(3396)

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்

கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,

கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,

கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,

கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே?

 

பதவுரை

கடல் ஞாலத்து என் மகள்

-

கடல்சூழ்ந்த வுலகத்திலுள்ளவரான எனது பெண்பிள்ளை.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

-

கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் படைத்தவளும் நானேயென்கிறாள்;

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னம்

-

(படைக்கப்பட்ட) கடல் ஞாலத்திலே அநுப்ரவேசித்திருப்பவளும்! நானேயென்கிறாள்;

கடல் ஞானம் கொண்டேனும் யானே என்றும்

-

(மஹாபலியிடத்தில்) கடல் ஞானத்தை இரந்து பெற்றுக் கொண்டவளும் நானே யென்கிறாள்.

கடல் ஞானம் கீண்டேனும் என்னும்

-

(மஹாவரஹமாகிக்) கடல் ஞானத்தை உத்தரித்தகளும் நானே யென்கிறாள்;

கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்

-

(பிரளயத்தில்) கடல் ஞானத்தை உள்ளே வைதபுது நோக்கினவரும் நானே யென்கிறாள்.

கற்கின்ற இவை

-

(இப்பெண்பிள்ளை) இங்ஙனம் பேசுகிற இங்ஙனம் பேசுகிற இப்பேச்சுக்கள்

கடல் ஞாலத்து  நான் வந்து ஏற கொலோ

-

கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குத் தலைவனான பெருமான் வந்து ஆவேசித்ததனாலே!

கடல் ஞானத்தீர்க்கு

-

இவ்வுலகிலுள்ள உங்களுக்கு

என் சொல்லுகேன்

-

என்னவென்று சொல்லுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கடல் ஞாலம்.) கடல் சூழ்ந்த ஞாலம் முழுவதையும் படைத்தவன் பகவானேயாவன்; சந்தோக்யி உபநிஷத்தில் **** = என்று ஓதிக்கிடக்கிறவிடத்தில்** என்றும் அம்மூன்றாலும் மூவகைக் காரணங்களும் எம்பெருமானே யென்கிறது என்று கொள்ளவேணும். வேறொரு உபாதாக வஸ்து இல்லாமல் தானே உபாநதாந காரணபூதனாய், வேறொரு உபாதாந வஸ்து இல்லாமல் தானே உபநதாந காரணபூதனாய், வேறொரு ஸஹகாரி காரணமில்லமல் அதுவும் தானேயாய், வேறொரு நிமித்தகாரணமில்லாமல் அதுவும் தானேயாயிருப்பவன் என்பதையே அந்த உபநிஷத் வாக்கியம் தெரிவிக்கும். இங்கு யானே என்கறி ஏகாரத்தினால் அவ்வர்த்தமே தெரிவிக்கப்பட்டதாகும். மூவகைக் காரணமுமாயிருந்துகொண்டு ப்ரபஞ்சஸ்ருஷ்டியை பண்ணினது நானே யென்கிறாள்.

கடல் ஞானமாவேனும் யானே = உலகத்தில் ஒருவன் ஒரு வஸ்துவைப் படைத்தால் படைத்தவனுடைய பெயர் வேறாய், படைக்கப்பட்ட பொருளின் பெயர் வேறாயிருக்கக் காண்கிறோம். எம்பெருமானளவில் வந்தால் அப்படியன்று; படைக்கப்பட்ட ஒவ்வொரு வஸ்துவினும் தான் அநுப்ரவேசித்தே நாமரூபங்களை உண்டாக்கியிருப்பதனால் அன்வோவஸ்துக்களைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வந்து வலிக்கும்படி அவையாய் நிற்பவனும் தானே யாதலால் கடல் ஞானமாவானும் எம்பெருமானேயாவன். வேதாந்திகள் அபர்யவஸாக  வ்ருத்தியென்பர்; அது இங்கு அறியத்தக்கது. இப்படிக் கடல் சூழ்ந்த வுலகஸ்தவசூபியாயிருப்பதும் நானே யென்கிறாள்.

கடல் ஞாலம் கொண்டேனும் யானே = * தன்னுருவமாரு மறியாமல் தானகிகோர் மன்னும் குறளுருவின்மணியாய் மாவலிதன் பொன்னியலும் வேள்ளிகண்புக்கிருந்து, போர்வேந்தர்மன்னை மணங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யானளப்பமூவடிமண் மன்னா! தரு கென்று வாய்திறப்ப, மற்றவனும் என்னால் தரப்படட் தென்றலுமே, அத்துணைக் கண்மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார்  கனகழற்காலேழுலகும் போய்க்கடந்து அங்கொன்றாவசுரர் துளங்கச் செலநீட்டி மன்னிவ்வகளிடத்தை மாவரியை வஞ்சித்துத் தன்னுலகமார்க்குவித்த தாளாளன் நானேயென்கிறாள்.

கடன் ஞாலங்கீண்டேனும் யானே= பூமிக்கு ரக்ஷகமாகவைத்த கடல்தாரன இத்தையழிக்க அண்டத்தின் முகட்டிலே அழுந்தின விதனை மக்ஷாவராஹமாகி இடந்தெடுத்துக் கொண்டு வந்ததும் நானேயென்கிறாள்.

கடன் ஞாலமுண்டேனும் யானே= சிலர் இருக்கச் சிலர் அழிவையன்றிக்கே ஸ்ருஷ்டிகர்த்தாக்களோடு ஸம்ஹாரகர்த்தாக்களோடுவாசிய எல்லாரையும் பிரளயம் கொள்ளப்புகுந்தபோது, * மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்று மெல்லாம். உண்ணாதபெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கியுய்யக் கொண்ட* என்கிறபடியே வயிற்றிலே வைத்து ரக்ஷித்ததும் நானேயென்கிறாள்.

என் வயிற்றிலேபிறந்த இப்பெண்பிள்ளை இங்ஙனே பேசுவது பொருத்தமற்றதாயிராநின்றது; விசிஷ்டாத்தஸம் ப்ரதாயத்திலே தலைநிற்குமிவள் அத்வைதம் பேசுகிறாளாக வொண்ணாது; பிள்ளை எதனாலே இங்ஙனே போகிறாளென்று தோன்றுகிறதென்று சொல்லுபவளாய்” எடல்ஞாலத்தீசன் வந்து ஏறக்கொலோ” என்கிறாள் தாய்.

வினவவந்தவர்கள், இங்ஙனம் சொன்ன திருத்தாயை நோக்கி ‘அம்மா! உன்னைக்கேட்டுத் தெளிந்து கொள்ள வந்தோம்; உனக்கும் ஒரு நிச்சயவுணர்ச்சி இல்லைபோய் காண்கிறதே, நாங்கள் தெளியும்படி ஆராய்ந்து சொல்லை காதோர்’ என்ன; “கடல் ஞாலத்திற்கு இவையென் சொல்லுகேன் கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றனவே” என்கிறாள். ஸம்ஸாரத்திலேயிருந்து வைத்து நித்யஸூரிகள் யாத்திரையாய்ச் செல்லுகிற என்மகள் படியை, நித்யஸூரிகள் யாத்திரையாய்ச் செல்லுகிற என் மகள்படியை, நித்ய ஸம்ஸாரிகளாய் பகவத் விஷயம் கனாக்கண்டறியாத உங்களுக்கு என் சொல்லுவது என்றவாறு.

 

English Translation

My daughter roams the Earth reciting; "I made this Earth: I am the Earth and the ocean; it was I who took the Earth; it was I who lifted the Earth: it was i who swallowed the Earth". Has the Lord of the Earth and ocean possessed her?  O People of the Earth, how can I make you understand?.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain