nalaeram_logo.jpg
(3341)

கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,

பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,

மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,

ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.

பதவுரை

கைஆர் சக்கரத்து

-

‘திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும்

என் கரு மாணிக்கமே

-

எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே!

என்று என்று

-

என்று பலகாலும்

பொய்யே கைம்மை சொல்லி

-

பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி

(அந்த  வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி)

புறமே புறமே ஆடி

-

விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும்

மெய்யே பெற்றறோழிந்தேன்

-

மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;

விதி வாய்க்கின்று

-

பகத்திருபை பலிக்குமிடத்தில்

காப்பர் ஆர்

-

அதைத் தடுக்கவல்லார் யார்?

கண்ணபிரான்

-

ஸ்ரீக்ருஷ்ணனே!

இனி

-

உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு

போனால்

-

என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில்

அறையோ

-

தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.)

ஐயோ

-

சந்தோஷக்குறிப்பு

(இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கையார் சக்கரத்து) நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து, பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல, அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.

எம்பெருமான் கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்பு உண்மையிலே நெஞ்சை உருக்குமதாயிருந்தாலும் இரும்புபோல் வலிதான என்னுடைய நெஞ்சம் அதிலே ஈடுபட்டிலது; ஆனாலும் ஈடுபட்டவர்கள் பேசுகிற பாவனையிலே “கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே” என்ற பேசினேன்; இப்படி ஒரு தடவை சொல்லி நிற்காதே பலதடவை சொன்னேன்; பல்லாயிரந்தடவை சொன்னாலும் உள்கனிந்து சொன்னால் அழகியதே; அப்படியன்றிக்கே எம்பெருமானையும் வஞ்சிப் பதற்காகச் சொன்னேனத்தனை.  வாயாற்சொல்லுவதோ இது; நடத்தையோ விஷயப்ராவண்யமேயாயிற்று.  அப்படியிருந்தும் மெய்யன்பர் பெறும்பேற்றை நானும் பெற்றுவிட்டேன்; பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் பேற்றை நானும் பெற்றுவிட்டேன். பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன் எங்ஙனம் பெறமுடியும் என்று சிலர் சங்கிக்கக்கூடும்; (விதிவாய்க்கின்று காப்பாரார்?) எம்பெருமானுடைய அருளிவெள்ளம் கரையுடைந்து பெருகப்புகுந்தால் எம்பெருமானறன்னாலும் அணைசெய்யமுடியாதன்றோ.

ஆக மூன்றடிகளைத் தம்மிலேதாம் சொல்லிக்கொண்டு, நான்காமடியை எம்பெருமான்றன்னையே நோக்கிச் சொல்லுகிறார், “கண்ணபிரானே! இனி நீ என்னைவிட்டுப்போகத் திருவுள்ளமாகில் விட்டுப் போ  பார்ப்போம்” என்று வீரவாதம் பண்ணுகிறார். இனி உன்னாலும் விட்டுப்பெயரமுடியாதென்றவாறு.

அறையோ வென்பது தம்முடைய வெற்றியைக் காட்டுகிறது. வீரவாதத்தைத் தமிழர்கள் அறை கூவுதலென்றும் நாவலிடுதலென்றும் சொல்லுவர்.

***  - மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சக * என்ற உனக்கு இனி என்னை விடப்போகாதென்பது திண்ணம் என்று காட்டினபடி.

இப்பாசுரத்தினால் எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபை நிரூபிக்கப்பட்டதாயிற்று. ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகரணத்தில் “இவன் நடுவே அடியானென்ன, ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதிஸாக்ஷி வன்களவிலநுபவமாக இந்திரஞாலங்கள் காட்டிக்கொள்ளக் காப்பாரற்று விதி சூழ்ந்தது” என்றருளிச்செய்த சூர்ணிகை இங்க அநுஸந்திக்கத்தக்கது.

விதியென்று பகவத்க்ருபையைச் சொல்லுகிறது. விதி எப்படித் தப்பவொண்ணாததோ அப்படி க்ருபையும் எம்பெருமானாலே தப்வொண்ணாததாயிருக்கையாலே விதியென்றது.

இனிமேல் எம்பெருமான் தம்மை விட்டுப் பெயர்ந்துபோக முடியாதென்கிற உறுதியைக்காட்டுவது ஈற்றடி. கண்ணபிரானால் இனி எங்ஙனம்போக முடியுமென்கை.

English Translation

Uttering, "Holder of bright discus!", "My gem-hued Lord!", and many such shallow praises, I roamed and danced, and attained the truth, who can prevent what fortune favous? My Lord, Krishna, if you leave me now, will I let you go?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain