nalaeram_logo.jpg
(3391)

நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்

சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,

நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்

நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே.

பதவுரை

இவள் என் குடிக்கு

-

‘இப்பெண்பிள்ளை நம்முடைய ப்ரபந்த ஸந்தானத்திற்கு

சிதைந்த நல்வழி என்று

-

நிலைத்துநிற்கக் கூடிய கொடிய பழியாயிருப்பவள் என்று சொல்லி

அன்னை

-

தாயானவள்

காண கொடான்

-

நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை

சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;

நிறைந்த

-

பரிபூர்ணமான

சோதி வெள்ளம் சூழ்ந்த

-

தேஜஸ்ஸமூஹத்தாலே சூழப்பட்டு

நீண்ட

-

உத்துங்கமான

பொன்மேனியோடும்

-

திருமேணியோடுகூட

என் உள்ளே

-

எனது நெஞ்சுக்குள்ளே

நிறைந்து நின்று ஒழிந்தான்

-

வியாபித்து நின்று விட்டான்;

நேமி

-

திருவாழியும்

அம் கை

-

அழகிய திருக்கையிலே

உனது

-

உள்ளதாயிருக்கின்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நிறைந்த வன்பழி.) கீழ்ப்பாட்டிற்கே ‘நம் குடிக்கு இவள் வன்பழி” என்று சொல்லித் தாய்மார் முனிந்தமை சொல்லிற்கு. “மனங்குற்றமாந்தர் பழிக்கில் புகழ்” என்கிறபடியே பழியையே பரமபோக்யமாகக் கொள்ளுனானாகையாலே, தாய்மார் பழிக்கப் பழிக்க, தலைமகளினுடைய அதிப்ரவ்ருத்தி அதிகரிக்கத் தொடங்கிற்று; அதனால் “நிறைந்த வன்பழி நங்குடிக்கு இவன் என்று பின்னையும் கைநடுக்கி வையத் தொடங்கினால் தாய்; அது கண்டு தலைவி சொல்லுகிறாள்;

“ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து ஈர நெல்வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் யோவர் காதல் கடல் யுரைய விளைவித்த காதமர்மேனி” என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறபடி பழியே விளைநீராகத தன்னிடத்துக் காதலை வளரச் செய்யுமிதுதானே தனக்குச் சிறந்த கீர்த்தியாகப்பெற்ற திருக்குறுங்குடி நம்பியை நான் காண்பதற்கு முன்பே இவர்கள் இங்ஙனே முனிந்தாலும் பயனுள்ளதாம்; காணப்பெற்றபின்பு இவர்களின் முனிவு என் செய்ய?

நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த விலக்ஷணமான திருமேனியழகும், அல்லாத அழகிற்காட்டில் கையும் திருவாழியுமான அழகும் என்னெஞ்சிலே வேர் விழுந்தனவானபின்பு, பழியென்றாலென்? பாவமென்றாலென்? நானோ  சிளைப்பது என்கிறாள்.

*மேலும் வன்பழியென்றும்* நிறைந்த வன்பழியென்றும் தாய்மார் பழியிட்டுரைப்பதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாது? ப்ரபந்தஜந கூடஸ்த்ராகக் கொண்டாடப்படுகின்ற ஆழ்வார் ப்ரபந்ந குலமரியாதை கடவாதேயிருக்கவன்றோ கடமைப்பட்டவர்; பழிப்பதற்கு இடர் தந்து நடக்கலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள். ஆசார்யஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில்- “சூழ்ச்சி அகற்றினீரென்னும்பழி, இணக்கியெங்ஙனே யென்னும் மேலெழுத்து, முன்னின்றாயிவனை நீரேன்னுமிருபடை மெய்க்காட்டு, நீரென்னே யென்னு முடன்பாடு, இøயில்லையென்று முதறுதல் இருந்திருந்து நடந்தாளென்னுங் கொண்டாட்டம் அவஸ்தாத்ரய வ்ருத்தி” என்ற சூர்ணிகையினால் சங்கா பரிஹாரம் பெறுக.

உபாயாயத்யவஸாய தசையென்றும் ப்ராப்பரூசி தசையென்றும் இரண்டு அவஸ்தைகளுண்டு; முந்தின அவஸ்தையில் நின்று பார்க்கும்போது அதிபர் ஸ்ருக்திகள் பழியாய்த் தோற்றும்; பிந்தின அவஸ்தையில் நின்று பார்க்கும்போது அதிப்ரய்ருத்திகள் அவர்ஜநீயமாகையாலே உத்தேச்யமாயிருக்கும். ஆகவே விரோதமில்லையென்றுணர்க.

English Translation

After I saw the Lord of great fame in Tirukkurungudi, his beautiful golden form of exceeding radiance has filled my heart.  He appears everywhere wielding a discus in the beautiful hand.  My mother says, "She is a great scourge on our fair house-hold".

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain