nalaeram_logo.jpg
(3309)

மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,

அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,

பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,

மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே.

பதவுரை

மணி மாமை குறைவு இல்லா

-

அழகிய நிறம் நிரம்பி யிருக்கப் பெற்ற

மலர்மாதர்

-

பூமகளான பெரியபிராட்டியார்

உறை

-

நித்யவாஸம் பண்ணப்பெற்ற

மார்பன்

-

திருமார்பையுடையவனும்

அணிமானம் தட வரை தோள்

-

அழகியதாகப் பெருத்து திருத்தோள்களையுடையவனும்

அடல் ஆழி தடகையன்

-

தீக்ஷ்ணமான திருவாழியைப் பெரிய திருக்கையிலேயுடையவனும்

பணி மானம் பிழையாமே

-

கைங்கர்ய வ்ருத்திகள் தப்பாதபடி

அடியேனை

-

அடியேனை

பணிகொண்ட

-

கிங்கரனாக ஆக்கிக்கொண்டவனும்

மணி மாயன்

-

நீலமணிவண்ணனுமான எம்பெருமான்

கவராத

-

விரும்பாத

மட நெஞ்சால் குறைவு இலம்

-

விதேயமான நெஞ்சில் அபேக்ஷையுடையோமல்லோல்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மணிமாமை)  பிராட்டியோடே கூடியிருக்குமழகைக்காட்டி என்னையடிமை கொண்டவன் விரும்பாத நெஞ்சால் ஒரு காரியமில்லையென்கிறாள். குற்றங்களையும் நற்ற

மாக உபபாதித்து அருள்புரிவிக்கின்ற பெரியபிராட்டியாரும் கூடவிருக்கச்செய்தே என்னை உபேக்ஷித்திருக்குமாகில் என்னுடைமையால் எனக்குத்தான் ப்ரயோஜனம் என்?  என்கிறாள்.

“மணிமாமை குறைவிலமே” என்று நான் வெறுத்ததுபோலே வெறுக்கவேண்டாமல் நித்ய  ஸம்ச்லேஷம் பெற்றிருக்கிறவளும், புஷ்பத்தில் பரிமளத்தையே வடிவாக வகுத்தாற்போலே

ஸௌகுமார்யத்தில் சிறந்திருக்கிறவளுமான பெரியபிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பையுடையவனும், அழகிய பருத்த திருத்தோள்களையுடையவனும், பிராட்டியும் தானுமான சேர்த்திக்கு அஸ்தாநே பயஸங்கைபண்ணி மங்களாசாஸநபரனாயிருக்கும் திருவாழி யாழ்வானைக் கையிலேந்தினவனும், இளையபெருமாளை அடிமைகொண்டாப்போலே ஏற்கனவே என்னையுமடிமைகொண்டவனும், நீலமணிபோன்றழகிய வடிவுபடைத்தவனுமான பெருமான் விரும்பாத நெஞ்சு எனக்கும்வேண்டா.

பணிமானம் பிழையாமே என்றவிடத்து ஒரு ஜதிஹ்யம்:-எம்பெருமானார் மடத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யாநிற்க, அவர்களுக்குத் தீர்த்தம் பரிமாறுகின்ற கிடாம்பியாச்சான் நேரேநின்று பரிமாறாமல் ஒரு பக்கமாயிருந்து பரிமாறினாராம்;  அதைக் கடாக்ஷித்த எம்பெருமானார் ஓடிவந்து முதகிலேயடித்து ‘உடோஇ இப்படியா பரிமாறுவது? நேரேநின்றன்றோ பரிமாறவேணும்’ என்று சிக்ஷிக்க, அப்போது ஆச்சான் “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்டருளிற்றே!” என்று உகந்தாராம்.

ஆழ்வார் தாம் செய்துபொருகிற வாசிககைங்கர்யத்தைப்பற்ற “பணிமானம் பிழையாமே யடியேனைப்பணிகொண்ட” என்கிறாரென்றுணர்க.

“கவராத மடநெஞ்சால் குறைவிலமே” என்றவிடத்தில் நஞ்சீயர் அருளிச்செய்வராம்; *கோவைவாயாளென்கிற திருவாய்மொழியில் ‘பூசுஞ்சாந்து என்னெஞ்சமே’ என்னும்படி அப்போது அப்படிவிரும்பினவன் இன்று இப்படி உபேக்ஷிக்கையாலே, நாயகன் தாமதித்து வந்தானென்று அவன் முன்னிலையில் சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப்போலே என்னெஞ்சு எனக்கு வேண்டாவென்கிறாள் என்று.

English Translation

The gem-hued Lord with mountain-like arms bears the fierce discus. The peerless lotus-dame Lakshmi resides on his chest.  He has taken me into his service fully.  If he does not desire my frail heart, we have nothing to lose

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain