nalaeram_logo.jpg
(3319)

நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,

எண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?,

கண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கே வரும்பரிசு,

தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே.

பதவுரை

கண்ணதார்

-

பகைவர்கள்

முறுவலிப்ப

-

மகிழ்ந்து சிரிக்கவும்

நல் உற்றார்

-

நல்ல உறவினர்கள்

தரைந்து ஏங்க

-

மனமுருகிவருந்தவும்

எண்ஆரா துயர் விளைக்கும்

-

எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான

இவை உலகு இயற்கை

-

இந்த லோகயாத்ரைகள்

என்ன

-

என்ன!;

கண் ஆளா

-

தாயாளுவே!

கடல் கநை;தாய்

-

(தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே!

உன கழற்கே

-

உனது திருவடி வாரத்திலேயே

வரும் பரிசு

-

நான் வந்து சேரும்படி

தண்ணாவாது

-

காலதாமதமின்றியில்

அடியேனே

-

அடியேனே

சாம்ஆறு

-

மரணமடையும் படி

பணி

-

அருள் செய்யவேணும்;

(கண்டாய்

-

முன்னிலையசை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வநிர்வாஹகனாய் நீ யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத்கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை; இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ, அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்கவொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.

உலகத்தில் ஒவ்வொருவர்க்கும் பகைவர் என்று சிலரும் நண்பர் என்று சிலரும் நண்பா சிலரும் இருப்பர்களே; ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே!’ என்று அனைவரும் கூடி வயிறு பிடிக்கவேண்டியிருக்க, சிலர் உகந்து சிரிக்கும்படியும் சிலர் வருந்தும்படியுமாவதே!  என்று லோகயாத்திரைக்கு வருந்துகிறராழ்வார், இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“ஒருவனுக்கு ஒர் அநர்த்தம் வந்தவாறே அற்றைக்கு முன்பு வெற்றிலே தின்றறியார்களேயாகிலும் அன்றாக ஒரு வெற்றிலே தேடித்தின்பது, ஒர் உடுப்பவாங்கியுடுப்பது, சிரிப்பதாகா நிற்பர்களாயிற்று.”

எண்ணாராத் துயர்விளைக்குமிவை-நண்ணாதார் முறுவலிப்பதும் நல்லுற்றார் கரைந்து எங்குவதுமாகிய எல்லாம் ஆழ்வார்க்கு எண்ணராத் துயரமாகத் தோற்றாநின்றது. எல்லாரும் எம்பெருமானையே பரமபந்துவாகக் கொண்டு அவனுக்கு ஒரு துன்பம் வந்தால் கரைந்தேங்கவும், அவனுக்கு இன்பம் மிகுந்தால் குதுகலிக்கவும் ப்ராப்தமாயிருக்க, ஆபாஸபந்துக்களுக்காகச் சிலர்வயிறு பிடிப்பதும்இ பகைமை பாராட்டிச் சிலர்முறுவலிப்பதும் ஆழ்வார்க்கு அஸஹ்யமாயிருக்கிறது.

ஸதைகரூபரூபாய என்கிறபடியே எப்போதும் ஒருபடிப்பட்டிருக்கிற எம்பெருமானுக்கும் துன்பம் விளைவதும் இன்பம் மிகுவதும் உண்டோவென்னில்; மங்களாசாஸந பரர்களுடைய கருத்தாலே உண்டென்க. அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்று ஆழுமென்னாருயிர்” என்றும் “அவத்தங்கள்விளையும் என் சொற்கொறந்தோ!” என்றுமுள்ள பாசுரங்களே நினைப்பது.

இவையென்னவுலகியற்கை! ஸ்ரீ  அவரவர்களக்கு லாபநஷ்டங்கள் உன்னளவிலேயாகாதே புறம்பேயாம்படி இப்படியொரு லோகயாத்ரையைப் பண்ணிவைப்பாயோ பெருமானே! என்கிறார்.

நான் பண்ணிவைத்ததுண்டோ? அவரவர்கள் பண்ணின் கருமங்களின் பலன் தொடந்து வருகிறவித்தனையன்றோ; நம்மால் வந்தது ஒன்றுமில்லை காணும்” என்று எம்பெருமான் திருவுள்ளமாக; கண்ணளா! கடல்கடைந்தாய்! என்று அவன் நெஞ்சிலேபடும்படி விளிக்கிறார். அவரவர்கள் பண்ணின கருமங்களின் பலனை அவரவர்கள் அநுபவித்தே தீர வேணுமாகில் உன்னுடைய க்ருபையுடையவனைக் கண்ணுடையவனென்பர்களே. உன்னுடைய க்ருபைக்கு இலக்காக்க வேண்டியவர்களே லீலைக்கு விஷயமாக்கலாமோ பிரானே! என்கிறார். (கடல் கடைந்தாய்) உன்வடிவழகிலே சிறிதும் கண்செலுத்தமாட்டாதவர்களும், ப்ரயோஜநாந்தரமெ கண்ணாயிருப்பவர்களும், காரியம் தரைக்கட்டினவாறே உன்னோடே எதிரம்பு கோப்பவர்களுமான தேவர்களுக்கும் சாவமருந்து கொடுப்பதற்காகத் திருமேனி நோவக் கடல் கடைந்கவனல்லையோ நீ.

“ஆமாம்; தேவர்களுக்கு நாம் காரியம் செய்ததுண்டு; அவர்களுக்கு  இச்சையாவது இருந்தது; அதுவுமில்லாதவர்களுக்கு என்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லையே!” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, ஆகில் இவர்கள் நடுவேயிராதபடி என்னை உன் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளவேணுமென்றார்; ‘உனகழற்கே வரும்பரிசு’ என்னும்போதே, அப்படியே செய்கிறோமென்று எம்பெருமான் தலைதுலுக்க, ஆகட்டுமாகட்டுமென்று தலையாட்டும்படியாயோ என் நிலைமையுள்ளது; இனிக்காலதாமதம் செய்யலாகாது என்கிறார். தண்ணாவாது-விளம்பம் செய்யமால்; தண்ணாத்தல் -தாமத்தித்தல்.

சாமாறுபணி =  சரீரம் முடிந்ததாம்படி பார்த்தருள் என்கை. சரீரவியோகந்தானே மோக்ஷமென்று சொல்லுகிற மதாந்தரஸ்தர்களைப் போலன்றியே, நித்யகைங்கர்யம்பண்ணி ஆனந்திப்பதே மோக்ஷமென்று உறுதிகொண்டிருக்கிற ஆழ்வார் இப்போது சரிர்வியோக மாத்திரத்தைப் பண்ணிக்கொடுக்கும்படி பிரார்த்திப்பது ஏனென்னில்; இக்கொடியவர்களின் நடுவேயிருக்கிற இருப்புத் தவிர்ந்தால் போதும் என்பது இப்போதைய நினைவு போலும்.

English Translation

Strangers laugh and good frieds weep, over countless miseries the world heaps; what ways are these?  Lord with beautiful eyes who churned the ocean!  Show me quick the path to your feet, or give me death

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain