nalaeram_logo.jpg
(3372)

யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,

தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,

யாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,

நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.

பதவுரை

யா மடம் இன்றி

-

ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்

தெருவு தோறு

-

வீதிகள் தோறும் புகுந்து

அயல் தைய லார்

-

அயல் பெண்களும்

நாடும்

-

ஸகல லோகமும்

நா மடங்கா பழி தூற்றி

-

நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி

இரைக்க

-

இரைச்சல்  போடும்படி

யாம்

-

நாம்

மடல் ஊர்ந்தும்

-

மடலூர்ந்தாகிலும்

ஆழி அம் கை நம்பிரானுடைய

-

திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய

தூ மடல்

-

பரிசுத்தமான இதழ்களையுடைய

தண் அம் துழாய் மலர்

-

குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை

கொண்டு

-

அவன் தரப்பெற்று

சூடுவோம்

-

தலையில் அணிவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (யாமலூர்ந்தும்.) மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வஸ்வரூபத்தை உறுத்திக்காட்டுகிறபடி. திருவடி அசோகவனத்தில் பிராட்டியை நோக்கி ‘தேவரீர் இவ்வளவு  அல்லல்படுவானேன்? ஒருநொடிப்பொழுதில் அடியேன் தேவரீரைப் பெருமாள் திருவடிவாரத்திலே கொண்டு சேர்க்குமாறு இசைந்தருளலாகாதோ?’ என்று சொல்ல, அதுகேட்ட பிராட்டி *••••••••••••••••••••• ** = சரைஸ் து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தாக:, மாம் நமேயத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய ஸத்ருசம்பவேத் என்றாள். எம்பெருமானுடைய திருவுள்ளப்படியே என்ன ஆகிறதோ அதைப்பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு ஸ்வரூபமேயன்றி நாமாக ஒரு அதிப்ரவ்ருத்தி செய்யத்தகாது என்பது இப்பிராட்டிவசனத்தினால் சிக்ஷிக்கப்பட்டதாகிறது.  இப்படி யிருக்க வேண்டிய ஸ்வரூபத்தையுடையேவ்யான் என்று காட்டுகிறபடி. ஆனாலும் பதறாதிருக்க முடியவில்லை யென்கிறாள் மடலூர்ந்தும் என்பதனால். மடலூர்தல் என்பதற்குத் தமிழர்கள் சொல்லுகிறபடி பனை மட்டையைக் கையிலே கொள்ளுதல் முதலான காரியங்கள் இங்கு விவக்ஷிதமல்ல; ஸாஹஸமாக அதிப்ரவ்ருத்திகளைச் செய்தாகிலும் என்றபடி. அதாவது தன்னுடைய பதற்றத்தைக் காட்டுதல்.

எம்மொழியங்கைப் பிரானுடைய என்ற விடத்திலே நம்பிள்ளை யீடுகாண்பீன்; “அவன் கையுந்திருவாழியும் போலேயன்றோ நாள் கையும் மடலுமாய்ப் புறப்பட்டாயிருப்பது. நான்  கையும் மடலுமாகப் புறப்பட்டால் அஞ்சி எதிரே வந்து தன் கையில் ஆபரணத்தை வாங்கி என்கையிலேயிட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே விட்டானாகில் குடியிருக்கிறான்; இல்லையாகில் எல்லாம் இல்லையாகிறது.”

எம்பெருமான் பக்கலில் தான் பெற நினைப்பது திருத்துழாய் ப்ரஸாத மந்தனையே யென்பது தோன்ற இரண்டாமடியுள்ளது. மூன்றாமடியில் “யாம், மிடமின்றி” என்று பிரித்துப் பொருள் காட்டப்படுகிறது ஒன்பதினாயிரப்படியில், “யாமடமென்றது ஏதேனுமொரு மடப்பமுமென்றயடி” என்பர் பன்னீராயிரவுரைகாரர்.

ஈற்றடியிலும், ‘நா, மடங்கா’ என்றும், ‘நாம் அடங்கா’ என்றும் கொள்வர். மடங்குகளாவது ஓய்தல்; நாக்கு ஓயாதே சொல்லும் பழிமொழி யென்க.

English Translation

After we have ridden the Palymyra stalk through every street, -without feminine grace, making women speak unspeakable slander, while the world raves, -we shall wear the Tulasi flowers from the discus Lord to soothe us.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain