nalaeram_logo.jpg
(3385)

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?,

நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,

சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,

செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே.

பதவுரை

அன்னைமீர்காள்

-

தாய்மார்களே!

நீர்

-

நீங்கள்

என்னை முனிவது

-

என்னை சீறுவது

திருக்குறும் குடி நம்பியை

-

திருக்குறுங்குடிப் பெருமானை

நான் கண்ட பின்

-

நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு

என் நெஞ்சம்

-

என் மனமானது

சங்கினோடும் நேமினோடும்

-

சங்கு சங்கரங்களோடும்

எங்ஙனேயோ

-

எப்படிப் பொருந்தும்?

எங்கள்

-

நாம் அநுபவிப்பதற்குரிய

கோலம்

-

அழகிய

தாமரை கண்களோடும்

-

தாமரைபோன்ற திருக்கண்களோடும்

செம் கனி வாய் ஒன்றினோடும்

-

சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும்

செல்கின்றது

-

நடவாநின்றது. (என்னெஞ்சில் இவையே திகழ்கின்றனவென்றபடி.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (எங்ஙனேயோ) தாய்மார்களே! என்னை நீங்கள்  சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு காமருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ? அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன்? ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று.

திருக்குறுங்குடி = இது பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று. குறுகியவனான வாமனனது க்ஷேத்ரமாதலால் இத்தலத்திற்குக் குறுங்குடியென்று திருநாமமாயிற்றென்பர். இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுள் ஒரு எம்பெருமான் ஸ்ரீபாஷ்யகாரர்  பக்கலிலே திருமண்காப்பு சாத்திக்கொண்டு வேதாந்தார்ததமுங்கேட்டு சிஷ்யனாய் ‘நாமும் நம்பிராமானுசனையுடையோம்’ என் கையாலே அப்பெருமாளுக்கு வைஷ்ணவாம்பியென்று திருநாமம். ஆனது பற்றியே ‘வைஷ்ணவவாமண க்ஷேத்ரம்’ என்றும் இத்தலம் வழங்கப்படும். ஆசார்யஹருதயத்தில், “வைஷ்ணவவாகமத்தில்- நிறைந்த நீலமேனியின் ருசி ஜுக விபவஸாவண்யம் பூர்ணம்” என்றருளிச் செய்தலும், அங்கு மணவாளமா முனிகள் வியாக்கியானத்தில்- “வாமகாவதாரத்தில் தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியானாய்ப்போலே அர்த்தியாம் நின்று பாஷ்யகாரர் பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு சிஷ்யனாய் “நாமும் பமிராமானுசனையுடையோம் என்கையாலே ஸ்ரீவைஷ்ணன் நம்பியென்று திருநாமம். வாமாவதாராம்சமாக புராணஸிதத்தராயிருக்கிற நம்புடைய திருப்பதியென்கை. அன்றிக்கே *அறியச் கற்றுவல்லார் வைட்டணவர் என்று இத் திவ்யதேச விஷயமான திருவாய்மொழியைக் கற்றவர்கள் வைஷ்ணவராவென்கையாலே வைஷ்ணவர்களுடையதாய்  ஸாமாக்ஷேத்ரரமாயிருக்கிற கோத்திலென்னவாம்” என்றருளிச் செய்வதும் இங்கு அனுஸாதேமம். நம்மாழ்வாருடைய திருவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்து நம்பியே.

நேமி- வடசொல், சக்கரத்தின் உறுப்புகளில் ஒன்றைச் சொல்லுவதான இச்சொல் சக்கரத்திற்கு வாசகமானது லக்ஷணையால்.

English Translation

After seeing the beautiful Lord of Tirukkurungudi, my heart yearns for his conch and his discus, his lotus eyes, and his peerless coral lips.  How now, Ladies, that you blame me?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain