(3403)

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,

உரைக்கின்ற அமரரும் யானே என்னும்

உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,

உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்

உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,

உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்

உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே?

 

பதவுரை

உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை)

முக் கண்பிரான் யானே என்னும்

-

ஈச்வரனாகச் சொல்லப்படுகிற சிவபிரான் நானே யென்கிறாள்.

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்

-

ப்ரஸித்தனான பிரமனும் நானே யென்கிறாள்;

உரைக்கின்ற அமரரும் யானே என்னும்

-

பேசுகின்ற தேவர்களும் யானே யென்கிறாள்;

உரைக்கின்ற அமரர்கோன் யாயே என்னும்

-

ப்ரஸித்தனான தேவேந்திரனும் நானே யென்கிறாள்;

உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்

-

ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்;

(இப்படிச் சொல்லுவதானது)

உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறகொலோ

-

ப்ரஸித்தனான காளமேகவண்ணப் பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?

உரைக்கின்ற உலகத்தீர்க்கு

-

சொல்லுகின்ற சொல்லென்று கேட்கிற நாட்டாரான உங்களுக்கு,

உரைக்கின்ற என் கோமளம் ஒண் நொடிக்கு

-

விலக்ஷணமாகப் பேசுகின்ற எனது அழகிய சிறு பெண்ணைப் பற்றி

உரைக்கின்ற இவை

-

இவள்தான் சொல்லுகின்ற இப்பேச்சுக்களை

என் சொல்லுகேண்

-

என்னவென்று கூறுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உரைக்கின்ற.) முக்கட்பிரான் யானே, திசைமுகன் யானே, அமரரும் யானே, அமரர்கோன் யானே, முனிவரும் யானே என்கிறவிது அத்வைத வாதமன்று; முதல் திருவாய்மொழிதன்னிலே விசிஷ்டடாத்வைத ஸித்தாந்தத்தை நன்குவிளக்கியருளின பரம வைதிகாரகையாலே இவர் அத்வைதவாதம் பண்ண ப்ரஸந்தியில்லை; பட்டர் ஸ்ரீரங்கரானுஸ்வத்திலே *** என்கிற ச்லோகத்தாலே நிஷ்கர்ஷித்த கட்டளை இங்க உணரத்தக்கது. முக்கண்ணன் முதலானாரை நிர்வஹிப்பவன் எம்பெருமானேயன்றவாறு.

திசைமுகன் = கிழக்கு தெற்கு மேற்கு வடக்காகிற நான்கு திசைகளிலும் முகமுடையவன் என்றவாறு, அன்றியே, திசை என்னுஞ்சொல் நான்கு என்கிற எண்ணைக் காட்டிற்றாய் நான்முகன் அன்றவாறுமாம்.

உரைக்கின்ற முகில்வண்ணன் = ‘உரைக்கின்ற’ என்ற அடைமொழி முகிலுக்கும் ஆகலாம்; வார்த்தை சொல்லுவதொரு மேகம்போன்றவளன் என்ற இல்பொருளுவமை.

 

English Translation

The things my tender sapling says! "Speak ye of the three-eyed Lord? He is me; the four-headed Lord is me, the celestials too are me, The Lord of celestials is me; the sages too are but me" Has the cloud-hued Lord taken her? O Talkative people of the world, what can I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain