nalaeram_logo.jpg
(3311)

நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை,

பொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த,

கறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை,

சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே.

பதவுரை

நிறைவினால் குறைவு இல்லா

-

குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும்

நெடு பணை தோள்

-

நீண்டு பணைத்ததோள்களையுடையவனும்

மடம்

-

அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான

பின்னை

-

நப்பின்னையினுடைய

முலை அணைவான்

-

திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக

(மணப்பதற்காக)

பொறையினால்

-

வருத்தங்களைப் பொறுத்திருந்து

பொரு விடை ஏழ் அடாத்து உகந்த

-

கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும்

கறையின் ஆர் துவர் உடுக்கை

-

(நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும்

கடையா

-

பால்கறக்கும் முங்கிற்குழாயையும்

கழிகோல்

-

கையிலேஉடையவனும்

சறையினார்

-

தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான்

கவராத

-

விரும்பாத

தளிர்நிறத்தால் குறைவு இலம்

-

தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நிறைவினால்.) நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்வியநிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.  கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ஸமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருமவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸூராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் எழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அவளை மணஞ்செய்து கொண்டானென்றவரலாறு முன்னடிகட்கு அறியத்தக்கது.

பொறையினால்=நப்பின்னையை எப்படியாவது பெற்றுவிட வேணுமென்கிற ஆசையினால், பொறுக்கவொண்ணாத வ்யஸநங்களையும் பொறுத்துக்கொண்டமை தெரிவித்தவாறு. “எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்டவித்தை அவள் முலையாலே பிறந்த விமர்த்தமாக நினைத்திருந்தான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க.

பெரியதிருமொழியில் “மின்னினன்ன நுண்மருங்கல் வேயேய்தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழன்றடர்த்த மாலதிடம்” என்றவிடத்து வியாக்கியானத்தில்-“கருமாறிபாய்ந்தும் அணையவேண்டுமாய்த்து நப்பின்னைப் பிராட்டியின் வடிவழகு” என்றருளிச் செய்ததும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.  கருமாறிபாய்த வென்பது, கச்சிமாநகரில் காமாகூஷியம்மனாலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக்கூர்மையான இரண்டு சூலங்களிடையே உயரத்தில் நின்றும் குதிப்பதாம். பண்டைக்காலத்தில் ஏதேனும் இஷ்டஸித்தி பெறவேண்டுவார் இவ்வருந்தொழிலை வெகு சாதுர்யமாகச் செய்து அபாமொன்றுமின்றியே உயிர்தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர்.  மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்களென்றால் இதனால், அவர்கள் பெறவிரும்பியே வஸ்து மிகச்சிறந்ததென்பது விளங்குமன்றோ.  அப்படியே நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்ததாகும் இவ்வாக்கியம்.

கறையினார் துவருடுக்கை இத்யாதி. “ஆநிரைமேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய், கானகமெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனிவாட” என்கிறபடியே ஸ்ரீகோபால க்ருஷ்ணன் காடுகளிலே திரியுங்கால் கொள்ளுங் கோலம் இவ்வடியில் வெகு அழகாக வருணிக்கப்படுகிறது.  பலபல காட்டுப்பழங்களைப் பறித்துத் துணியிலே கட்டிக்கொண்டு தின்பனாதலால் கறையினார்துவருடுக்கை எனப்பட்டது.  இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“இடையர் காட்டுக்குப் போம்போது முள்கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது. ……காட்டில் பழங்களைப் பறித்திடுகையாலே கறைமிக்கிருக்கும்; அத்தாலே கறைமிக்க துவராயிற்று உடுக்கை.”

கடையாவின கழிகோல்-கடையாவோடு சேர்ந்த கழிகோல் என்றபடியாய்இ கடை யாவும் கழிகோலும் என்றதாம். பால் கறப்பதற்குக் கொள்ளும் மூங்கிற் குழாய்ப்பாத்திரம் கடையா எனப்பெயர் பெறும்.  கழிகோல்-ஸ்வாதீனப்படாத பசுக்களை நியமிப்பதற்காக வைத்துக்கொள்ளும் கோல் அன்றிக்கே, முன்னணைக்கன்று பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்கு, சொறுக்கோலென்று அதன் மூஞ்சியிலே கட்டிவிடுவர்கள்; அதைச் சொன்னாயுண்ணாமைக்கு, கொறுக்கோலென்று அதன் மூஞ்சியிலே கட்டிவிடுவர்கள்; அதைச் சொன்னதாகவுமாமம. தங்களக்கென்று ஓர் இருப்பிடமில்லாத ஸந்நியாஸிகள் தங்களுடைய பிகூஷா பாத்திரமான சிக்கம் முதலானவற்றைக் கையோடே கொண்டிருக்குமாபோலே இடைச்சாதியில் மெய்ப்பாடனான கண்ணபிரான் கடையாவும் கழிகோலும் கையிலேகொண்டு திரிவானாயிற்று.

சறையினார்=இடையர்கள் அரையிலே கட்டிக்கொள்வதொரு மணியுமுண்டு; சறைமணியென்று அதற்குப்பெயர்.  “இடையர் அரையிலே கோத்துக்கட்டி முன்னே போகாநின்றால் அந்த த்வனிவழியே பசுக்களெல்லாம் ஒடிவரும்படியாயிருப்பதொன்று”.  என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் காண்க. அந்த மணியையடையவன் என்கை. அன்றிக்கே, சறை என்று தாழ்வு; இடக் கை வலக்கையறியப் பெறாமே தாழ்ந்த இடைக்குலத்திலே பிறந்தவன் என்றதாகவுமாம்.  அன்றிக்கே, சறையென்று சறாம்பியிருக்கையாய், உடம்பைப் பேணாதிருக்கிறவன் என்றதாகவுமாம்.  இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“அல்லாத இடையர் விஷூஅயந ஸங்க்ரமணங்களுக்கு உடம்பிருக்கத் தலை குள தல்இ உடம்பிலே துளிநீர் ஏறிட்டுக் கொள்ளுதல் செய்வீர்களாகில், இவனுக்கு அது செய்யவும் அவஸரமற்றிருக்குமாயிற்று பசுக்களின் பி;ன்னே திரிகையாலே. ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாத அவ்வடிவை அணைக்கைக்காயிற்று இவள் ஆசைப்படுகிறது.”

ஸ்ரீராமாயண-அயோத்யா காண்டத்தில், பட்டாபிஷேகார்த்தமான சில நியமங்களோடே கூடியிருக்கின்ற ஸ்ரீராமபிரானைக் குறித்துப் பிராட்டியருளிச்செய்ததான “…. = தீகூஷிதம் வ்ரதஸம்பந்நம் வராஜிநதரம் சுசிம், குரங்கச்ருங்கபாணிஞ் ச பச்யந்தீ த்வா பஜாம்ய ஹம்.”  என்கிற ச்லோகத்தை நம்பிள்ளை இங்கு ஈட்டில் வியாக்கியானித்தருளுமழகு வாசாமகோசரம். ரஸிகர்கள் விரும்பி நோக்கத்தக்கது.

English Translation

The Lord wears a pearl necklace, and robes dyed red.  He carries a milk-pail and a grazing staff.  He deftly subdued seven fierce bulls for the joy of embracing the breasts of comely Nappinnai with bamboo-slim arms, if he does not desire my pink cheeks, we have nothing lose

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain