(3402)

உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்

உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,

உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்

உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,

உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்

உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றன வே.

 

பதவுரை

என்னுடைய பேதை

-

என்னுடைய சிறு பெண்பிள்ளை

எனக்கு உற்றார்கள் ஆரும் இல்லை என்னும்

-

எனக்கு உறவினர் ஒருவருமில்லையென்கிறாள்.

இங்கு எனக்கு உற்றார்கள் எல்லாரும் என்னும்

-

இவ்வுலகில் எனக்கு யாவரும் உறவினர் என்கிறாள்;

உற்றார்களை செய்வேனும் யானே என்னும்

-

(சிலரை) எனக்கு உற்றார்களாம்படி செய்வதும் நானே யென்கிறாள்.

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்

-

(அற்பபலன்களுக்காகக்) கிட்டுமவர்களை (அந்த அற்பபலன்களைக் கொடுத்து அகற்றுவதும் நானே யென்கிறாள்.

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்

-

அநந்யப்ரயோஜநர்களாய்க் கிட்டுமவர்களுக்கு எல்லாவுறவு முறையும் நானேயென்கிறாள்;

(இவள் இப்படிச் சொல்லுவதானது)

உற்றார் இலிமாயன் வந்து ஏறக் கொலோ

-

மதம் முயற்சியால் தன்னைக் கிட்டினாரில்லாத ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமான் வந்து ஆவேசிதத்னாலோ?

உற்று உரைக்கின்ற

-

உள்ளூறக் கண்டு சொல்லும் வார்த்தைகளை

உற்றீர்கட்கு

-

உறவினரானவுங்களுக்கு

யான் என் சொல்லி சொல்லுகேன்

-

நான் என்ன பாசுரத்தையிட்டுச் சொல்லுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உற்றார்கள்.) உற்றார்களெனக்கில்லையாகும் = இதற்குப் பலபடியாகப் பொருள் கூறலாம்; ‘உற்றார்களெனக்கில்லை’ என்றது ‘பகைவர்களுமெனக்கில்லை’ என்றதற்கும் உபலக்ஷணமாகி, *** =ஸமோஹம்  ஸர்வபூதேஷூக மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியாச்சு என்று கீதையிலருளிச் செய்தபடி ஸர்வஸாதாரணன் எம்பெருமான் என்றபடி. அன்றியே என்னோடுண்டான ஸம்பந்தமறிந்து என் பக்கல் நேசிப்பார் ஆருமில்லை என்றதாகவுமாம். பலரும் தேவதாந்தர பஜனம்பண்ணித் தொலைகின்றார்களேயல்லது என்னளவில் வருவார் ஆருமில்லையென்றபடி.

உற்றார்கள் எனக்கு இங்கெல்லாரும் = கீழே உற்றார்களில்லை யென்றது ‘அவர்கள் கருத்தாலே; இது எம்பெருமான்றன் கருத்தாலே சொல்லுகிறது. ‘இராமட மூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்துநோக்கிக்கொண்டு போரும்” என்றும், “கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோன்றாதபடி நின்று ஸத்தையை நோக்கி உடன் கேடனாய்” என்றும் பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்தபடியே எம்பெருமான் எல்லாரையும் உற்றார்களாகவே நினைத்துக் காரியங் செய்கிறபடி அன்றியே எம் பெருமானைவிட்டுத் தேவதாந்தா பஜனம்பண்ணுமவர்களும் = யேப்பந்ய்தேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயாந்விதா: தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதி பூர்வனம். * என்று கீதையருளிச்செய்தபடி எம்பெருமானையே யஜிந்தார்களாகத் தேறுகிறபடியால் அதுதன்னைக் சொல்லுகிறதாகவுமாம்.

உற்றார்களைச் செய்வேனும் யானே = விமுகராய்ப் போருமவர்களையும் வடிவழகு முதலியவற்றைக்காட்டி மடிமாங்காயிட்டுப் பிடித்திழுத்துத் தன் பக்கலிலே அபிமுகர்களாம்படி பண்ணுமவளிறே யெம்பெருமான்.

உற்றார்களையழிப்பேனும் = சிலர்க்கு ருசிக்குத் தக்கவாறு க்ஷுத்ர ப்ரயோஜனங்களைத் தந்து தன் பக்கலில் நின்றும் அகற்றுமவன் எம் பெருமான்.

ஆண்டாள் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்திருந்த இளையபெருமாளென்பார் ஆண்டான் பணித்ததாகக் கூறும்பொருள் ஒன்றுண்டாம்; அதாவது- உற்றார்களையழிக்கையாவது ஸௌந்தர்யம் முதலானவற்றிலே யீடுபடுத்தி * நினைந்து கைந்துள்கரைந்துருகி என்னுமாபோலே அழித்தார்களாகச் செய்தல் என்று.

உற்றார்களுக்கு உற்றேனும் யானே = என்னையே எல்லாவுறவு முறையாகப் பற்றினார் உண்டாகில் யானும் வஅர்களையே எல்லாவுறவு முறையுமாகக் பற்றுவேனென்கை.

 

English Translation

The things my found daughter prates! "I have no friends", she says, then, "All here are my friends', and, "It is who make bonds, It is I who break bonds; even the bond between friends is me" Has the peerless lord possessed her?  O Friendly people of the world, what can I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain