(3399)

செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்

செய்வானின் றனகளும் யானே என்னும்,

செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்

செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,

செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்

செய்யகம லக்கண்ண னேறக் கொலோ?

செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

செய்ய கனிவா யிளமான் திறத்தே.

 

பதவுரை

(இப்பெண்பிள்ளையானவள்)

செய்கின்ற திதி எல்லாம் யானே என்னும்

-

நிகழ்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;

செய்வான் நின்றனகளும் யானே என்னும்

-

எதிர்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;

செய்து முன் இறந்தவும் வானே என்னும்

-

இறந்தகாலச் செய்கைகளெல்லாமும் யானே யென்கிறாள்;

செய்கை பயன் உண்பேனும் யானே என்னும்

-

செய்கைகளின் பலன் களையனுபவிப்பதும் யானே யென்கிறாள்;

செய்வார்களை செய்வேனும் யானே என்னும்

-

செய்கைகளைச் செய்கின்ற கர்த்தாக்களைப் படைப்பதும் யானே யெனன்கிறாள்; (இவள் இப்படி யெல்லாம் சொல்லுவது)

செய்ய கமலம் கண்ணன் ஏற கொலோ

-

செந்தாமரைக் கண்ணனான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?

செய்ய கனி வாய் இன மான் திறந்து

-

சிவந்தாணிபோன்ற அதரத்தையுடையவளாய் இளமான் போன்றவளான இவள் விஷயத்தில்

செய்ய உலகத்தீர்க்கு

-

கபடமறியாத வுங்களுக்கு

இவை என் சொல்லுகேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (செய்கின்ற கிதி.) நிகழ்ந்தாலும் எதிர்காலம் இறந்தகாலம் என்று காலம் மூவகைப்படும். இம்மூன்று காலங்களிலும் பலபல காரியங்கள் நடந்திருக்கின்றன. கடந்து கொண்டிருக்கின்றன. நடக்கப்போகின்றன; அவையெல்லாம் எம்பெருமானிட்ட வழக்கேயாதலால் அது சொல்லப்பட்டது.

(செய்கைப் பயனுண்பேனும் யானே.) = அஹம் ஹி ஸர்வஜ்ஞாநகரம் போந்தா* என்று கீதையிலருளிச் செய்தபடியே அந்தநட்த கருமங்களாகிற பலனை புஜிப்பவன் (அதாவது, அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கப்படுகிறவன்) எம் பெருமானே.

“செய்கைப்பயன்” என்பதை ஒரு சொல்வடிவமாகக் கொள்ளாமல், செய்கையும், பயனுண்பேனும் என்று பிரித்துக்  கூறுதலுமுண்டு; ஈடு ;- “அன்றிக்கே, செய்கையாகிற க்ரியையும் **•    காவும் நாளிட்ட வழக்கு என்னா நின்றாள்.”

(செய்வார்களைச் செய்வேனும் யானே.) அந்தந்த க்ரியைகளை அனுட்டிக்கின்ற கர்த்தாக்களைப் படைப்பவனும் எம்பெருமானே. இப்படிப்பட்ட எம்பெருமான் நானே யென்று இவன் சொல்லுவது (செய்ய கமலக்கண்ணனேறக் கொலோ) செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ?

(செய்யவுலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்.) ஐயோ! நீங்கள் கள்ளங் கவடு அறியாதவர்களாயிருக்கின்றீர்களே! விஷயப்ராவண்யமடியாக வந்த நோய் எப்படி வெளியிட்டுச் சொல்லத் தகாததோ, அப்படியே பகவத் விஷயப்ராவண்யமடியாக வந்த நோயும் வெளியிட்டுச் சொல்லத்தகாதது என்னுமிடம் நீங்கள் அறியவேண்டாவோ? சொல்லாம். ஆகாது என்று அறியாமே சொல்லு சொல்லென்று அலைக்கிறீர்களே* (செய்ய) கபடமறியாமல் ருஜுவான என்றபடி

 

English Translation

The things my red-lipped daughter says! "All that is being done is me; all that remains undone is me; all that has been done is also me. I enjoy the fruit of all action; motivation too is me".  Has the lotus-eyed Lord possessed her? O Fair people of the world, what can I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain