nalaeram_logo.jpg
(3244)

பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,

தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற

சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே

கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.

பதவுரை

பா இயல் வேதம்

-

சந்தஸ்ஸூக்கள் பொருந்திய வேதங்களாகிற

நல் பல மாலை கொண்டு

-

திவ்யமான பல மாலைகளைக் கொண்டு

தேவர்கள்

-

தேவர்களும்

மா முனிவர்

-

மஹா முனிகளும்

இறைஞ்ச நின்ற

-

ஆராதிக்கும்படி (உலகையளந்து) நின்ற

சே அடி மேல்

-

திருவடிகளின் மேலே

அணி

-

அணிந்த

செம் பொன் துழாய் என்றே

-

செவ்விதமாய் விரும்பத்தக்கதான திருத்துழா யென்றே

கூவும்

-

கூப்பிடா நின்றாள் (யாரென்னில்)

கோள் வினையாட்டியேன்

-

வலிய பாபத்தைப் பண்ணினவளான என்னுடைய

கோதை

-

சிறந்த கூந்தலையுடையளான பெண்பிள்ளை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள்.  மூலத்தில் “தேவர்கள் மாமுனிவரிறைஞ்சநின்ற சேவடி” என்றிவ்வளவேயுள்ளது: “உலகளந்த திருவடி” என்று வ்யக்தமாக இல்லை; “பாற்கடல் சோந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடா நிற்குமென்கிறாள்” என்றருளிச்செய்தார் ஆறாயிரப்படியில் பிள்ளான்.  மற்ற வியாக்கியானங்களில்-“உலகளந்தருளனவன்; திருவடிகளிற் திருத்துழாயை ஆசைப்படாநின்றாளென்கிறாள்” என்றுள்ளது.

பா இயல் வேதம்= பா என்று சந்தஸ்ஸூக்களைச் சொல்லுகிறது.  காயத்ரி, திரிஷ்டுப், அநுஷ்டுப், ஜகதீ என்றிப்படி பலவகைப்பட்ட சந்தஸ்ஸூக்கள் பர்ஸித்தங்கள். என்று நியதியும் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சந்தஸ்ஸூக்களிலே வர்த்திப்பதான வேதஸூக்தங்களையும் திவ்யமான மாலைகளையுங்கொண்டு தேவர்களும் ஸநகஸந்தநாதி மஹர்ஷிகளும் ஆராதிக்கும்படி லோகத்தை யளந்துநின்ற செவ்விய திருவடிகளின்மேலே சாத்தப்பட்ட திருத்துழாயையே சொல்லிக் கூப்பிடாநின்றாள்; அதாவது, ‘அந்தப் திருத்துழாய் வேணும், அந்தத்; திருத்துழாய் வேணும், அந்தத்; திருத்துழாய் வேணும்’ என்று அதுவே வாயவெருவதலாக இராநின்றாள், அந்த வஸ்து இப்போது கிடைக்கமாட்டாதது என்பதை அந்தோ! அறிகின்றிலள்-என்றாளாயிற்று.

கோள்வினையாட்டினேன் என்று சொல்லிக்கொள்ள வேண்டும்படி இங்கு என்ன விஷயமுள்ளது? தன் மகள் இங்ஙனே வாய் வெருவுவது புண்ய பலன் என்று நினைக்கத்தட்டில்லையே? என்று சங்கை பிறக்கும்; எதிர்மறையிலக்கணையால் இதற்குப்பொருள் கொள்ளவேணும். பகவத்விஷயத்திலே இவ்வண்ணம் ஈடுபட்ட பெண்பிள்ளையைப் பெற்ற என்னுடைய பாக்கியமே பாக்கியம் என்று சொல்லிக்கொள்வதே தாற்பரியமாகும். அன்றியே, தாய் என்பது உபாயாத்யவஸாயஸ்தானமதலால் மகளுடைய பதற்றத்தைக் கண்டு வருத்தப்பட்டுச் சொல்லுகிற பாசுரமாகவே தாய் பாசுரம் அமைகின்றபடியால் “வல்வினையேன்” என்றும் “கோள்வினையாட்டினேன்” என்றும் தன்னைச் சொல்லிக் கொள்வதும் பொருந்தும்; என்னலாம்.

கோள்வினை-முடித்தவல்லது விடாத பாபம். அநுபவித்தே அறவேண்டிய பாபம் என்னவுமாம்.

கோதை என்று மயிர்முடிக்கும் பூமாலைக்கும் பெயர். சிறந்த மயிர் முடியை யுடையவன் (அல்லது) அழகிய பூமாலையை யணிந்தவள் என்கிற பொருளில் இங்குக் கோதை என்ற சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது; ஆகு பெயர்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் இன்சுவை மிக்கவை;-“தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமத்தைத் தான்படுவதே!. இம்மாலையையுடைய இவள் வேறொரு மாலையை ஆசைப்படுவதே!. மார்வத்து மாலையானவிவள் வேறொரு மாலையை ஆசைப்படுவதே!. மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு மால் இவள்.”

English Translation

O The heavy pall!  My daughter cries for the golden-hued Tulasi garland adorning the lotus feet of the Lord, -whose praise is sung by Vedic seers and celestials

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain