nalaeram_logo.jpg
(3345)

கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை,

நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு,

திண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்,

புண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே.

பதவுரை

கண்ணபிரானை

-

ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும்

விண்ணோர் கருமாணிக்கத்தை

-

நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும்

அமுதை

-

அமிருதம்போன்றவனுமான உன்னை

எண்ணியும்

-

கிட்டியிருக்க செய்தேயும்

நன்னகில்லேன்

-

கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்)

நடுவே

-

இடைச்சுவராக

ஓர் உடம்பில் இட்டு

-

ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து

பல செய்வினைகள் கயிற்றால்

-

பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே

திண்ணம் விழுந்த கட்டி

-

மிகவும் திடமாகக்கட்டி

புண்ணை

-

ஹேயதோஷங்களை

மறைய வரிந்து

-

தெரியாதபடியாகப் பண்ணி

என்னை

-

அசந்தனான என்னை

பதமே

-

உனக்குப் புறம்பான விஷயங்களிலே

போர வைத்தாய்

-

தள்ளிவைத்தாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கண்ணபிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்குதிஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில். மிகவும் ஹேஸ்யமாய் ஜுகுப்ஸிக்கத் தகுந்ததான அந்தப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றிப் பேசுவதற்குமுன்னே நெஞ்சுகுளிர பகவத்விஷயத்தைப் பேசுகிறார்- கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தையமுதை என்று.

‘விண்ணோர் கருமாணிக்கத்தை’ யென்பதைமுந்துற அந்வயித்துக்கொள்ள வேணுமென்பது ஆசாரியர்களின் திருவுள்ளம். “ஸ்ரீவைகுண்டரிலயனாய் *அபர்வறுமமரர்களதிபதியாயிருந்துவைத்து ஸர்யபோக்யனாம்படிவந்து வஸுதேக்ருஹே அவதீர்ணனானவுன்னை” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.

“சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தராநிற்சவேயங்கு, ஓர்மாயையினாலீட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து” (திருவிருத்தம்) என்றகிறபடியே விண்ணோர்களை வஞ்சித்துவந்து கண்ணபிரானாகத் திருவவதரித்து, அப்போதைய அதிமாநுஷசீலவ்ருந்த வேஷன்களையெல்லாம் ப்ரத்யக்ஷமாநாகாரமாக எனக்கு ஸேவை ஸாதிப்பித்து ஆராவமுதமாயிருக்குமெம்பெருமானை என்றபடி.

கண்ணியும், கண்ணசில்லேன்- பெற்று வைத்தும் பெறாதார்கணக்கானேன். ஞான்லாபம் பெற்றது கொண்டு ‘கண்ணியும்’- என்றார்; சரீர ஸம்பந்தத் தோடேயிருக்கிற விருப்பைப்பற்ற ‘நண்ணகில்லேன்’ என்றார். அது தன்னைத்தாமே விவரித்தருளுகிறார் நடுவேயோருடம்பிலிட்டு என்று தொடங்கி, நடுவே என்பதனால், இந்த அழுக்குடம்புகான் அநுபவிவிரோதியாய் நின்கிறதென்று காட்டியவாறு, இருவர்க்கு நடுவிலே ஒரு சுவர் இருந்தால் அது விரோதியாகிறாப்போலே ஜீவாத்ம பரமாத்மாக்களின் அநுபவத்திற்கு இவ்வுடலே காணும் இடைச்சுவராயிருக்கின்றது. கழித்துக்கொள்ளப் பார்த்தாலும் ஸாத்யமாகாதபடி புண்யபாபரூபங்களான பலவகைப் பாசங்களைவிட்டுக் கட்டி வைத்திருக்கின்றாயே! என்கிறாய்.

புண்ணை மறையவரிந்து என்ற விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “தொலைமேலிக் கைப்பாணியிட்டு மெழுகுவாசியிலே ப்ரமிக்கும்படி பண்ணின வித்தனையொழிய, அகவாய் புறவாயிற்றாகில் காக்கை நோக்கைப் பணிபோருமத்தனையிறே” என்பதாம். “தீண்டாவபம்புஞ் செந்நீரும் சீயும் நரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிரு முடல்” என்று ஐயங்கார் பணித்தபடி மிகவும் ஆபாஸமான இந்தவுடன், மேலுக்கு ஏதோ சிறிது மயக்கத்தை விளைப்பதாயினும் உள்ளே கிடக்கிற கச்மலங்கள் வெளியே தெரியுமாயின் காக்கை குத்தவும் அதையோட்டவுமன்றோ வேலை போந்திருக்குமென்றபடி, ***   - யதி நாமாஸ்ய காய்ஸ்ய யதந்தஸ் தத் பஹிர் பலேத்ர தண்டமாதாய லோகோயம் சுந; காகசம்பந்த வாரயேத்” என்ற சுலோகம் இங்கு நினைக்கத்தக்கது.

English Translation

O Krishna, Lord-of-celesitals, dark-gem, ambrosia!  delight I have reached you, yet not attained you; between us you have placed a body, tied me to it securely with strong cords of karma, plastered the wound neatly, and cast me out into this deceptive wide world.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain