(3400)

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்

திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,

திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்

திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,

திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்

திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?

திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

திறம்பா தென்திரு மகளெய் தினவே?

 

பதவுரை

என் திருமகள்

-

என் செல்வமகளான பராங்குசநாயகி.

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்

-

நீதி தவறாமல் இந்நிலவுலகத்தை நானே காக்கின்றேனென்கிறார்.

திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்

-

சலியாதபடி கோவர்த்தன மலையை நானே யெடுத்தே னென்கிறாள்;

திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும்

-

தப்பாதபடி (தேனுகன் முதலிய) அசுரர்களை நானே கொன்றிட்டேனென்கிறாள்;

அன்னு

-

அக்காலத்தில்

ஐவரை

-

பஞ்ச பாண்டவர்களை

திறம் காட்டி காத்தேனே என்னும்

-

உபாயங்கள் காட்டி நானே ரக்ஷித்தேனென்கிறாள்;

திறம்பாமல்

-

அபயாமொன்று மின்றிக்கே

கடல் கடைந்தேனே என்னும்

-

நானே கடல் கடந்தேனெக்கிறாள்; (இப்படி இவள் வொல்வதானது)

திறம்பாத கடல் வண்ணன் எறகோலொ

-

அடியாரை நோக்குவதில் சலியாதவனும் கடல்கண்ணனுமான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?

திறம்பாத உவகத்தீர்க்கு

-

இச்செய்தியை அவசியம் அறிந்தேதீர வேணுமென்று ஸ்திரமாயிருக்கிற உலகத்தீர்களான உங்களுக்கு (இப்பெண் பிள்ளை)

திறம்பாது எய்தின

-

ஹிதஞ்சொல்லி மீட்கவொண்ணாதபடி அடைந்திருக்கிற தன்மைகளைப் பற்றி

என் சொல்லுவேன்

-

என்ன கென்று சொல்லுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (திறம்பாமல்.) கெடுதலொன்றும் வாராதபடி நிலவுலகத்தைக் காப்பவன் எம்பெருமானே; இந்திரன் பண்டு பசிக்கோபத்தினால் ஏழுநாள் இடைவிடாது மழை பெய்வித்தபோது “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுமழிந்தில வாடிற்றில், வடிவேலு திருவுகிர் நொந்துமில” என்னும்படியே அநாயாமையாகக் கோவர்த்தனமலையைக் கொற்றக்குடையாகத் தாங்கி நின்றவனும் எம்பெருமானே. தேவசுரயுத்தம் நடைபெறும்போதெல்லாம் அசுரர்களை மாய்ப்பவனும் எம்பெருமானே; **•  = க்ருஷ்ணாச்ரயா: க்ருஷ்ணபவா: க்ருஷ்ணநாதாச் ச பாண்டவா:* என்னும்படி பஞ்சபாண்டவர்களை ரக்ஷித்தருளினவனும் எம்பெருமானே; *மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையானும் எம்பெருமானே; உண்மை இங்ஙனமிருக்க, அக்காரியங்களெல்லாம் நானே செய்தேனென்கிறாள் இப்பராங்குச நாயகி; இங்ஙனேசொல்லுவது கடல் வண்ணன் வந்து இவளிடத்து ஆவேசித்ததனாலே போலும். ‘கேட்டல்லது கால்வாங்கோம்’ என்றிருக்கிற உங்களுக்கு நான் எத்தைச் சொல்லுவது?

“ஆழங்காலிலே யிழிந்தார்படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ?” என்பது நம்பிள்ளையீடு.

 

English Translation

My daughter says, "Unfailingly I rule over the Earth! Then showing my might, unfailingly, I lifted the mountain, killed the Asuras, and protected the five!  The ocean too was churned by me!".  Has the ocean-hued Lord taken her?  O Severe people of the world, what can I say.?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain