nalaeram_logo.jpg
(3301)

அப்பனே அடலாழியானே, ஆழ்கட லைக்கடைந்த

துப்பனே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,

எப்பொழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,

இப்போழுதே வந்திடாயென் றேழையேன் நோக்குவனே.

பதவுரை

அப்பனே

-

உபகாரம் செய்யுமியல்வினனே!

அடல் ஆழியானே

-

வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே!

ஆழ் கடலை

-

ஆழமான கடலை

கடைந்த

-

கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த

துப்பனே

-

ஸமர்த்தனே!

உன் நான்கு தோள்களும்

-

உனது திருத்தோள்கள் நான்கையும்

கண்டிட கூடும் கொல் என்று

-

ஸேவிக்க நேருமோ! என்று எண்ணி

எப்பொழுதும்

-

எப்போதும்

கண்ணநீர் கொண்டு

-

கண்ணீரோடிருந்து

ஆவி துவர்ந்து துவர்ந்து

-

பிராணன் மிகவும் உலர்ந்து

இப்பொழுதே வந்திடாய் என்று

-

உடனே எழுந்தருள வேணுமென்று அபேக்ஷித்து

ஏழையேன்

-

சபலனான நான்

நோக்குவன்

-

சுற்றும் பாராநின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு ‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்துஇ நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பிஇ வரும்போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார்.

அப்பன் என்று உபகாரம் செய்பவனைச் சொல்லுகிறது.  நீ முகங்காட்டாதபோதும் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படியாக இவ்வளவு மஹோபகாரம் பண்ணினவனே!

என்றபடி.  எனக்கு நீ அருள்செய்ய நினைத்தால் என்னுடைய பாபங்கள் குறுக்கே நிற்கவற்றோ? “எப்போதுங் கைகழலா நேமியான்  நம்மேல் வினைகடிவான்” என்றபடியே என் வினைகளைத் துணிக்க திருக்கையிலே திவ்யாயுதமுண்டே யென்பார் அடலாழியானே! என்கிறார்.  கையுந் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டன்றோ நான் கூப்பிடுகிறது என்றவாறுமாம்.

ஆழ்கடலைத் கடைந்த துப்பனே! = உன்னளவிலே பல்லாண்டு பாடாதே உன் திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொள்ள நினைப்பார்க்கும் காரியம் செய்து தலைக்கட்டுகின்ற வுனக்கு என்னெதிரேவ்நது நின்று காட்சி தருகைக்குத் திருவுள்ளமுண்டாகாதது என்னோ? ‘நம் உடம்பை நோவுபடுத்துகின்றவர்களுக்குத் தான் நாம் காரியம் செய்யக் கடவோம்’ என்று ஏதேனும் நியமம் கொண்டிருப்பதுண்டோ? “கடலைக்கடைந்த துப்பனே!” என்ற இவ்விடத்தில் விவக்ஷிதமான துப்பாவது -“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!” என்கிறபடியே தேவர்களுக்கு உப்புச்சாறு எடுத்துக் கொடுக்கிற வியாஜத்தாலே தான் பெண்ணமுதாகிற ஸ்ரீ மஹாலக்ஷ்மியை லபித்தஸாமர்த்தியம்.

உன் தோள்கள் நான்கும் கண்டிட = கடல்கடைந்த காலத்திலே தேவர்கள் எப்போது நம் உணவு கடலில் நின்றும் கிளரப்போகின்றதோ என்று கடலைக்கவிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்களே யல்லது தோளழகிலே துவக்குண்டு காப்பிட்டார்களில்லை;  அக்குறைதீர “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா! பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று திருத்தோள்களுக்கு மங்களாசாஸநம் பண்ணவேணு மென்றதன்றோ நான் பாரித்திருப்பது. கண்ணபிரானாய் வஸூதேவ க்ருஹத்திலே அவதரித்தபோது “ஜாதோஸி தேவ தேவேஸ! ஸங்க சக்ர கதாதர!” என்ற நான்கு திருத்தோள்களோடே அவதரித்தாயென்றும், பிறகு மாதா பிதாக்கள் “உபஸம்ஹர விச்வாத்மந்! ரூபமேதத் சதுர்ப்புஜம்” என்று, நான்கு திருத்தோள்களோடு கூடின இத்திருவுருவத்தை மறைத்திடாய் என்று வேண்டிக்கொள்ள, அப்படியே மறைத்திட்டதாகவும், உகவாதார்க்குக் கூசி மறைத்திட்ட அதனை உகந்த பெண்களுக்குக் காட்டிக்கொடுத்தாயென்றும் கேள்விப்படுகிறேன்; அவ்வண்ணம் எனக்கும் நீ காட்டிக் கொடுக்க நேர்ந்து நான் காணப்பெறலாகுமோ வென்று பாரித்துக் கிடக்கின்றேனென்பது உள்ளுறையும் கருத்து.

கண்ண நீர் கொண்டு = ஆனந்தாச்ரு, சோகாச்ரு என்று இருவகையான கண்ணீர்கள் உண்டு.  அவ்விரண்டும் இங்கு விலக்ஷிதமாகலாம்; அத்திருவுருவத்தை நினைத்தவளவிலேயே ஒரு ஆனந்தம் பெருகிச் செல்லுமாகையாலே ஆனந்தாச்ருவாகும். ‘நாம் பாரிக்கிறபடி நமது கண்களுக்குப் புலப்படவில்லையே!’ என்று வருத்தமுமாகையாலே சோகாச்ருவமாகும். ஆவி துவர்ந்து -பிராணன் பசையற உலர்ந்து என்றபடி. ஆவி அடியோடு தொலையமாட்டெ னென்கிறது என்கிற வருத்தத்தைக் காட்டினபடி.

இப்பொழுதே வந்திடாயென்று = தாமதித்து வந்தாயாகில்; திருப்புளியாழ்வாரைக் கட்டிக்கொண்டு அழவேண்டியதாகு மத்தனை யுனக்கு; இப்பொழுதே வந்தாயாகில் என் கண்ணிலே விழிக்கப்பெறுவாய் என்றவாறு.  ஏழையேன நோக்குவனே! = இங்ஙனே சொன்னவளவிலும் ஸர்வஜ்ஞன் நினைவறிந்து வாராதிருப்பனோ? அவசியம் வந்தே தீருவேன்; ஆபத்து மிகுந்தவாறே தவறாது வந்து தோன்றுகிற வழக்கத்தை கஜேந்திராழ்வான் ப்ரஹ்லா தாழ்வான் போல்வார் பக்கலிலே கண்டிருக்கிறோமாகையாலே வந்தே தீருவேன் என்று நிச்சயித்து சாபலத்தாலே திசையெங்கும் நோக்குகின்றேன் என்கை.

ஏழையேன் நோக்குவனே யென்றவிடத்தில் ஒரு ஐதிஹ்யமுண்டு; சோழராஜஸதஸ்ஸிலே திருக்கண்களையிழந்த கூரத்தாழ்வானை உடையவர் வரதராஜன் விஷயமாக ஒரு ஸ்தலம் பணிக்கும்படி நியமித்தார்; பேரருளாளன் வரந்தரும் பெருமாளென்று பேர்பெற்றிருக்கையாலே திருக்கண் தந்தருள்வன் என்று திருவுள்ளம் பற்றி அப்படி நியமித்தருளினார்.  ஆசார்ய நியமனத்தை யடியொற்றி ஆழ்வானும் வரதராஜஸ்தவ மருளிச்செய்து அதை உடையவர் திரு முன்பே விண்ணப்பம் செய்து வருகையில் “நீலமேகநிபம் அஞ்ஜநபுஞ்ஜச்யாம குந்தலம் அநந்தவயம் த்வாம்.  அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம் நேத்ரஸாத்குரகரிஸ! ஸதா மே.” என்கிற ச்லோக ரத்நத்தைத் திருச்செவி சாத்தின உடையவர் “ஆழ்வான்! இப்பாசுரம் கேட்டால் பெருமாள் இரங்காமையில்லை; உன்முகத்தைக்காட்டு பார்ப்போம்” என்றாராம். கனிந்த சொற்களுக்கு எம்பெருமான் காட்சிதந்தே தீருவன் என்று அன்பர்கள் நம்புவதற்குறுப்பான ஐதிஹ்யம் இது.

English Translation

My Father, Bearer of the sharp discus, Mighty one who churned the ocean! Will it ever happen that I see you with your four arms?  All the time with tears, -my life drying bit by bit, -I keep looking, Lord, come right now to this hapless self

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain