nalaeram_logo.jpg
(3376)

நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும்,

ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,

காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,

மாயும் வகையறியேன் வல்வி னையேன் பெண்பிறந்தே.

பதவுரை

நெஞ்சமே

-

மனமே!

நீயும்

-

(எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும்

பாங்கு அல்லை காண்

-

எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை;

நின் இரவும்

-

ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும்

ஓயும் பொழுது இன்றி

-

ஓயுங்காலம் இல்லாமல்

ஊழி ஆய்

-

ஒரு  கல்பமாய் கொண்டு

நீண்டது

-

வளர்ந்து விட்டது;

ஆல்

-

அந்தோ;

காயும்

-

(விரோதிகளைக்) காய்கின்ற

சுடு சிலை

-

கடிய சார்ங்கவில்லையுடைய

என் நாகுந்தன்

-

இராமபிரான்

வாரான்

-

வந்து முகம்காட்டுகின்றவன்;

வல்வினையேன்

-

வலிய பாபத்தையுடையேனான நான்

பெண் பிறந்து

-

பெண்ணாய்ப்பிறந்து

மாயும் வகை அறியேன்?

-

முடியும் வழியை அறிகின்றிலேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நீயும் பாங்கல்லைகாண்) அநிஷ்டங்களைத் தொலைக்கவல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறான். பிராட்டியை அசோகவனத்திலே வைத்தபோது மாயாவியான இராவணன் ‘இராமன் தலையறுப்புண்டு தொலைந்தான்’ என்று தோன்றுமாறு ஒரு மாயா கிரஸ்ஸைக் கொண்டுவந்து பிராட்டிக்குக் காட்டி ‘இதோபார்  ஸீதே! உன் கணவன் தலையறுப்புண்டு ஒழிந்தான்’ என்ன, அது கேட்டுப் பிராட்டி வருந்திக் கிடக்கும் க்ஷணத்திலே இராமபிரான் கடற்கரையிலே நின்று  தனது சார்ங்கவில்லை ஒலிப்பிக்க, அவ்வொலியானது பிராட்டியின் செவியிலே புகுந்து ஆர்வஸிப்பித்ததென்று கேட்டிருந்த பராங்குச நாயகி, அப்படியாகத் தன்னையும் ஆச்வஹிப்பிக்க ஒரு வீரரு செய்தருளவில்லையே! என்ற இன்னாப்புத் தோன்றக் காயுங்கடுஞ்சிலைநும் காகுத்தன் வாரானால் என்கிறான். “சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுநொலோ” என்று ஆண்டாளுடைய நிர்வேதம் இங்கு நினைக்கத்தக்கது.

மாயும் வகையறியேன் = பிராட்டி அசோகவனத்திலே “விஷ *** - விஷஸ்ய  தாதா ஈ ஹி மேஸ்தி கச்சித் க்ஷத்ரஸ்ய வா வேச்மநி ராக்ஷஸஸ்ப” என்று ‘இவ்வரக்கன் மலையிலே என்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கு இத்தனை விஷம் கொடுப்பாரில்லையே; நின்று கொல்லாதே உடனே கொல்லவல்லதொரு கத்திதானும் கொடுப்பாரில்லையே!” என்று துடித்தாப்போலே இவளும் துடிக்கிறாளாயிற்று. பெண் பிறந்தே யென்றது முடியமாட்டாமைக்கு ஹேதுசொன்னபடி “பிறர்க்காக ஜீவிக்கவேண்டும் பாதந்த்ரஜன்மத்திலே பிறக்கைக்கீடான மஹாபாபத்தைப் பண்ணினேன்” என்பது ஈடு.

English Translation

See, you are not with me, O Heart The long night stretches into an aeon.  My Kakutsha Lord wielding the scorching bow does not come.  Sinner, born as a female, I know not how to end my life.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain