nalaeram_logo.jpg
(3340)

ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்

நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்,

வேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,

மீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.

பதவுரை

ஆள் செய்து

-

(உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி

ஆழி பிரானை சேர்ந்தவன்

-

ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும்

வண் குருகூர் நகரான்

-

திருநகரிக்குத் தலைவரும்

நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்

-

பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான

மாறன் சடகோபன்

-

ஆழ்வார்

வேட்கையால்

-

ஆதரத்தோடு

சொன்ன பாடல் ஆயிரத்துள்

-

ஆயிரம்பாட்டினுள்ளே

இ பத்தும்

-

இப்பதிகத்தை

வல்லார்

-

ஓதவல்லவர்களுக்கு

மீட்சி இன்றி

-

மீண்டும் திரும்பிதலில்லாத

வைகுந்தம் மாநகர் மற்றது

-

ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம்

கையது

-

கரஸ்தம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது.  (ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்) ஆட்செய்கையாவது கைங்கரியம் பண்ணுதல் இது மாநஸிகமென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூவகைப்பட்டிருக்கும்; இங்கு வாசிகைங்கரியம் கொள்ளத்தகும்.  எம்பெருமான் கையுந் திருவாழியுமான அழகைக்காட்டித் தம்மை ஆட்படுத்திக் கொண்டானென்பது தோன்ற ஆழிப்பிரானை என்றார்.

முதலடிக்கு ஈட்டு ஸ்ரீஸுக்திகள் பரமபோக்யங்களாயிருக்கையாலே அவை ஈண்டுக் குறிப்பிடப் பெறுகின்றன;-“அடிமைதான் த்ரிவிதம்-மாநஸ வாசிக காயிகங்கள். இவற்றில் மாநஸகாயிகங்களுக்கு ஆளல்லர்; என்றிய வென்னில், *காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்* என்கையாலே.  இனி வாசிகமொன்றுமேயானால் வாசிகமாக திருவாய்மொழி பாடி அடிமை செய்தாரென்கிறதோ வென்னில்; அன்று; அப்படியாமன்று இப்பாசுரம் *முனியே நான்முகனிலேயாகவேணும்.  இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமை செய்த *புகழுநல்லொருவனிலேயாகப் பெறில் முக்க்யம்;.  ஆனால், தேவதாந்தரபரத்வ நிரஸநபூர்வகமாக ஸர்வேச்வரனுடைய பரத்வத்தை யருளிச் செய்கையாலே யானாலோவென்னில; அதுவாகில் முதல் திருவாய்மொழியிலே யாகவமையும். பரத்வநிர்ணயத்திலே பரோபதேசமு மாகை யாலே யானாலோவென்னில், அதுவாகில் *திண்ணன் வீட்டிலேயாதல்* அணைவதரவணையிலே யாதலாகவமையும்.  ஆனால் அர்ச்சாவதாரத்திலே பரத்வமருளிச் செய்கையாலே யானாலோவென்னில்; அதுவுமொண்ணாது.  அது *செய்யதாமரைக் கண்ணனிலேயாகவமையும்.  பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்றானாலோவென்னில், அதுவுமொண்ணாது; *வீடுமின் முற்றவும் தொடங்கிப் பல விடங்களிலும் பரோபதேசம் பண்ணினார்; அவற்றிலுமாகப் பெற்றதில்லை; ஆனால் எதாவதென்னில்; இவ்வொன்றுந்தேவிலே *பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே* என்று பொலிந்து நின்ற பிரானே ஸர்வஸ்மாத் பரனென்று இவரருளிச்செய்யக் கேட்டு  *கபாலநன்மோக்கத்துக் கண்டு கொண்மின்* என்னக்கண்டு ஜகத்தாகத் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்களாயிற்று.  இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாஸநம் பண்ணும்படியிறே அவர்கள் தாம் திருத்தினபடி.  *பொலிகபொலிக என்று இதுக்கென்ன வொரு திருவாய்மொழி நேருகிறாரிறே.  ஸர்வேச்வரன் அவதரித்துத் திருத்தப் பார்த்தவிடத்தும் திருந்தாத ஸம்ஸாரத்திலே இவர் திருத்தத்திருந்தினபடி.  இனி இவர்க்குத் தத்வநிர்ணயம் பண்ண வேண்டாதபடி *இடங்கொள் சமயத்தை யெல்லாமெடுத்துக் களைவன போலே தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாம்படி திருத்துகையாலே ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன் என்கிறார்.

இந்த நன்மைக்கு அடி நல்லார்நவில் குருகூரிலே பிறப்பு, என்பது தோன்ற வண்குரு கூர்நகரான் என்கிறார்.

நாட்கமழ்மகிழ்மார்பினன் ஆழ்வார் தாம் வகுளமாலையை அணியாகக் கொண்டவராதலால் வடமொழியில் ‘வகுளாபரணர், வகுளபூஷணர் என்றும், தென்மொழியில் ‘மகிழ்மாலைமார்பினர்’ என்றும் வழங்கப்படுவர். ஸ்ரீமத்வேதாந்ததேசிகன் யதிராஜஸப்ததியில்

---ஸ்ரீ யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம்இ ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே. என்றருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.  ஆழ்வார் அணிந்துகொண்டிருக்கும் வகுளமாலையின் நறுமணம் திருவாய்மொழியிலும் வீசிக் கிடப்பதாக அருளிச்செய்கிறார்.  இத்தகைய நறுமணம் வடமொழி வேதத்திற்கு இல்லாமையாலே அதற்கொரு குறையுண்டு என்பதையும் காட்டியருளினார்.

வேட்கையால் சொன்னபாடல் = உலகத்திலே கவி சொல்லுவார் பலருண்டு; அவர்கள் பெரும்பாலும் தம்தம் கவித்திறம் காட்டுவதற்கே பாடல்கள் பாடுவர்; ஆழ்வார் அங்ஙனமின்றி பக்தி பலாத்காரத்தாலே பரவசமாகத் திருவாய்மொழி பணித்தாரென்று அறியத்தக்கது.  ஆசார்யஹிருதயத்தில்-“நீர் பால் செய்யமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமதாபோலே பரபச்த்யாதிமயஜ்ஞாநாம்ருப்தி நிமிகிற வாய்கரைமிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதியென்று பேர்பெற்றது.” என்ற சூர்ணிகை இங்கு அநுஸந்தேயம்.

“வைகுந்தமாநகர்மற்றது” என்ற விடத்தில் மற்று என்பது அசையச் சொல்லாய் வைகுந்தமாநகராகிற அவ்விடம் என்று பொருள்படும்; அன்றியே, வைகுந்தமாநகரமாகிய நித்ய விபூதியும் மற்றதாகிய லீலாபூதியும் என்றும் பொருள்கொள்ளலாம்.  உபய விபூதி ஸாம்ராஜ்யமுண்டாகுமென்று பலன் சொல்லிற்றாயிற்று.

English Translation

This decad of the faultless thousand songs, sung with love by kurugur city's maran satakopan addresses Adiprian, Lord of discus and Vakula flower-garlands, Those who master it will have access to the other Vaikunta as well, the city of no return

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain