nalaeram_logo.jpg
(3367)

கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட

அடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்

கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,

துடிகொ ளிடைமடத் தோழீ! அன்னையென் செய்யுமே?

பதவுரை

கடியன்

-

தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்

நெடியமால்

-

போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;

உலகம் கொண்ட அடியன்

-

உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்;

அறிவு அருமேனி மாயத்தான்

-

நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;

கொடியன்

-

அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;

ஆகிலும்

-

இங்ஙனே யானாலும்

கொடிய என் நெஞ்சம்

-

கொடிதான என்னுடைய மனமானது

அவனே என்று கிடக்கும்

-

அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது;

எல்லே

-

என்னே!

துடிகொள் இடை

-

உடுக்கை போன்ற இடையையும்

மடம்

-

மடப்பத்தையுமுடைய

தோழீ

-

தோழியே!

அன்னை

-

என் தாய்

என் செய்யும்

-

என்ன செய்யக்கூடும்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கடியன் கொடியன்) தோழி! நான் சொல்லுகிறபடியே எம்பெருமான் குணசாலியாகவன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குணஹீநனானாலும் என்னெஞ்சம் அவனையல்லது அறியாது; இவ்விஷயத்தில் நின்றும் என்னை மீட்கைக்காகவன்றோ நீ அவனை குண ஹீந னென்பது; குணஹாநியையிட்டே நான் அவனை விரும்பி மேல்விழுகிறேனாகக் கொள்ளாய்; ஆகவே உன்னுடைய சொல்லுக்கு ஒரு ப்ரயோஜனமில்லைகாண் என்கிறாள்.

கடியன் = ஸ்வகார்யத்திலே எனவேக முடையவன் என்கை. தனக்கொரு காரியமுண்டானால் தானே வந்து மேல்விழுந்து சடக்கெனக் கலக்குமவன் என்றபடி. கொடியன் = இத்தலையில் நோபுபாராதே பிரியுமவன் என்கை. நெடியமால்- மிகவும் பெரியவன்; அதாவது- கைபுகுந்திருக்கச் செய்தேயும் அளவிட வொண்ணாதபடி யிருக்குமவன் என்கை. இதனுடைய கருத்தாவது- மேல்விழுந்து கலவா நிற்கச் செய்தே பிரியவேணுமென்று நினைப்பன்; அப்படி அவன் நினைத்ததையறிந்து, பிரியலாகாதென்று மடிபிடித்துக் கால்கட்டி விலக்கப்பார்க்கலாமே; அப்படி விலக்குவதற்குக் கூசிநடுங்கி அஞ்சியிருக்கவேண்டும்படி திடீரென்று பரத்வம் பாராட்டியிருப்பவனென்றவாறு.

உலகங் கொண்டவடிவன் = பிறருடைமையைத் தனக்காக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் சேஷியாதபடிபண்ணி அவர்களைப் பாதாளத்தில் தள்ளுமவன்.

அறிவருமேனி மாயத்தன் = வடிவைக்கண்டால் ‘ஸர்வஸ்வதானம் பண்ணவிருக்கிறானோ? ஸர்வஸ்வாபஹாரம் பண்ணவிருக்கிறானோ? என்று தெரியாதபடி ஆச்சரியமான தன்மையையுடையவள். மாயத்தன் என்பதற்கு நம்பிள்ளையீடு;- “நானும் என்னுடைய நீ யீட்டவழக்கு என்ற இவ்வுக்தியை அநுஸந்தித்து அதிலே நெஞ்சு அபஹ்ருதமாயிருக்க, அவ்வளவிலே கண்ணிலே மணலைத்தூவி அகலவல்லவன்” என்பதாம்.

இப்படிப்பட்ட குணஹாநிகளைக் கோடிக்கணக்காகச் சொல்லவேணுமானாலும் நானன்றோ சொல்லவல்லேன்; தோழீ! இவை உன்னாலும் சொல்லப்போகாது; இதற்கென்றே இட்டுப்பிறந்த சிசுபாலாதிகளாலும் சொல்லப்போதாது; இவ்வளவு குணஹாநிகளையும் நான் அறிந்துவைத்தேயன்றோ இவ்விஷயத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறது. ஆகிலும் என்றதனால் ஏற்படுகிற கருத்து இது.

கொடிய என்னெஞ்சம் = லோகவிலக்ஷணமாயன்றோ என்னுடைய நெஞ்சு இருப்பது, குணம்கண்டு பற்றுவதும், குணஹாநிகண்டு கைவிடுவதும் நாட்டார் படியாயிருக்க, குணஹாநிதானே பற்றுகைக்கு உடலாயன்றோ எனக்கிருக்கிறது என்கிறாள்.

அவனென்றே கிடக்கும் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் நிர்வஹிப்பர்கள். இவை தோஷங்களே யானாலும் அவனுடைய தோஷங்களாகையாலே தத்ஸம்பந்தத்தையிட்டு இவை நமக்கு உபாதேயங்களே யென்று நெஞ்சு கொள்ளுவதாக ஒரு நிர்வாஹம், கீழ்ச்சொன்ன குணஹாரிகளில் நோக்கு இன்றிக்கு தர்மியான எம்பெருமானை மாத்திரமே என்னெஞ்சு பற்றியிருக்கின்றது- என்பதாக மற்றொரு நிர்வாகம். “நிர்விசேஷ சிங்மாத்ரம் ப்ரஹ்ம” என்று மாயாவாதிகள் விசேஷணமற்ற விசேஷ்யாம்„த்தை மாத்திரமே அங்கீகரிக்கிறாப்போலே, குணமோ குணஹாநியோ அந்த விசேஷணாம்„த்தில் தாத்பர்ய மின்றிக்கே விசேஷ்யபூசனான எம்பெருமானளவிலே ஊன்றியிருக்கின்றதாகச் சொன்னபடி.

ஸ்ரீவசநபூஷணத்தில்- “பகவத் விஷயத்தில் இழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூபப்ராப்தமென்று. இப்படி கொள்ளாதபோது குணஹீநமென்று நினைத்த தசையில் பகவத் விஷயப்ரவ்ருத்தியும் தோஷாது ஸந்தாநதசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியும் கூடாது. * கொடியேவென்னெஞ்ச மவனென்றே கிடக்கும். *அடியேன் நான் பின்னுமுன்சேவடியன்றி நயவன். * என்னா நின்றார்களிறே. குணக்குதஷாஸ்த்திலுங் காட்டில் ஸ்வரூபப்ரயுக்தமான டிரஸ்யபிதே ப்ரதாநம். அநஸூயைக்குப் பிராட்டியருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.” என்றுள்ள திவ்ய ஸூக்திகள் இங்கே அநுஸந்தேயங்கள்.

தலைவி சொன்ன வார்த்தையைக் கேட்ட தோழியானவள் “அம்மா! நீ சொல்லுவதை நான் அறியேனோ? நான் விலக்குகிறேனல்லேன்; தாயார் வெறுக்கும் என்று சொல்லுகிறேன்” என்ன; அன்னை என்செய்யுமே என்கிறாள்;- உன் வார்த்தை கேளாதநானோ தாயார் வார்த்தை கேட்பேன்? அந்நிலை கழிந்ததில்லையோ வென்கிறாள்.

English Translation

O Sister! You have a slender waist, but a frail heart!  May be the Lord is selfish, wicked and tar away.  May be he is a world-grabber and hard to understand.  Pity, my wicked heart still longs for him alone, what can Mother do?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain