nalaeram_logo.jpg
(3313)

அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,

நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,

குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,

கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே.

பதவுரை

அறிவினால் குறைவு இல்லா

-

‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத

அகல் ஞாலத்தவர் அறிய

-

விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக

நெறி எல்லாம்

-

(கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும்

எடுத்து உரைத்த

-

ஸாரமாகவெடுத்தருளிச்செய்த

நிறை ஞானம்

-

பரிபூர்ண ஞானத்தையுடைய

ஒரு மூர்த்தி

-

விலக்ஷணஸ்வாமியாய்,

குறிய மாண்உருஆகி

-

வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய்

கொடு கோளால்

-

(மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால்

நிலம் கொண்ட

-

பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட

கிறி

-

உபாஜ்ஞனான

அம்மான்

-

எம்பெருமான்

கவராத

-

விரும்பாத

கிளர் ஒளியால் குறைவு இலம்

-

மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அறிவினால் குறைவில்லா) தன்னைப்பெறுதற்கு உபாயமானவற்றையெல்லாம் தானே அருளிச்செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத் தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.

“அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர்” என்பதற்கு அறிவினால் பரிபூர்ணர்களான இவ்வுலகத்தவர்கள்’ என்று பொருளன்று.  ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்று குறைபட அறியாதவர்கள் என்றபடி.  ‘நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவர்கள்; அறிவு இல்லையே’ என்றுமாத்திரம் குறைவுபடுவதில்லை ஸம்ஸாரிகள். இங்கே நம்பிள்ளையீடு;-“நாட்டார் அந்ந பாநாதிகறெல்லாவற்றாலும் கார்யமுடையராயருப்பார்களிறே; அறிவொன்றிலுமாயிற்று குறைவுபடவறியாதது.  அறிவால் கார்யமின்றிக்கேயிருப்பாராயிற்று.

பகவத்கீதை அர்ஜூநனை நோக்கி அவதரித்ததாயினும், அவனை ஒரு வியாஜமாக நிறுத்தி அஸ்மதாதிகளுக்குமாக அது அருளிச் செய்யப்பட்டதாகையாலே “அகல்ஞாலத்தவரறிய நெறியெல்லாமெடுத்துரைத்த” என்றார்.  கர்மஜ்ஞான பக்திப்ரபத்திகளும், அவதாராஹஸ்யஜ்ஞானம், புருஷோததமவித்யை முதலானவைகளுமான உபாயங்களெல்லாவற்றையும் திருவுள்ளம்பற்றி “நெறியெல்லாம்” என்கிறார்.

(குறியமாணுருவாகி இத்யாதி,) உபதேசத்தாலே திருந்தாதாரை வடிவழகாலே திருத்துவதொருமுறை உண்டாதலால் அது இங்கு விவகூஷிதம். கொடுங்கோள்=கோள் என்று ப்ரதிக்ரஹத்தைச் சொல்லுகிறது; முதனிலைதிரிந்த தொழிற்பெயர். கொடிய கோளாவது கடினமான ப்ரதிக்ரஹம், சிறியகாலைக்காட்டிப் பெரியகாலாலே கொண்ட வஞ்சனையைச் சொன்னபடி.

கொடுங்கோளால் நிலங்கொண்ட என்ற இவ்விடத்து “… ஸ்ரீகஸ்த்வம் ப்ரஹ்மந்! அபூர்வ: க்வ ச தவ வஸதி:  யாகிலா ப்ரஹ்மஸ்ருஷடி: கஸ் தே த்ராதாஸ்தி அநாத: க்வ ச தவ ஜநக: நைவதாதம் ஸ்மராமி, கிம் தே அபீஷ்டம் ததாநி, த்ரிபதபரிமிதா பூமி: அத்யல்பமேதத், த்ரைலோக்யம் பாவகர்ப்பம் பலமிதி நிகதந் வாமநோ வஸ் ஸ பாயாத்.” என்கிற ச்லோகம் அநுஸந்திக்கத்தகும்.  இது மாவலிக்கும் வாமநமூர்த்திக்கும் ஸம்பாஷயைர்ன ச்லோகம். இதன் மிகவினிய பொருளைக் கேண்மின்-;

மாவலி:-(ஹே ப்ரஹ்மந்! த்வம் க:?) ப்ராஹ்மணகுமாரனே! நீ யாவன்? என்று கேட்க;

வாமனன்:-(அபூர்வ) என்கிறான். இதற்கு இரண்டு பொருள்; இதுவரையில் ஒரு நாளும் நான் இரப்பாளனாக வந்தவனல்லேன் என்றும் ஒருபொருள்: “….” என்கிற வ்யுத்பத்தியினால் ‘எல்லார்க்கும் முற்பட்டவன் நான்’ என்பது மற்றொரு பொருள்.

மாவலி:-(தவ வஸதி: க்வ) உனது இருப்பிடம் யாது? என்று கேட்க,

வாமனன்:-(யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி:-ஸா மம வஸதி:) என்கிறான். யாசகனாகையாலே பிரமன் படைத்த உலகமெங்கும் திரிபவன் நான் என்பது ஒருபொருள். கருதரியவுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையுமொரு தனிநாயகனாயிருப்பவன் யான் என்பது மற்றொரு பொருள்.

மாவலி:-(தே த்ராதா க:?) நீ யாருடைய ஸம்ரக்ஷணையில் இருந்து வருகிறாய்? என்று கேட்க,

வாமனன்:-(அநாதா) என்கிறான், எனக்கு யாரும் நாதனில்லை என்கை.  புகலற்றுத் திரிகிறனென்பதும், உலகுக்கெல்லாம் நானே நானாதலால் எனக்கு யாரும் நாதரில்லை என்பதும் கருத்து.

மாவலி:-(தவஜநக: க்வ) உன்னுடைய தகப்பனார் எங்கே? என்று கேட்க;

வாமனன்:-(தாதம் நைவ ஸ்மராமி) என்கிறான்.  தகப்பனார் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை யென்கிறவிது மிகவும் சாதுர்யமான பேச்சு.  மிக்க இளம்பிராயத்திலேயே தகப்பனாரை யிழந்துவிட்டேனென்பதும், உலகுக்கெல்லாம் நானே பிதாவாகையால் எனக்கொரு பிதா இருக்க நியாயமில்லையென்பதும் கருத்து.

மாவலி:-(தே கிம் அபீஷ்டம் ததாநி?) உனக்கு நான் கொடுக்கவேண்டியதாக நீ விரும்பும் பொருள் என்? என்று கேட்க;

வாமனன்:-(த்ரிபதபரிமிதாபூமி:) என்றான்; என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் வேண்டுமத்தனை யென்கை.

இப்படிப்பட்ட வாக்சாதுர்யத்தை நினைத்துக் கொடுங்கோளால் நிலங்கொண்ட என்றதாகவுமாம்.

கிறி-உபாயம்; அவன் தரும் விரகு அறிந்து வாங்கவல்ல பெருவிரகன் என்கை. இப்படிப்பட்ட பெருமான் விரும்பாத லாவண்யத்தில் எனக்கு அபேக்ஷயில்லை யென்றாளாயிற்று.

English Translation

So that thinking men in the wide world may know, the Lord, -a great figure of knowledge, -expounded the paths of truth.  He apeared as a clever manikin and took the Earth in three strides, if he does not desire my youthfulness, we hav nothing to lose

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain