nalaeram_logo.jpg
(3366)

ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,

ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,

பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,

காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே.

பதவுரை

தோழீ

-

தோழியே!

ஊரவர்

-

ஊராருடைய

கவ்வை

-

பழமொழிகளை

எரு இட்டு

-

எரவாக இட்டு

அன்னை சொல் நீர் படுத்து

-

தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி

ஈரம் நெல் வித்தி

-

ஆசையாகிற நெல்லை விதைத்து

முளைத்த

-

முளைப்பித்த

நெஞ்சம் பெரு செயுள்

-

நெஞ்சாகிற பெரிய வயலிலே

பேர் அமர் காதல்

-

பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை

கடல் புரைய

-

கடல்போலே அபரிச்சிந்நமாக

விளைவித்த

-

பலிக்கும்படிபண்ணின

கார் அமர் மேனி

-

கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய

அடியனே

-

கடியனோ? (கடியனல்லன்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஊரவர்கவ்வை) தோழியானவள் தலைவியை நோக்கி, ‘அம்மா! ஊரவர் சொல்லும் பழிமொழிகளைநாம் பொருள் படுத்தமாலிருப்பதும் நன்றுதான்; ஆனால் எம்பெருமானால் உனக்கு ஏதேனும் லாபமுண்டாயிருந்தால் ‘ஊரவர் கவ்வை கிடக்கட்டும்’ என்றிருக்கலாம்: எம்பெருமானோ உன்னை ஒரு சக்கக்காகவும் மதிக்கவில்லை; ஊரார் பழி சொல்வதொன்றுதானே மிகுகிறது; ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனான அவனை விட்டிடதலே நலம்’ என்று சொன்னாள். அது கேட்டதலைவி, “தோழீ நீ சொல்லும் வார்த்தையா இது? நன்று சொன்னாய்; எம்பெருமான் எனக்கு என்ன குறை செய்தான், சொல்லிக்காண்” என்றாள். அதற்குத் தோழியானவள் “அம்மா! ஊரவர் எவ்வளவு பழமொழிகள் சொல்லிலும் அவற்றை லக்ஷியம் பண்ணாதபடியான ப்ராவண்யம் உனக்கு இருக்கச் செய்தேயும் இந்நிலையிலும் அவள் வந்து உனக்கு முகங்காட்டவில்லையே! இதைவிட வேறு என்ன குறைவேணும்” என்றாள். அதற்குத் தலைவி ‘அவன் இப்போது வந்து முகங்காட்டாவிட்டாலும்,  தன்னையொழிய நமக்கு மற்றொன்றால் பொருந்தாதபடி பண்ணினானே! அவனையா பொல்லாதவனென்று சொல்லுகிறது? என்கிறாள்.

எம்பெருமான் இப்பராங்குச நாயகிக்கு ப்ரேமத்தை விளைவித்தவாறு இப்பாட்டில் விசதமாகச் சொல்லப்படுகிறது. (ஊரவர் கவ்வை எருவிட்டு) ஒரு வயலிலே பயிர் செழிபுற்றோங்கி விளங்கவேணுமானால் முன்னம் நல்ல எருவிடவேணும்; தண்ணீர் பாய்ச்சவேணும்; நெல் விதைக்கவேணும்; இத்தனை செய்தால் அது முளைத்துச் செழிப்பான பயிராய் வளர்ந்து விளங்கும். அதுபோல இங்கு ஆழ்வாருடைய நெஞ்சாகிற பெரிய வயலுன் காதலாகிய பயிர் நன்கு வளர்வதற்கு *பத்தியுழவனென்று ப்ரஸித்தனான எம்பெருமான் செய்த காரியங்கள் இதில் ரூபகமரியாதையிலே கூறப்படுகின்றன.

பகவத் விஷயத்தில் அத்வேஷமுண்டான காலமே தொடங்கி ஊரார் பழிசொல்லத் தொடங்கினார்கள். அந்தப் பழியையே ப்ரேமத்திற்கு எருவாக இட்டான் எம்பெருமான். ஊரார் பழிக்கப் பழிக்க, அதுவே காரணமாக ப்ரேமம் வளரத் தொடங்கிற்றென்படி. ஊரார் பழிசொல்லா திருந்தார்களாகில் இத்தலைவி பகவத் விஷயத்தை உபேக்ஷித்திருப்பன போலும். “எனக் குற்றசெல்வ மிராமானுசனென்றிசையகில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ்” என்ற இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

அன்னை சொல் நீர்படுத்து = ஊரவர் பழிச்சொல்வதுகொண்டே  இவ்வளுடைய பகவத் விஷய ப்ராவண்யத்தைத் தாயாரும் அறிந்து ஹிதவசனங்கள் சொல்ல ஆரம்பித்தால்; அந்த ஹிதவசனமே தண்ணீர் பாய்ச்சினபடியாயிற்று. எருவாவது அடியிலே ஒருகாலே யிட்டுவிடுவது; நீர் மாறாமல் பாய்ச்சப்படுவது; இத்தால், ஊரார் ஒருகால் பழிசொல்லி விடுமித்தனை; தாயார் உடனிருந்து எப்போதும் பொடிந்துகொண்டே யிருப்பவள் என்பது பெறப்படும்.

ஈரநெல் வித்தி = ஈரமென்று அன்புக்குப் பெயர்; அன்பாகிற நெல்லை விதைத்து என்றபடி. விதைத்தவன் எம்பெருமானென்க.

முளைந்த நெஞ்சப் பெருஞ்சேயு = இங்கு ‘முளைத்த’ என்றதை ‘முளைப்பித்த’ என்றதாகக் கொள்ளவேணுமென்று நம்பிள்ளை திருவுள்ளம். எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்குமிடத்தும் அவனருள் இன்றியமையாததாகையாலே இங்ஙனே கொள்ளத் தகுதியுண்டு. (நெஞ்சப் பெருஞ்செயுள்) செய் என்று பயிர் விளையும் நிலத்திற்குப் பெயர்; ‘பெருஞ்செயுள்’ என்று பெருமையையிட்டு விசேஷித்ததற்கு நம்பிள்ளையருளிச் செய்தது காணீர்- “ஸம்ச்லேவிச்லேஷங்களாலே புடைபடுத்தி நித்யவிபூதியோபாதி பரப்புடைத்தாம்படி பெருக்கினானாயிற்று” என்று.

ஆக, ஊராரலராகிற எருவையிட்டு, தாயாருடைய நிரந்தரஹிதவானமாகிற நீரை நிறுத்தி ஆசையாகிற நெல்லை வித்தி முளைப்பிதத் நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே, பேரமர்காதலை கடல்போல் விளைவித்தானாயிற்று. பேர்- பெரியதாய், அமர்- அர்ந்ததான, காதல் என்று பொருள். அமர் என்று பூசலுக்குப் பெயராகக் கொண்டால் பெரிதான பூசலை விளைத்த காதல் என்று கொள்ளலாம். இப்பொருளில் “பேரமர்க்காதல்” என்று ககரவொற்று மிக்குப் பாடமிருக்கவேணும். அமர்ந்த காதல் என்னும் பொருளிற் வினைத்தொகையாலே இயல்பாம்.

விளைவித்த காரமர்மேனி = அடியிலே எருவுமிட்டு நீரும் பாய்ச்சினாலும் மேலே மழை பெய்தல் இல்லையாகில் அப்பயிர் தலை குளிர்ந்திராதே; காளமேகத் திருவுருவைக் காட்டிக்காட்டி இக்காதலை வளர்த்திக்கொண்டு போனானென்பது தோன்ற “விளைவித்த காரமர்மேனி” என்றது.

தோழீ! நம் கண்ணன் கடியனே? = இவ்வளவு மஹோபகாரம் செய்தருளினவனையே கடியனென்பது. நீதான் தோழியாயிருந்து வைத்து இங்ஙனே சொல்லத்தருகுமோ? நீர்மையையுடையவன் என்று சொல்லி முதலிலே பொருந்தவிட்ட நீயே இப்போது நிர்த்தயன் என்னத் தகுமோ? என்கிறாள்.

திருவள்ளுவர் குறளில் “ஊரவர் கவ்வை யெருவாக அன்னை சொல் நீராக நீளுயிந்தோய்” என்றொரு குறள் உள்ளது காண்க. கௌவை எனினும் கவ்வை எனினும் ஒக்கும்.

ஆசார்யஹ்ருதயத்தில் “பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய்” என்கிற ஆச்சரியமான சூர்ணிகை இப்பாசுரத்தையே முக்கிய லக்ஷிமியாகக் கொண்டு அவதரித்தமையுணர்க.

English Translation

Sister! The dark-cloud Lord planted seeds of love in my heart.  The world's gossip made good manure; my Mother's words poured water over the fields.  Now my passion swells like the sea. Tell me, is our Krishna mean?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain