(3298)

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என்

வள்ள லேயோ வையங் கொண்ட வாமனாவோ என்றென்று,

நள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால்,

கள்ள மாயா உன்னை யென்கண் காணவந் தீயாயே.

 

பதவுரை

கொள்ள

-

அநுபவிக்கவநுபவிக்க

மாளா

-

எல்லைகாணவொண்ணாத

இன்பம் வெள்ளம்

-

ஆனந்தப்பெருக்கை

கோது இல

-

குறையற

தந்திடும்

-

உபகரிக்கின்ற

என் வள்ளலே

-

என் உதாரனே!

வையம் கொண்ட

-

(மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட

வாமனா

-

வாமன்மூர்த்தியே!

ஓ ஓ என்று

-

என்று ஆர்த்தியோடே சொல்லி

நள் இராவும் நன் பகலும்

-

இரவும் பகலும்

நான் இருந்து ஓலமிட்டால்

-

நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால்

கள்ளம் மாயா

-

க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே!

உன்னை

-

உன்னை

என் கண் காண

-

என் கண்கள் காணுமாறு

வந்து ஈயாய் ஏ

-

வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி ‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.  * தீர்ப்பாரையாமினிக்குமுன்னே * வீற்றிருந்தேழுலகில் “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்” என்று சொல்லும்படியாக அப்போது எம்பெருமான் தந்த பரமாநந்த ஸந்தோஹத்தைத் திருவுள்ளம்பற்றிக் “கொள்ளமாளா வின்பவெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளலே!” என்கிறார்.  கொள்ளக்கொள்ள மாளாத இன்பவெள்ளமாவது மேன்மேலும் பெருகிச்செல்கின்ற இன்பவெள்ளம்.  அதனைக் கோதில்லாதபடி தருகையாவது என்னென்னில்; பகவத் விஷயத்தை அநுபவித்துக் கொண்டே வரும்போது ‘அநுபவித்தது போதும்’ என்று தோன்றினாலும், ‘இதைவிட்டு இன்னொரு விஷயத்தை அநுபவிப்போம் என்று  ஆசை பிறந்தாலும் அது இன்பத்திற்குத் கோது; அத்தகைய கோது இல்லாதபடி தந்தனனென்றது “எப்பொழுதும் நான் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே’ என்னும்படியாகத் தந்தருளினனென்றபடி.

என் வள்ளலே! என்று சொல்லி ஓ! என்கிறார், இப்படி இப்போது கூப்பிடப்பண்ண நினைத்திருந்தால் வீற்றிருந்தேழுலகிலே அப்படியென்னை அநுபவிப்பிக்கவேணுமோ? என்கைக்காக.

வையங்கொண்ட வாமனாவோ! ஸ்ரீ ப்ரயோஜநாந்தர பரனான வொருவனுக்குக் காரியஞ் செய்யநினைத்து அழியாமறினவுனக்கு அநந்யப்ரயோஜநனான என் விஷயத்திலே இரங்குகை அரிதோ என்று கூறியவாறு.  வையத்தை இரந்த காலத்தில் வாமநவேஷமிருந்ததேயல்லது, வையங்கொண்ட காலத்தில் அஃது இல்லையே; த்ரிவிக்ரம வேஷமன்றோ அப்போது இருந்தது; அப்படியிருக்க ‘வையங்கொண்ட வாமனா!, என்றது என் என்னில்; ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் வாமநவேஷமொன்றே அழகின் மிகுதியால் நிலைத்திருக்கிறபடி. இந்திரனைப்போலே ராஜ்யம்பெற்று மீள வேண்டியவரல்லாமையாலே இங்ஙனே கூப்பிடுவதே இவர்க்குப் போது போக்கென்று “என்றென்று” என்பதனால் தெரிவிக்கப்படும்.  இப்படிப் பல திருமாங்களைச் சொல்லி இரவும் பகலும் நான் கூப்பிட்டால் என் கண்கள் விடாய் கெடும்படி நடையழகு காட்டி என் முன்னே வந்து நிற்கின்றிலையே! என்கிறார்.

 

English Translation

I stand and call out night and day, "O benevolent Lord!", "Faultless-uncontainable-flood-of-joy!", "O Lord-who-measured-the-Earth!", and many such names. Alas, you do not come.  Vicious Lord, grant that my eyes may see you!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain