nalaeram_logo.jpg
(3310)

மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,

விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,

படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,

நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே.

பதவுரை

மடநெஞ்சால் குறைவு இல்லா தாய் மகள் செய்த ஒரு பேய்ச்சி

-

நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட

தாய் மகள் செய்த

-

யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட

ஒரு பேய்ச்சி

-

பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய

விடம் நஞ்சம்

-

கொடிய விஷம்பொருந்திய

முலை

-

முலையை

சுவைத்த

-

உறிஞ்சியுண்டவனும்

மிகு ஞானம் சிறு குழவி

-

மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும்

படம் நாகம்அணைகிடந்த

-

படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும்

பரு வரை தோள்

-

பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும்

பரம்புருடன்

-

புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும்

நெடு மாயன்

-

எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்

கவராத

-

விரும்பாத

நிறைவினால் குறைவு இலம்

-

அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.  பூதனையென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத்துர்ங்கிக்கொண்டிருந்த ஸ்ரீக்ருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை உண்ணக்கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாதவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளை முடித்திட்டனன் என்கிறவரலாறு முன்னடிகட்கு அறியத்தக்கது.

ஆஸூரப்ரக்ருதியான பூதனைக்கு “மடநெஞ்சால் குறைவில்லா” என்று விசேஷணமிட்டது ஏன்? என்னில்; அப்பூதனை தன்னுருவத்தை மறைத்து யசோதைப் பிராட்டிபோல் பாவனை காட்டி வந்தாளாகையாலே தாய்போலப் பரிவை ஏறிட்டுக்கொண்டு வந்தாளென்றவாறு.  “பெறற்தாய்போல் வந்தபேச்சி பெருமுலையூடு உயிரை வற்றவாங்கியுண்டவாயன்” என்றார் திருமங்கையாழ்வாரும். பூதத்தாழ்வாரும் “மகனாகக்கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை, அகனாரவுண்பனென்றுண்டு, மகனைத்தாய் தேறாதவண்ணம் திருத்தினாய்” என்றார்.  (இதன் கருத்து:-நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்து உன்னைக ;கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய்போன்று பரிவுகாட்டி உன்னை வாரி யெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனை காட்டி அம்முலையைச் சுவைத்துண்பவன்போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய்.   அதுமுதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று; ‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத்துணுக்கென்று அவன் அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றவாறு.)

செய்தொரு என்றிவிடத்தில் தொகுத்தல் விகாரம்; ‘செய்தவொரு’ எனவிரியும்.

விடநஞ்ச முலைசுவைத்தஸ்ரீவிஷம் என்றும் நஞ்சம் என்றும் பர்யாயமாயிருக்க, இரண்டுசொற்களையும் சேர்த்துச்சொன்னதனால் விஷத்தின் கொடுமை காட்டப்பட்டதாகும்.   நாட்டில் விஷங்களெல்லாம் அம்ருதம் என்னலாம்படியான விஷம் என்பர்.

மிகுஞானச் சிறுகுழவி=பாகவதர்கள் சிறுமாமனிசர் என்று பெயர் பெற்றதுபோலப் பகவானும் மிகுஞானச் சிறுகுழவி யென்று பெயர் பெற்றனாயிற்று. ஸர்வஜ்ஞசிசு என்றபடி. வயிறாரப்பாலுண்டபடியாலே குழந்தைக்குப் படுக்கை தேட்டமாயிற்று; படுத்துக்கொண்டது என்கிறார்போலும் படநாகத்தணைக்கிடந்த என்பதனால்.

நிறைவினால் குறைவிலம்ஸ்ரீநிறைவு என்பது பூர்த்தி; இங்கு ஸ்த்ரீத்வபூர்த்தியைச் சொல்லுகிறது. அதாவது அடக்கம்.  எம்பெருமானாகவே வந்து திருவுள்ளம் பற்றுவனென்று எண்ணி இதுவரை அடக்கத்தோடிருந்தேன்; இனி அதை விட்டுத்தொலைக்கவேண்டியதே

போலும் என்றவாறு.

English Translation

The great Lord who sleeps on the hooded bed has mountain-like arms.  He is the wonder child who drank from the breasts of the ogress putana, -who came disguised as a loving mother, if he does not desire my comeliness, we have nothing to lose

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain