு

கேள்வன் தன்னை

-

நாயனான எம்பெருமான் விஷயமாக

வாய்ந்த வழுதி வனம் நாடன் மன்னுருருகூர் சடகோபன்

-

ஆழ்வார்

குற்றேவல் செய்த

-

அந்தரங்கரைங்கர்ய ரூபமாக

திரு மால் அடியார்களை

-

பகவத்பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை

பூசிக்க

-

ஆராதிக்க

நோற்றார்கள்

-

ஸுக்ருதம் பண்ணினவர்களாவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கூந்தல் மலர்) இத்திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.

பிராட்டியானவள் எம்பெருமானயும் சேதநர்களையும் உபதேசத்தாலே திருத்தப்பார்ப்பள் என்றும்“, உபதேசம் கார்யகரமாகாகவிடில் சேதநனை அருளாலேயும் ஈச்வரனை அழகாலேயும் திருத்தப்பார்ப்பள் என்றும் ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள். அழகாலே ஆச்வரனைத் திருத்தும்போதைக்கு முதல் ஸாமக்ரி கூந்தலாகையாலே ‘கூந்தல் மலர்மங்கை’ என்கிறது.

எம்பெருமான் தான் இடைக்குலத்திலே வந்து பிறந்தவாறே பிராட்டிதானும் இடைக்குலத்திலே வந்துபிறந்த நப்பின்னையென்று பேர்பெற்றளாளாதலால் “குலவாயர் கொழுந்து” என்றது.

திருமாலடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் = திருமாலைப் பூசிப்பதிலுங்காட்டில் அவனடியார்களைப் பூசித்தலே சிறப்பாதலாலும், ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸுக்ருதத்தின் பயனாகவே அது நேரவேண்டுதலாலும் இங்ஙனேயருளிச் செய்யப்பட்டதென்க.

 

English Translation

This decad of the garland of thousand choicest Tamil sngs by Satakopan of fertile Valudi-Pandya kingdom kurugur addresses the Lord who is the consort of Sri, Bhu, and Nila.  Those who can sing it will serve his devotees with great wealth,

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain