nalaeram_logo.jpg
(3371)

நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,

சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை,

ஆணையென்? தோழீ! உலகு தோறலர் தூற்றி,ஆம்

கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே.

பதவுரை

என் தோழி

-

எனது தோழியே!,

என்னை

-

என்பக்கலில் நின்றும்

நாணும்

-

நாணத்தையும்

நிறையும்

-

அடக்கத்தையும்

கவர்ந்து

-

கொள்ளை கொண்டு

நல் நெஞ்சம் கூய்க்கொண்டு

-

(எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு

சேண் உயர் நாளத்து இருக்கும்

-

மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற

தேவபிரான் தன்னை

-

நிதய் ஸூரிநாதனை

உலகு தோறு

-

ஒவ்வொருவலகத்திலும்

அவர் தூற்றி

-

பழிதூற்றி

ஆம் கோணைகள் செய்து

-

செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து

கு திரி ஆய்

-

அடங்காத பெண்ணாய்

மடல் ஊர்தும்

-

மடலூரக் கடவோம்;

ஆணை

-

இது திண்ணம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நாணு நிறையும்) என்பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளைகொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை ஸகலலோகமும் பழிக்கும்படி மடலூரக்கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.

வாசல்விட்டுப் புறப்படமாட்டாதிருக்குமிருப்பு நாண்; நெஞ்சினுள்ளேயோடுவது தாய்மார்க்கும் சொல்லவொண்ணாகபடியிருக்குமடக்கம் நிறை;, இவ்விரண்டையும் கொள்ளைகொண்டானென்றது அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தானென்றபடி. நெஞ்சாவது ஸ்வாதீகமாக இருந்தால் குறையில்லையே, அதனையும் தன்பக்கலிலே கொடித்துக் கொண்டவை சொல்லிற்று நன்னெஞ்சம்  கூவிக்கொண்டு என்றதனால்,“முயற்சி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சு” என்கிறபடியே தன்னிற்காட்டிலும் அவன் விஷயத்திலே  ஊற்றம் முற்பட்டிருக்கையாகிற நன்மையை நோக்கி நன்னெஞ்சம் என்றது.

சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான் தன்னை = கீழே “என்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு அலைகடற் பள்ளியம்மானை” என்று திருப்பாற்கடலிலே சென்று ஒளிந்துக் கிடந்ததாகக் சொல்லிற்று. இப்போதிங்கு ஸ்ரீவைகுண்டத்திலே போய் இருப்பதாகச் சொல்லுகிறது; கடலிலே கிடந்தால் பதற்றத்தினால் திரைமேலே அடியிட்டு கையும் மடலுமாய் க்ஷீரஸாநகரத்திலே இவள் வந்து நிற்கவுங்கூடும் என்று நினைத்து எட்டா நிலத்திலே போய் இருந்தாள்போலும் அவன் எங்குச் சென்றால்தானென்ன? “ஊராதொழியேலுலகறியவொண்ணுதவீர்’ என்று சபதஞ் செய்துகிடக்கிற எனக்குத் தப்பிப் பிழைக்கவொண்ணுமோ அவனால்? தோழி! நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் கேள்; அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என் கையிலே படப்புகுகிறபாடு பாராய்; இருந்தவிடத்தே இருக்க வொட்டுவேனென்றிருக்கிறாயோ? உலகமெங்கும் புக்குப் பழிதூற்றி அழிக்கக்கடவேன். என்னை ஊரார் பழி சொல்லும்படி பண்ணின அவனை லோகமாகப் பழி சொல்லும்படி நான் பண்ணக்கடவேன் என்கிறாள்.

கோணை- மீறுக்கு; ஆம் கோணை = எவ்வெவ்விதமாக மிறுக்குகள் செய்யமுடியுமோ அவ்வவ்விதமெல்லாம் செய்வேனென்கிறாள். குதிரி- நாணப்பெண், அடங்காப்பெண். ** (குஸ்த்ரீ) என்னும்  வடசொல் குதிரியெனத் திரிந்ததென்னலாம்.

English Translation

The Lord stole my shame and called my heart unto him. He resides with celestials in high heaven.  By him, I swear, let the world heap slander, acting unbridled, I shall ride the Palmyra stalk and commit the Madal.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain