nalaeram_logo.jpg
(3364)

என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை,

என்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,

முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,

என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே.

பதவுரை

என் செய்ய தாமரை கண்ணன்

-

சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்

என்னை

-

என்னுடைய

நிறை

-

அடக்கத்தை

கொண்டான்

-

கொள்ளை கொண்டான்; (அதனாலே)

முன்

-

முதன் முதலாக

செய்ய மாமை இழந்து

-

விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று

மேனி மெலிவு எய்தி

-

சரீரமும் மெலிந்து

என் செய்ய வாயும்

-

எனது சிவந்தவாயும்

கரு கண்ணும்

-

கறுத்தகண்ணும்

பயப்பு ஊர்ந்து

-

பாலை நிறம் படரப் பெற்றன.

தோழீ

-

தோழியே!

இனி

-

இந்நிலைமையானபின்பு

நம்மை

-

நம் விஷயத்திலே

ஊரவர் கவ்வை

-

ஊராருடைய பழிமொழி

என் செய்யும்

-

என்ன பண்ணும்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என்செய்யும்.) கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.

என்செய்யுமூரவர்கவ்வை தோழி! இனிநம்மை என்று தன் வடிவைக் காட்டுகிறாள்போலும். இனி என்கிறாயே, இதற்கு என்ன அர்த்தம்? என்ற கேட்க, மேல்மூன்றடிகளும் அவ்வர்த்தம் கூறுவன. தோழீ! நான் இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே என்னை நீ இதில் நின்றும் மீட்டிருக்கலாமாயிற்று; எல்லை நடந்து விட்டதே யென்கிறாள்.

“இனி என்னை” என்னாதே “இனி நம்மை” என்கிறது தோழியையும் தன்னோடு கூட்டிக்கொண்டு. நிறவேறுபாடு தனக்குப்போலவே அவளுக்குமுள்ளதென்று இத்தால் கட்டப்பட்டதாகும். “யாமுடைந்துணையென்னுந் தோழிமாரும் எம்மில்முன் அவனுக்கு மாய்வராலோ” என்றது இங்கே அநுஸந்தேயம். தோழியானவள் ‘மடலெடுக்க வேண்டா’ என்று வாயாலே நிஷேதிக்கிறாளேயல்லது மடலெடுக்க வேண்டும்படியான நிலமை அவளுக்கும் உள்ளதேயென்று காட்டுதற்கே நம்மை’ என்றது.

என் செய்யத் தாமரைக்கண்ணன் என்னை நிறைகொண்டான் = எம்பெருமான் தனது திருக்கண்ணாலே குளிரநோக்கி என்னை ஸ்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறாள். அவனது திருக்கண்ணழகிலே தோற்று நிறையிழந்த நான். ஊரவர் சொல்லும் பூமியைப் பரிஹரிக்கு மெல்லையிலே நிற்கிறேனோ?

நிறைகொள்ளுகையாவது- நாண் மடம் அச்சம் முதலிய ஸ்த்ரீத்வருகுணங்களை இழக்கச் செய்கை. ‘நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப்போக வேண்டியது தவிரவேறில்லை’ என்றிருந்த என்னுடைய ஸ்த்ரீத்வத்தை *** என்னலாம்படியான ஒரு புருஷோத்தமன் புண்டரீகாயனத்தைக் காட்டிக் கொள்ளை கொண்டுபோய் விட்டனென்கிறாள்.

நிறைகொண்டான் என்று ஸமுதாயமாகச் சொன்னதை மற்றையிரண்டிகளால் விவரிக்கின்றாள். * முந்நுறமுள்ளம் மாமை யிழந்தேன். (மாமை - மேனிநிறம்.) இழந்த நிறம் திரும்பிவந்தாலும் தங்குகைக்கு ஆச்ரயமில்லாதபடி மேனி சருகாகப்பெற்றேன்; கலக்கிறபோது ‘இதொரு செய்யவாய் இருந்தபடி என்!’ இது ஒரு கருங்கண் இருந்தபடி என்! என்று அவன் வாய்வெருவும்படியிருந்த வாயும் கண்ணும் விவர்ணமாகப் பெற்றேன்! இத்தகைய நிலைமையான பின்பு ஊரார்பழி பரிஹரிக்கையென்றோ பொருளுண்டோ?

English Translation

Sister! My red-lotus-eyed Lord has possessed me.  I have lost the red in my cheeks, my frame has waned, my red lips and dark eyes have lost their colour.  Now what can the world's gossip do to us?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain