nalaeram_logo.jpg
(3312)

தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,

கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,

களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,

அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.

பதவுரை

தளிர் நிறத்தால் குறைவு இல்லா

-

தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய்

தனி சிறையில் விளிப்புற்ற

-

தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய்

கிளி மொழியாள் காரணம்; ஆ

-

கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக

கிளர் அரக்கன் நகர் எரித்த

-

செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும்

களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்

-

தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும்

கடல் ஞாலத்து

-

கடல்சூழ்ந்த மண்ணுலகில்

அளிமிக்கான்

-

மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான்

கவராத

-

விரும்பாத

அறிவினால் குறைவு இலம்

-

அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.  ஸீதாபிராட்டியைக் குறிக்கவேண்டுமிவ்விடத்தில் தனிச் சிறையில் விளப்பற்ற என்றருளிச்செய்தது அப்பிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற பிரபாவாதிஸயத்தை வெளியிடுதற்கேயாம்.  தேவதேவ திவ்யமஹிஷியான தன் பெருமையையும் சிறையிருப்பின் தண்மையையும் பாராதேஇ தேவஸ்த்ரீகளின் சிறையை விடுக்கைக்காகப் பிராட்டி தான் சிறை யிருந்தது கருணையின் மிகுதியாலாகுமத்தனை.  குழந்தை கிணற்றில் விழுந்தால் உடன் குதித்தெடுக்கும் தாயைப்போலே, இச்சேதநர் விழுந்த ஸம்ஸாரத்திலே தானுமொக்க வந்த பிறந்து இவர்கள் பட்டதையெல்லாம் தானும் பட்டு ரகூஷித்தருளுகையாலே நிருபாதிகமான மாத்ருத்வமும் வாதஸல்யமும் இச்சிறையிருப்பினால் விளங்குமென்பர்.  ஆச்ரிதரான தேவர்களுடைய ஸ்த்ரீகளின் சிறையை விடுவிக்கைக்காகத்தன் அநுக்ரஹத்தாலே தானே வலியச் செய்துகொண்டதாகையாலே பிராட்டிக்குச் சிறையிருப்பு ஏற்றத்திற்கு உறுப்பாமித்தனை.  உலகத்தவர்கட்குக் கர்ம நிபந்தனமாக நேர்கின்ற சிறையிருப்பே ஹேயமாகும்.  பிள்ளை லோகசார்யரும் ஸ்ரீ வசநபூஷணத்தில் “இதிஹாஸ ச்ரேஷ்டமான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றம் சொல்லுகிறது” என்றருளிச்செய்தது இவ்வாழ்ர்ர் பாசுரத்தை அடியொற்றியேயாம்.

விளப்புற்ற என்றது, ப்ரஸித்திபெற்ற என்றபடி. பிராட்டியை இலங்கையிற் கண்டு பெருமாளிடம் சென்ற அனுமன் “விற்பெருந்தடந்தோள் வீர! வீங்குநீரிலங்கை வெற்பில், நற்பெருந்தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லன், இப்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும் கற்பெனப்படுவதொன்றுங் களிநடம் புரியக்கண்டேன்” (கம்பராமாயணம்) என்றனன்.  இப்படிப்பட்ட பலவகை ப்ரஸித்திகள் இங்கு விவகூஷிதம். “மதுரா மதுராலாபா” என்று ஸ்ரீராமபிரானும் வாய்வெருவும்படியான பேச்சினிமைபெற்றவளாதலால் கிளிமொழியாள் எனப்பட்டது.

(நகரொரித்த-கமழ்முடியன்) இராவணனைக் கொன்று லங்கைச்வர்யத்தை விபீஷணனுக்காக்கினபின் தன்னுடைய முடிதரிக்கப்பெற்றதுபோலும். “…. = அபிஷிச் ச லங்கார்ம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வா: ப்ரமுமோதஹ.” என்ற வான்மீகி வசனமுங் காண்க. அடியவர் முடிசூடப்பெறுவது தன் பேறாயிருக்கை.

கடல் ஞாலத்து அளிமிக்கான் = இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன் என்கை.  பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு. ‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ருஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி காண்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு? “ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு;  என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-என்பதும் ஸித்தாந்தமாகிறதிங்கு.

English Translation

The Lord of exceeding perfection bears the fragrant Tulasi crown.  For the sake of the beautiful sweet-tongued Sita in confinement, he burnt the fierce demon Ravana's ocean-girdled city. If he does not desire my mind, we have nothing to lose

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain