(3405)

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்

கோலமில் நரகமும் யானே என்னும்,

கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்

கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,

கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?

கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே.

 

பதவுரை

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்

-

(என் மகளானவள்) அழகிய ஸ்வர்க்கலோகமும் நானிட்ட வழக்கென்கிறாள்

கோலம் இல் நரகமும்யானே என்னும்

-

துக்கமே வடிவெடுத்த நரகமும் நானிட்ட வழக்கென்கிறாள்;

கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்

-

இன்பமயமான மோஷமும் நானிட்டவழக்கென்கிறாள்;

கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்

-

பலபல சரீரங்களைப் பரிக்ரஹிக்கிற ஆத்மாக்களும்  நானிட்ட வழக்கென்கிறாள்;

கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு

-

அழகிய மாலையையுடைய மயிர் முடியையுடைவளான என்மகள் விஷயமாக

கோலம் கொள்தனி முதல் யானே என்னும்

-

விசித்திரகாரியங்களைச் செய்யவல்லதான மூலப்ரக்ருதியம் நானிட்ட வழக்கென்கிறாள்;

(இப்படிச் சொல்லுவதானது)

கோலம் கொள்முகில் வண்ணன் ஏறகொலோ

-

அழகிய காள மேகவண்ணப்பெருமான் வந்து ஆவேசித்தனாலோ?

கோலம் கொள் உலகத்திர்க்கு என் சொல்லுகேன்

-

அழகாக வந்து உட்கார்ந்திருக்கின்ற உங்களுக்கு என்ன சொல்லுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கோலங்கொள்.) ஞானிகளுக்கு நரகத்தோடு சுவர்க்கத்தோடு வாசியில்லை; இரண்டும் அநர்த்தமென்றேயிருப்பார்கள்; அப்படியிருக்க, சுவர்க்கத்திற்கு ‘கோலங்கொள்’ என்றும், நரகத்திற்கு ‘கோலமில்’ என்றும் இங்கு அடைமொழி கொடுத்தது ஏன்? என்னில் உலகத்தாருடைய கருத்தாலே சொல்லுகிறபடி, சுவர்க்கத்தில் மிக்க இன்பமுண்டென்று நினைத்து அதற்கு ஸாதநாநுஷ்டதநுங்களும் பண்tவர்களே உலகர்கள். பெரிய திருமடலில் “அறத்தின்வழி முயன்ற அன்னவர்தாம் கண்டீர்கள் ஆயிரக்கண்வானவர்கோன்” என்று தொடங்கி அருளிச்செய்தது காண்க. சுவர்க்கமும் நரகமும் மீட்டிசல்லாதவைந்தமாநகரும் ஜீவாத்மவர்க்கமுமெல்லாம் எம்பெருமானிட்ட வழக்கொள்கிறது.

கோலங்கொள் தனிமுதல் யானே = ‘தனிமுதல்’ என்று மூலப்ரக்ருதியைச் சொல்லவுமாம்; ஸங்கல்பரூபஜ்ஞானத்தைச் சொல்லவுமாம். *** என்று  கருதி சொன்னபடியே விசித்திர காரியங்களை மூலப்ரக்ருதி விளைவிப்பதனால் ‘கோலங்கொள் தனிமுதல்’ என்று அத்தைச் சொல்லுகிறது. பகவத் ஸங்கல்பமில்லாதபோது அதுதானும் கார்யகரமாகமாட்டாமையாவேல *** என்கிற ஸங்கல்பத்தையும் சொல்லத்தகும்.

 

English Translation

My beautiful coiffured daughter raves, "Beautiful heaven is me.  The ugly hell too is me; the effulgent liberation is me; the beautiful souls are all me, the beautiful first-cause too is me".  Has the cloud-hued Lord taken her?  O Beautiful people of the world, what can I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain