nalaeram_logo.jpg
(3291)

தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,

பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,

மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,

அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே

பதவுரை

அன்னைமீர்

-

தாய்மார்களே!

தணியும்பொழுது இன்றி

-

சிறிதும் ஓய்வு இல்லாமல்

நீர் அணங்கு ஆடுதிர்

-

நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்;

(இவ்வெறியாடலினால்)

பிணியும் ஒழிகின்றது இல்லை

-

நோயோ தீர்கின்றதில்லை;

இது அல்லால்

-

நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே

பெருகும்

-

மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது;

இஅணங்குக்கு

-

இப்பெண்பிள்ளைக்கு

மணியில் அணி நிறம்

-

நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த

மாயன்

-

எம்பெருமானுடைய

தமர்

-

பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய

அடி நீறு கொண்டு

-

பாததூளியைக் கொண்டு வந்து

அணிய முயலில்

-

இடுவதற்கு முயற்சி செய்தால்

மற்று இல்லை கண்டீர்

-

(இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்கவுரைக்கின்றாளிப்பாட்டில்.

அந்தோ! சிறுபிள்ளைகள் போலே நீங்கள் செய்கின்றீர்களே!; (அதாவது) ஏதாவதொரு காரியத்தைச் சிறுபிள்ளைகள் செய்யாநின்றால் அதில் தகுதியின்மை கண்டு பெரியார் மறுத்தால், அப்பிள்ளைகள் அக்காரியத்தையே மேன்மேலும் பிடிவாதமாய் வலிந்து செய்து போருவது வழக்கம்.  அப்படியே நீங்களும் நான் மறுப்பதே ஹேதுவாகப் பிடிவாதங்கொண்டு வெறியாட்டந்தனையே விடாது செய்விக்கின்றீர்களே!; இதனால் பிணி ஒழியாததோடு பெருகிச் செல்லவுங்காணா நின்றோமே! என்கிறாள் முன்னடிகளில்.

நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய வடிவழகிலீடுபாடு கொண்ட பரம பாகவதர்களின் ஸ்ரீபாததூளியைக் கொண்டுவந்து…என்று இவள் சொல்லத் தொடங்கும் போதே தாய்மார்கள் ‘இவ்வரும் பெரும்பொருள் நமக்குக்கிடைக்க வழி எது?  மிகவும் துர்லபமான வஸ்துவைச் சொல்லுகின்றாயே!, இது ஸம்பாதிப்பது கஷ்டமாயிற்ளே!’ என்று சொல்ல; அன்னைமீர்! மாயன்தமரடி நீறுதன்னைக் கொண்டுவரவேண்டர் ‘அதைக்கொண்டு வரவேணும்; இவளுக்கு அதையிடவேணும்’ என்ற மநோரதித்தாலும் போதும்; அவ்வளவிலேயே நோய் தீர்ந்ததாகும், பாருங்கோள் என்கிறாள்.

மநோதமாத்திரமே பலன் அளிக்கவல்லதோ? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக ஈட்டில் “…-ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிற சுலோகத்தை யெடுத்துக்காட்டித் தெளிவு பிறப்பிக்கப்பட்டது.  இது, ப்ரபத்தியின் அங்கங்களைக் காட்டுகிறவொரு பாஞசராத்ரப்ரமாணம்.  இதில் ஆநுகூல்யத்தைப் பற்றின எண்ணம் போதுமென்றும், ப்ராதிகூல்யத்திலோ வென்னில், அதை விடுவோமென்கிற எண்ணம் போராது, விட்டேதீரவேணும் என்றும் சொல்லிற்று.  இதுபோலவே இங்கு மாயன்தமரடி நீறுகொண்டு இடவேணுமென்கிற முயற்சியளவே போதுமென்றும், பரிஹாராமாகச் செய்துபொருகிற நிஹீநக்ருத்யங்களை விடுவோமென்று எண்ணினால் மாத்திரம்போராது, கடுக விட்டே தீரவேணுமென்றும் தெரிவித்தவாறு.

இங்கே ஸ்ரீவைஷ்ணவ பாததூளியின் ப்ரபாவபரமாக ஒரு ஐதிஹ்யமருளிச்செய்வர். அகளங்க நாட்டாழ்வான் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களோடே ஓரிடத்திற்குச் செல்லுகையில் வழியிடையே ஒரு ஜைனக்கோவில் தென்பட்டது; அப்போது இராக்காலமாயு மிருந்தது. அக்கோவில்வாசடலில் சிங்கப்பதுமை யிருப்பதைக்காட்டி அவ்வாழ்வான் ‘பகவத்ஸந்நிதி ஸேவியுங்கள்’ என்று வேடிக்கையாகச்சொல்ல, அவர்களும் மெய்யென்றேயெண்ணி ஸேவித்த பிறகு இது ஜைநக்கோவில் என்றறிந்தவாறே மோஹித்து விழுந்தார்களாம்: அப்போது அருகேயிருந்த பிள்ளையுறங்காவில்லிதாஸர் தம்முடைய ஸ்ரீபாததூளியை  அவர்களுக்கு இடஇ மோஹம் எழுந்தார்களாம்.

English Translation

O Ladies, dancing like ones possessed!  Know that this will be of no avail.  Her fever will only increase, not subside.  Apply the dust from the feet of devotees.  Other than this, there is no cure for her spirits

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain