nalaeram_logo.jpg
(3333)

பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்

நாயகனவனே * கபாலநன் மோக்கத்துக்கண்டுகொண்மின் *

தேசமாமதிள்சூர்ந்தழகாய திருக்குருகூரதனுள் *

ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே?

பதவுரை

பேசநின்ற

உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற

சிவனுக்கும்

ருத்ரனுக்கும்

பிரமன் தனக்கும்

(அவனது தந்தையான) பிரமனுக்கும்

பிறர்க்கும்

மற்றுமுள்ள தேவதைகளுக்கும்

நாயகன் அவனே

தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை

கபாலம் நல் மோக்கக்து

கபாலமோக்ஷக்கதையினால்

கண்டுகொண்மின்

தெரிந்துகொள்ளுங்கள்

தேசம்

தேஜஸ்ஸுபொருந்திய

மா

சிறந்த

மதிள் சூழ்ந்து

மதில்களால் சூழப்பட்டு

அழகு ஆய

அழகு பெற்றதான

திரு குருகூர் அதனுள்

திருநகரியில் எழுந்தருளியிருக்கிற

ஈசன் பால்

ஸர்வேச்வரன் விஷயத்திலே

ஓர் அவம் பறைதல்

தப்பான பேச்சுக்களைப் பேசுவது

இலிங்கியர்க்கு

லிங்கப்பிரமாண வாதிகளுக்கு

என் ஆவது

என்னபலனைத்தரும்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கவிரும்புமவர்களும் பசுபதியே ஸர்வேச்வரனென்று கூறுபவர்களுமான சிலரை இப்பாசுரத்தாலே நிராகரித்தருளுகிறார். இலிங்கியர்க்கு என்றது ஹேதுவாதிகளுக்கு என்றபடி, அநுமானத்தைக் கொள்பவர்களே ஹேதுவாதிகளாவர்கள். சப்தப்ரமாணமான சாஸ்த்ரத்தின் முன்னே வேறு எந் ப்ரமாணமும் நிற்கமாட்டாதாகையாலே அந்த சாஸ்த்ரத்தின் முன்னே வேறு எந்த ப்ரமாணமும் நிற்கமாட்டாதாகையாலே அந்த சாஸ்த்ரப்ரமாண விருத்தமாக இலிங்கியர் பேசுவது பொருளற்றது என்று நிரூபிக்கிறார். இலிங்கியர் – லிங்கவாதிகள், லிங்கமாவது ஹேது, அநுமாநமென்கை.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி “அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்னசெய்வது‘ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்‘ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் அக்ஷயம் என்று பிக்ஷையிட உடனே அதுநிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது கபாலநன்மோக்க வரலாறு. கொலையுண்பவனும் கொலை செய்பவனுமான பிரமனும் உருத்திரனும் பரதெய்வமாக இருக்கத்தகுதியுடையரல்லரென்பது இக்கதையினால் தெற்றெனவிளங்கும்.

வேதத்தில் * “***“ என்றும் “***“ என்றும் “***“ என்றும் சொல்லியிருப்பவற்றைப் பற்றிக்கொண்டு சிலர் சிவனுக்குப் பாரம்யத்தையும் சிலர் என்று சொல்லியிருப்பவற்றைப் பற்றிக்கொண்டு சிலர் சிவனுக்குப் பராம்யத்தையும் சிலர் பிரமனுக்குப் பாரம்யத்தையும் பேசுவதுண்டாதலால் ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றிப் “பேசநின்ற சிவனுக்கும் பிரமன்றனக்கும்“ என்கிறார். ‘பேசநின்ற‘ என்பது சிவனுக்குப் போலவே பிரமனுக்கும் அடைமொழியாகத்தகும். சில மூலைகளிலே இவர்களுக்குப் பரத்வம் தோன்றும்படியான வசநவ்யக்திகள் இருந்தாலும் “***“ – ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூர்யஸமப்ரபம், நாப்யாம் விநிஸ்ஸ்ருதம் பூர்வம் தத்ரோத்பந்ந, பிதாமஹ, * என்றும், “***“ – யத் தத் பத்மமபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயத, ப்ரஹ்மணச் சாபி ஸம்பூதச் சிவ இத்யவதார்யதாம் * என்றும், “***“ ப்ரஹ்மண, புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய * என்றும், “***“ – மஹாதேவஸ் ஸர்வமேதே மஹாத்மா ஹுத்வா ஆத்மாநம் தேவதேவோ பபூவ*. என்றுமுள்ள நூற்றுக்கணக்கான பிரமாணங்களுக்குச் சேர நிர்வஹிக்கவேண்டுகையாலே அப்படி நிர்ணயித்தருளின பரம வைதிகரான ஆழ்வார்  “சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே“ என்று துணிந்து அருளிச் செய்கிறார்.

இங்கே நம்பிள்ளையீட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மீன்-

“நீங்கள் ஈச்வர்ர்களாக சங்கித்தவர்களிருவரும் நின்ற நிலை கண்டதே, ஒருவன் தலைகெட்டு நின்றான், ஒருவன் ஒடுகொண்டு ப்ராயச்சித்தியாய் நின்றான். ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய், உங்கள் குறைதீரப் பற்றுகிற நீங்ள் உங்களிலும் பெருங்குறை வாளரையோ பற்றுவது? ‘பாதகியாய் பிக்ஷைபுக்குத் திரிந்தான்‘ என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்குப் பரத்வத்தைச் சொல்லவோ? ஒருவனுடைய ஈச்வரத்வம் தலையோடே போயிற்று. மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கையோடேயென்று காட்டிக்கொடுக்கிறார் (கண்டு கொண்மின்) உத்தம் அகங்களிலே நீங்கள் எழுதியிட்டுவைத்த க்ரந்தங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டிகோளோ முன்னேநின்று பிதற்றாதே யென்கிறார்.“

தேசம் – சேஜஸ் என்ற வடசொல்திரிபு. தேசுபொலிந்த திருமதிளாலே சூழப்பட்டு அழகாய திருநகரிலே நிற்கிற ஸர்வேச்வரன் பக்கலிலே குறை கூறும்படியான தௌர்ப்பாக்யமுண்டாயிற்றே! என்று வெறுக்கிறார்.

English Translation

He is the lord of sive, Brahma and the other gods you speak of. See this for yourself in Kapala Moksha, the redemption of Siva. Now how does it help the Linga – worshippers to speak ill of the Lord, who resides in radiant kurugur city surrounded by walls?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain