nalaeram_logo.jpg
(3344)

என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும்,

வன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து,

நின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன்,

என்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே.

பதவுரை

கண்ணனே

-

எம்பெருமானே!

வன் கள்வனேன்

-

பஹாரக்கள்வனாகிய நான்

உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும்

-

‘உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும்

மனத்தை வலிந்து

-

விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு

கண்ண நீர் சுரந்து

-

அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி

நின் கண்

-

உன்னிடத்திலே

நெருங்க வைத்து

-

மனத்தை ஊன்றவைத்து

எனது ஆவியை

-

என் ஆத்மாவை

நீக்க கில்லேன்

-

ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவிக்க முடியாதவனானயிருக்கின்றேன்;

என் கண்

-

என் பக்கலிலுள்ள

மலினம்

-

அவித்யா தோஷத்தை

அறத்து

-

போக்கி

என்னை கூசி அருளாய்

-

என்னை உன்பக்கலிலே அழைத்துக் கொண்டருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என் கொள்வான்) இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால் அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார். (இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;) கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது; காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார். கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம் தேஹஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயேபோக்கி உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் - என்று சில ஆசாரியர்கள் நிர்வஹப்பர்கள்.

உன்னைவிட்டு என்கொள்வனென்னும் வாசகங்கள் சொல்லியும் = சிறந்த பரமைகாந்திகளன்றோ இவ்வார்த்தை சொல்லத் தகுந்தவர்கள்; உன்னைத் தவிர மற்ற வஸ்துக்களிலேயே காலாழ்ந்து திரிகின்றயான் “உன்னையொழிய வேறு எதைக்கொள்வேன்?” என்று சொல்லத்தகுந்தவனோ? அல்லனாயினும், வாயாலே இங்ஙனம் பச்சைப்பசும்பொய் பேசிக்கொண்டு திரிந்தேனென்கிறார். அதற்கு இப்போது அநுதபித்து வன்கள்வனேன் என்கிறார்.

என்னுடைய பொருளைத் திருடுகிறோமோ அவனைப் பற்றவும், அந்தப் பொருளைத் திருடுகிறோமோ அந்தப் பொருளைப் பற்றவும் கனவு வலிமை பெற்றிருக்கும்; இங்கு ஆக்மவஸ்துவோ ஸர்வேச்வரனான எம்பெருமானுடையது; வஸ்துதானும் கௌஸ்துபம்போலே மிகச் சிறியது; ஆக இரண்டாலும் இதனின் மிக்களவில்லையென்று துணிந்து வன்கள்வனே ளென்கிறார்.

மனத்தை வலித்து = விஷயாந்தரங்களிலே சென்ற மனத்தை அவற்றில் நின்றும் மீட்டு என்றபடி, மனத்தை மீட்பதிலுள்ள அருமை தோன்ற வலிந்து என்கிறார்.

கண்ணீரில் சுரந்து = விஷயாந்தரங்களிலே ஊன்றிக்கிடந்த காலத்தில் அவற்றின் அநுபவம் யதேஷ்டமாகக் கிடையாதபோது கண்ணீர் பெருகுமே, அதைச் சொல்லுகிறது இங்கு; அந்தக் கண்ணீரையும் மாற்றவேணுமே இப்போது, இவையெல்லாம் கில்லேன் என்பதிலே அந்வயிப்பன; அதாவது மனத்தை வலிக்ககில்லேன், கண்ணநீர் காக்க (மாற்ற) கில்லேன்; (மனத்தை) நின்கண் நெருங்க வைக்கில்லேன்; எனதாவியை நீக்கில்லேன்- என்று ஒவ்வொன்றும் மாட்டாமை கூறியவாறு.

எனதாலியை நீக்ககில்லேன் = இந்த ஸ்தூலதேஹத்தை விட்டு ஆத்மாவைப் பிரிக்க முடியவில்லை யென்கை. அதாவது - ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுக்கமாட்டிற்றிலே ளென்றவாறு.

என்கண் மலினமறுத்து - இங்கு மலினுமென்கிறது ப்ரக்ருதி ஸம்பந்தத்தை; அத்தை யறுத்து உன் திருவடிகளிலே என்னை யழைத்துக்கொண்டருள வேணுமேன்கை.

இரண்டு வகையான அவதாரிகைகளுக்கு இணங்க, இரண்டாமடி மூன்றாமடிகளுக்கு இரண்டுவகையான பொருள்கள் காணத்தக்கன. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்; “அதவா, (என்கொள்வனித்யாதி) ஸ்வரூபாநுரூபமான பாகரத்தை வாயாலே சொல்லி நிற்கச்செய்தேயும். (வன்கள்வனேன்) உத்தேச்ய வஸ்துவைக் கடுக லிபிக்கப்பெறாத இன்னாப்பாலே ‘மஹாபாபி” என்பாரைப்போலே சொல்லுகிறார். (மனத்தை வலிந்து இத்யாதி) பக்திபாரவச்யத்தாலே சிதிலமாகிற மநஸ்ஸைத் திண்ணிதாக்கி, “தன கேழிலொன் கண்ணநீர் கொண்டாள்* என்கிற கண்ணநீரையும் மாற்றி, (நின்கண் நெருங்கவைத்தே) *நாலாழும் நெஞ்சழியும்* என்கிறபடியே உன்னைக் கிட்டினவாறே யுடைகுலைப்படுகிற மாஸ்ஸைத் தரித்துநின்ற உன்னையநுஸந்திக்கும்படி பண்ணி இச்சரீரத்தில் நின்றும் ஆத்மாவைப் பிரியவநுஸந்திக்க க்ஷமனாகிறிலேன்” என்பதாம்.

English Translation

Though I say words like, "What other refuge do I hae", -the rogue that I am, -I have not the power to wean my soul from the world, nor strengthen my heart, nor dry my tears, and move closer to you. My Krishna, rid me of my dross and call me unto you.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain