(3398)

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்

காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,

காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்

காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,

காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்

காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?

காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே.

 

பதவுரை

காண்கின்ற என் காரிகை

-

பகவத் விஷயத்தை உள்ளபடி கண்டு பேசுகிற என் மகள்

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்

-

காணப்படுகிற பூமியெல்லாம் நானேயென்கிறாள்

காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்

-

காணப்படுகிற ஆகாசமெல்லாம் யானே யென்கிறாள்;

காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்

-

காணப்படுகின்ற தேஜ: புஞ்சமும் யானே யென்கிறாள்;

காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும்

-

காணப்படுகின்ற வாயுக்களும் யானே யென்கிறாள்;

காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்

-

காணப்படுகின்ற ஜலதத்துவமெல்லாம் யானே யென்கிறாள்; (இப்படி இவள் சொல்லுவதானது)

காண்கின்ற கடல்வண்ணன் ஏறகொலோ

-

அழகிய கடல்போன்ற வடிவையுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?

செய்கின்ற

-

(இப்பெண் பிள்ளை) செய்கிறவைகளை

காண்கின்ற உலகத்தீர்க்கு

-

இவ்வுலகமல்லது மற்றொன்று காணதவுங்களுக்கு

என் சொல்லுகேன்

-

என்னவென்று எடுத்துக் கூறுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (காண்கின்ற நிலம்.) காணக்கான எல்லை காணாவொண்ணாதபடியிருக்கின்ற பூமியெல்லாம் எம்பெருமானிட்ட வழக்காதலாலும், மற்றும் ஆகாரம் தேஜஸ்ஸுவாயு அப்பு என்கிற பூதங்களும் எம்பெருமாளிட்ட வழக்காதலாலும் இத்தன்மையை யெடுத்துக்கூறி அப்படிப்பட்ட எம்பெருமான் நானே யென்கிறாள் பராங்குசநாயகி. இது கடல் வண்ணனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனால் போலும்.

(காண்கின்ற வுலகத்திற்கு.) “நீங்களும் என்னோடொக்கக் காணாநின்றிகோளாகில் உங்களுக்கு நான் என்ன பாசுரமிட்டுச் சொல்லுவது? உங்களோடு என்னோடு வாசியுண்டோ சொல்லவொண்ணாமைக்கு?” என்பது நம்பிள்ளையிடு. “லோகமொழிய அறியாத உங்களுக்கு என்னென்பதாகச் சொல்லுவேன்” என்பது பன்னீராயிரவுரை.

(காண்கின்ற என் காரிகை.) பிறரால் காணமுடியாததையும் காண்பவராயிற்று ஆழ்வார், “எண்ணாதனகளெண்ணும் நன்முனிவரின்பம் தலைச்சிறப்ப” என்றவிடத்து ஈடு ஸேவிக்க.

 

English Translation

The things my possessed daughter does! She says, "All the Earth is me! All the sky is me, all the fire is me, all the air is me, all the ocean is me!" Has the all-seeing Lord entered her? O Witnesses of the world, what shall I say?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain