nalaeram_logo.jpg
(3303)

அறிந்து அறிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே,

நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து,

பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்

நறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே.

பதவுரை

நறுதுழாயின் கண்ணி அம்மா

-

பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே!

நான் உன்னை கண்டுகொண்டு

-

நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று

அறிந்து அறிந்து

-

உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து

தேறி தேறி

-

மிக்க தெளிவையுடையேனாகி

யான்

-

இப்படித் தெளிவுபெற்ற நான்

எனது ஆவி உள்ளே

-

என் நெஞ்சுக்குள்ளே

நிறைந்த ஞானம் மூர்த்தியாயை

-

பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை

நின்மலம் ஆக வைத்து

-

விசதமாக அநுபவித்து

பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்

-

பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே;  நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய, ‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்; பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி, பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்லவிருக்கிறார்.

இப்பாட்டில், “நறுந்துழாயின் கண்ணியம்மா! நானுன்னைக்கண்டு கொண்டு பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்றருளிச்செய்வதைப் பார்த்தால், * கோலமேனி காணவாராய்* என்று அபேக்ஷித்தபடியே எம்பெருமான் வந்து காட்சி தந்துவிட்டதாகத் தோன்றும்.  உண்மை

அப்படியில்லை; அடுத்தபாட்டில் “கண்டுகொண்டு பாடியாட-வந்திடகில்லாயே” என்றிருக்கையாலே இன்னமும் காணப்பெற்றிலர்என்றே கொள்ளவேணும்.  ஆனால், இப்பாட்டில் நானுன்னைக் கண்டுகொண்டே என்கிறாரே; இதற்குப்பொருள் என்? என்னில்; மாநஸஸர க்ஷ்ர்த்காரமென்றும் பாஹ்யஸாக்ஷ்ர்த்காரமென்றும் காண்கை இரண்டு விதம்; *முனியே நான்முகனுக்கு உட்பட்டதெல்லாம் மாநஸஸாக்ஷ்த்காரமேயாகும்.  ஆகவே இப்பாட்டில் சொன்னது மாநஸஸாக்ஷ்ர்த்காரமென்றும்,  மேற்பாட்டில் விரும்புவது பாஹ்யஸாக்ஷ்ர்த்காரமென்றும் அறிக.  ஆசார்யஹருதயத்தில் (முடிவில்) “கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதிகண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய்” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம்.

அறிந்தறிந்து என்றும், தேறித் தேறி என்றும் இரட்டித்துச் சொன்னதன் கருத்தாவது, எம்பெருமானருளாலே அர்த்த பஞ்சகத்தையும் தாம் அறியப்பெற்றபடியை அறிந்தறிந்து என்று கூறி, அதில் ஒவ்வொன்றிலும் நல்தெளிவு பெற்றபடியைத் தேறித்தேறி யென்று கூறினாரகை.  (அது எங்ஙனேயென்னில்; 1. எம்பெருமானுடைய பரத்வத்தை யறிதல் பரஸ்வரூபஜ்ஞானம், ‘அவன் ஆச்ரித பாரதந்த்ரியமே வடிவாகவுடையவன்’ என்று அறிதல் அந்த ஜ்ஞானத்தின் தெளிந்தநிலை 2.  நாம் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்று அறிதல் ஸ்வஸ்வரூபஜ்ஞானம்; பாகவத சேஷத்பர்யந்தமாக அறிதல் அந்த ஞானத்தின் தெளிந்தநிலை. 3. எம்பெருமானுடைய திருவடிகளையே உபாயமாகப் பற்றுகை உபாஸ்வரூபஜ்ஞானம். அவனை நாமாகப் பற்றுகிற பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷ்கமென்றிருக்கை அந்த ஞானத்தின் தெளிந்தநிலை. 4. * ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்கை புருஷார்த்த ஸ்வரூப ஜஞானம்.  கைங்கரியம் செய்வதனால் உண்டாகிற ஆனந்தம் எம்பெருமானுடையதேயாகும்; அந்த ஆனந்தத்தைக்கண்டு சைதந்ய கார்யமாக ஆனந்திப்பதே நமக்கு  உற்ற ஆனந்தம் என்றிருக்கை அந்த ஞானத்தில் தெளிந்தநிலை 5. அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யமென்றிருக்கை விரோதிஸ்வரூப ஜ்ஞானம்.  கைங்காரியத்தை நான் செய்கிறேன், எனக்காகச் செய்கிறேன் என்று செய்கை பரமவிரோதியென்றுணர்கை அந்த ஞானத்தில் தெளிந்தநிலை.  ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை ஸாமாந்யரூபேணவும் விசேஷ ரூபேணவும் உணர்ந்து தெளிவு பெற்றபடியை அறிந்தறிந்து தேறித்தேறி என்றதனால் அருளிச்செய்தாராயிற்று.

இப்படி நீ அறிவிக்க அறிந்த யான் பரிபூர்ண ஜ்ஞாநஸ்வரூபனான உன்னை என்னுடைய நெஞ்சினுள்ளே மிக விசதமாக அநுஸந்தித்து, சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவுகேடு தவிரப்பெற்றேன்.  இதில் த்ருப்திபெற முடியுமோ? என்கிறார்.

மூன்றாமடியில் ‘இடரும்’ என்று பல பிரதிகளிலும் காண்கிறது;  ‘இடறும்’ என்று வல்லின றகரமான பாடமே யுக்தம்.  “ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவர்”  (4-1-7) என்று கீழேயும் ;அருளிச்செய்தார். ப்ரஜை தெருவிலே யிடறி” என்ற ஸ்ரீவசநபூஷணமும் காண்க.  இடறுதல் - கிலேசப்படுதல்.

நறுந்துழாயின் கண்ணியம்மா என்ற விடத்திற்கு ஈடு;-“இவ்வறிவு பிறக்கைக்கு  அவனிட்ட பச்சையிருக்கிறபடி; வைத்த வளையத்தைக்காட்டி அவ்வடிவிலே குருகுலவாஸத்

தைப் பண்ணுவித்து  அறிவு பிறப்பித்தாயிற்று தனக்காக்கிக்கொண்டது.”

ஆக இப்பாட்டால் ஆழ்வார் தாம் பெற்ற அளவைச் சொன்னாராயிற்று.

English Translation

Lord of fragrant Tulasi garland!  In the depth of my soul, I see you as an icon of pure knowledge Losing myself in thought and recovering time and again, through birth and death I have held you high, and over-come my despair

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain