nalaeram_logo.jpg
(3347)

அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்யானார்,

எம்மா பாவியர்க்கும்வி திவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,

கைம்மா துன்பொழித்தாய் என்றுகைதலை பூசலிட்டே,

மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே.

பதவுரை

ஆழி பிரான் அம்மான் அவன்

-

திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான்

எளவிடத்தான்

-

எவ்வளவு பெரியவன்!

யான் ஆர்

-

நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க)

கைம்மா துன்பு ஒழித்தாய் என்று

-

கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று

கை தலை பூசல் இட்டே

-

சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ணி

மெய் மால் ஆய் ஒழிந்தேன்

-

ருஜுவான பிரேமமுடையவனாக ஆய்விட்டேன்!

எம் பிரானும்

-

ஸர்வேசுவரனும்

என் மேலான்

-

என் மீது அன்பு பூண்டவனாயினான்; (ஆதலால்)

எம்மா பாவியர்க்கும்

-

எவ்வளவோ மஹாபாபிகளானவர்களுக்கும்.

விதி வாய்க்கின்ற

-

தப்பவொண்ணாத  அருளாகிற விதி வலிப்பதாமளவில்

வாய்க்கும் கண்டீல்

-

பலித்தேவிடும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அம்மானாழிப்பிரான்) தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தியுண்டு! என்று பிற்காலிக்கவேண்டியிருக்கச் செய்தேயும் அவனுடைய க்ருபாரஸம் கரையழியப் பெருகினபடியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார்.

ஆழிப்பிரான் என்பதற்கு- திருவாழியாழ்வானைக் கையிலேந்திய பெருமாள் என்றும், திருப்பாற்கடலிலே பள்ளிகொண்ட பரமபுருஷன் என்றும் பொருள் கொள்ளலாம். எவ்விடத்தான் என்றது- அவனுடைய பெருமை எப்படிப்பட்டது. வாசாமகோசரமன்றோ என்றபடி. யானார் என்றது- என்னுடைய தாழ்வு பேச்சுக்கு நிலமோ என்றபடி. ஆக முதலடியினால்- எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலையிட்டாராயிற்று.

ஆனாலும் ஒரு குறையில்லையென்கிறார் இரண்டாமடியினால் எல்லா வழியாலும் மஹாபாவங்களைப் பண்ணினவர்கள் திறத்திலும் எம்பெருமானுடைய பரமக்ருபை பெருகப்புக்கால் தடையுண்டோ என்கிறார்.

பெரும்பாலும் இப்பாசுரத்தைத் திருவுள்ளத்திற்கொண்டே வேதாந்த தேசிகள் தயாசதகத்தில் ******************** = நிஷர்தாநாம் நேதா கபிருலபதி: காபி சபரீ குசேல: ரூப்ஜா ஸா வ்ரஜயுவதையோ மால்யக்ருதிதி, அமீஷாம் நிம்நத்வம் வ்ருஷகிரிபதேருந்நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதேயரே ப்ரபை  மநுகம்பே! ஸமபஹி· என்கிற ச்லோகத்தை அருளிச் செய்தார். குஹப்பெருமாள். ஸுக்ரீவமஹாராஜர், சபரீ, குலேசலர், கூனி, இடைச்சிகள், மாலாகாரர் என்று இப்படிப்பட்டவர்களின் தாழ்வும் எம் பெருமானுடைய மேன்மையும் நிரவி ஒரு ஸமமாகக் கலந்து பரிமாறினபடி புராணங்களிலுள்ளது; மேடும் பள்ளமுமான நிலத்திலே பெருவெள்ளம் பெருகினால் மேடுபள்ளங்கள் நீங்கி ஸமநிலைமாக ஆகும்படியைக் காணாநின்றோம். அவ்வண்ணமாகவே அருள் வெள்ளம் பெருகியதனாலே எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்பட்டதாகிறதென்றவாறு.

கைம்மாழதுன் பொழித்தாயென்று = தன் பெருமேன்மை பாராதே நீசர் திறத்திலும் வந்து தன்னைத் தாழவிட்டுக் கொடுக்கும் சீலம் எம்பெருமானுக்கு உண்டெண்பது கஜேந்திராழ்வானை ரக்ஷித்த சரிகையிலே நன்கு விளக்காநின்றது. ஒரு களிறு ஒரு மடுவிலே ஒரு நீர்ப்புழுவாலே னாதிப்புண்டால், இதைப் பரிஹரிக்க  அரைகுலையத் தலைகுலையத்  திருநாட்டில் நின்று ஓடிவந்து, “பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுவார் வியப்பவந்து ஆனைக்கன்றருளியீந்த” என்றும், ***-  ஸ்ரக் பூஷாம்பரமயதாயகம் ததாந: திங் மாமித்யநுகஜகர்ஜமாஜகந்த. * என்றும் பெரியார் ஈடுபடும்படியாக அருள் செய்தபடியை நோக்குங்கால் அஸம்பாவிதமாக தொன்றுண்டோ? என்று காட்டுகிறார்.

கைம்மாநுன்போழிந்தாய்! என்று மெய்யன்புடையார் நெஞ்சுகனிந்து சொல்லும் சொல்லை நான் கபடபக்தியோடே சொன்னேன்; அது மெய்யான பக்தியாகவே பரிணமித்து எம்பெருமானுடைய விஷயீகாரம் பெற்றுவிட்டேனென்றாராயிற்று.

English Translation

The Lord of discus, the over Lord, "Where does he belong, who am I? Simply, calling, "Saviour of the elephant" with hands my over head, I have become his true lover; he too has become mine. However strong the karma, when his grace comes, it shall come, just see!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain