nalaeram_logo.jpg
(3307)

தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,

குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்

வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,

தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே.

பதவுரை

தழுவி நின்ற

-

விட்டு நீங்காத

காதல் தன்னால்

-

(பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே

தாமரை கண்ணன் தன்னை

-

செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து

குழுவு மாடம் தென்குருகூர்

-

திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான

மாறன் சடகோபன்

-

ஆழ்வார்

சொல்

-

அருளிச்செய்த

வழு இலாத

-

குறையற்ற

ஒண் தமிழ்கள்

-

அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய

ஆயிரத்துள்

-

ஆயிரம் பாட்டினுள்

இ பத்தும்

-

இத்திருவாய்மொழியை

தழுவ

-

கருத்தோடுகூட

பாடி

-

இசைபாடி

ஆட வல்லார்

-

களித்துக் கூத்தாடவல்லவர்கள்

கைகுந்தம் ஏறுவர்

-

திருநாட்டில் ஏறப்பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தழுவிநின்ற.)  இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.

திருத்துழாய் பரிமளத்தோடு கூடவே அங்குரிக்குமாபோலே ஆழ்வார் “அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து”  என்றபடியே பகவத் விஷயமானகாதலோடு கூடவே அவதரித்தவராதலால் “தழுவிநின்ற காதல் தன்னால்” என்றார்.  * ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந:இ ஸாத்விகஸ்ஸ து விஜ்ஙேய: ஸ வை மோக்ஷ்ர்ர்த்தசிந்தக.” என்கிறபடியே எம்பெருமான் தனது செந்தாமரைக் கண்களால் கருவிலே கடாக்ஷித்தருளியே இந்தக் காதலை உண்டுபண்ணினானென்பது தோன்றத்  தாமரைக்கண்ணன்தன்னை என்கிறார். “மறக்குமென்று செந்தாமரைக்கண்ணெடும், மறப்பறவென்னுள்ளே மன்னினான்” என்றார் தீழும்.

குழுவுமாடத்தென்குருகூர் என்றவிடத்திற்கு ஈடு;-“*ஸர்வஞ்ச குசலம் க்ருஹே* என்னுமாபோலே ஆழ்வார்க்கு ஆர்த்தி மிகமிக ஸர்வேச்வரன்வரவு தப்பாது என்று திருநகரி குடிநெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.” என்பது.

இதன் கருத்து யாதெனில்; -பெருமாள் ராவணவதம் செய்தருளித் திருவயோத்யைக்கு மீண்டெழுந்தருளும்போது பரத்வாஜமஹர்ஷி பக்கலிலே போந்து தெண்டனிட்டு “அயோத்தியில் பரதன் முதலிய யாவரும் ஸௌக்கியமாக இருக்கிறார்களா?  அவ்விடத்துச் செய்தி ஸ்வாமிக்கு ஏதேனும் தெரியுமோ?” என்று கேட்க.  அதற்கு விடை கூறுகின்ற முனிவர்  “… ஸ்ரீ பங்கதிக்தஸ் து ஜடிலோ பரதஸ் த்வாம் பரதீக்ஷ்தே.  பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ் ச குசலம் க்ருஹே.” என்றார். *கங்கலும் பகலும் கண் துயிலறியாமே கண்ணநீர் கைகளாலிறைத்துச் சேற்றிலே அழுந்திக்கிடக்கிறான் பரதாழ்வான் என்று சொல்லிவிட்டு ‘க்ருஹத்தில் எல்லாரும் குசலந்தான்’ என்றார் முனிவர்.  பரதாழ்வான் வாசாமகோசரமாகத் துடித்துக்கொண்டிருக்கும்போது “ஸர்வஞ்ச குசலம் க்ருஹே” என்று சொல்லக்கூடுமோ?  என்கிற சங்கைக்குப் பரிஹாராமாக நம்பிள்ளையருளிச் செய்கிற அர்த்தம் பரமயோக்யமானது: ‘ஆர்த்தி பொறுக்கவொண்ணாதபடி மிகுந்தவாறே எம்பெருமான் சடக்கெனவந்து முகங்காட்டியே தீருவன்’ என்பதை நன்கு உணர்ந்தவர்களாகையாலே பரதாழ்வானுடைய அதிமாத்ரமான ஆர்த்தியைக கண்டவர்கள் ‘ஸ்ரீராமபிரான் அடுத்த க்ஷ்ணத்தில் அவசியம் வந்தேதீருவன்’ என்று திண்ணமாக நம்பி வெகு ஸந்தோஷத்துடனே குழுமியிருந்தார்களாம்.  ஆனது பற்றியே முனிவர் “ஸர்வஞ்ச குசலம் க்ருஹே” என்றார்.  அதுபோலவே இங்கும் ஆழ்வாருடைய ஆர்த்தியின் கனத்தைக்கண்ட குருகூர்வாழும் நல்லார்கள் ‘இப்போது எம்பெருமான் வருகை தப்பாது’ என்று தேறிக் குழுமியிந்தார்களாம்:  ஆகவே குழுவுமாடத் தென்குருகூர் எனப்பட்டது-என்பது இன்சுவை மிக்கபொருள்.

மாறன்-ஸம்ஸாரநிலைக்கு மாறாக இருந்தவர்; அல்லது ஸம்ஸாரத்தை மாற்றினவர். இப்படிப்பட்ட ஆழ்வார் பகவத் குணங்களிலொன்றும் குறையாமே அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பத்தையும் ஸார்த்தமாகப் பாடியாடவல்லார் வைகுந்தமேறுவர் என்றாராயிற்று.

English Translation

This decad of the perfea thousand Tamil songs, sung by Satakopan of tall-mansioned kurugur city, is addressed with embracing love to the lotus-eyed Krishna.  Those who can sing and dance to it with love will ascend Heaven

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain