(3240)

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,

இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,

சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,

மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே

 

பதவுரை

குறுக

-

பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி

உணர்வத் தொடு

-

ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு

மிக நோக்கி

-

நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி)

எல்லாம் விட்ட

-

(ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும் வெறுத்தவனாய்

இறுகல் இறப்பு என்னும்

-

ஸங்கோச மோக்ஷமாகிய கை வல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான

ஞானிக்கும்

-

ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும்

அப் பயன் இல்லை ஏல்

-

அந்த பகவதுபாஸநம் இல்லையாகில்

சிறுக

-

அற்பமாக

நினைவது

-

நினைப்பதற்குறுப்பான

ஒர்பாசம் உண்டாம்

-

ஒரு பந்தம் உண்டாகும்

பின்னும்

-

அதற்குமேலே

வீடு இல்லை

-

அந்தக் கைவல்ய மோக்ஷதட ஒரு நாளும் விட்டு நிங்குவதன்று;

மறுகல் இல்

-

ஹேயப்ரதிபடனான

ஈசனை

-

எம்பெருமானை

பற்றி

-

ஆச்ரயித்து

விடாவிடில்

-

நீங்காவிடில்

அஃதே வீடு

-

அதுவே பரமபுருஷார்த்தம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டிற்சொன்ன சுவர்க்கம்போலே அஸ்திரமல்லாமல் நிலை நின்ற மோக்ஷமான கைவல்யத்திலும் ஊற்றத்தைவிட்டு பகவத் கைங்கர்யத்தையே பரம ப்ராப்யமாகப் பற்றுங்களென்கிறார்.

“மிகவுணர்வத்தொடு எல்லாம் குறுகநோக்கிவிட்ட இறுகலிறப்பென்னுந் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்” என்றும் அந்வயிப்பது. சிறந்த ஞானத்தை யுடையனாய்க்கொண்டு ப்ராக்ருத போகங்களெல்லாவற்றையும் அற்பங்களாகக்கண்டு அவற்றில் ஆசையைவிட்ட-என்பது முதலடியின் கருத்து. மற்றொரு வகையாகவுமுரைக்கலாம்-குறுக-மனம் கண்ட விஷயங்களிலும் பரந்துசெல்லாதபடி அதனக்குறுக்கி; ஜிதேந்ரியனாகி என்றவாறு. உணர்வதொடு-ஜ்ஞாந்ஸ்வரூபனான ஆத்மாவோடேஇ மிகநோக்கி-நன்றாக ப்ரவணமாக்கி: எல்லாம்விட்ட-பகவத் ப்ராப்தியுமுட்பட எல்லாவற்றையும் வெறுத்த என்றபடி.  ஆத்மாநுபவமொன்றுதவிர மற்ற எந்த புருஷார்த்தத்தையும் கணிசியாத-என்றதாயிற்று.

இறுகலிப்பு-இறப்பு என்பது இங்கே மோக்ஷத்தைச் சொல்லுகிறது. இறுகல்-ஸங்கோசம்; பவதநுபவமாகிற மோக்ஷமானது விகாஸ மோக்ஷமென்றும், ஆத்மாநுப்வமாகிற மோக்ஷமானது ஸங்கோச மோக்ஷமென்றும் கொள்ளக்கடவது. ஸ்வரூபாநுரூபமான பகவர் கைங்கர்யங்களெல்லாம் நன்றாகச்செய்வதற்கு உறுப்பான மோக்ஷம் விகாலமோக்ஷம். ஆத்மா நுபமோக்ஷத்தில் இந்த விகாஸத்திற்கு அவகாசமில்லையன்றோ. “ஜராமரணமோக்ஷய” என்கிறபடியே மறுபடியும் பிறப்பதும் இறப்பது கிடையாது என்கிற இவ்வளவே பயனாதலால் இது ஸங்கோச மோக்ஷமெனத் தகுதியுடையதென்று திருவுள்ளம்பற்றிய ஆழ்வார் இறுகலிறப்பு என்று வெகு அழகாக அருளிச்செய்தார்.

என்னும் ஞானிக்கும்-(இறுகலிற்ப்பையே) புருஷார்த்தமென்றிருக்கும் ஜ்ஞானிக்கும் என்றபடி. (ஞானிக்கும்) என்றது-ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும் என்றவாறு.

அப்பயன் இல்லையேல்-எம்பெருமானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் என்றபடி. சிறுக நினைவதோர் பாசமுண்டாம்-இழிவான புருஷார்த்தங்களi நினைப்பதற்குறுப்பான கர்மபாசமே மேலிடும் என்றபடி. இங்கே ஆறாயிரப்படி காண்மின்; “ப்ராக்ருதவிஷய வைராக்ய பூர்வதமாக ஜ்ஞாநயோக நிஷ்டனானவனுக்கும் எம்பெருமானை ஆச்ரயித்தாவல்லாது ஆத்மாவலோகந விரோதி கர்மம் போகாது; பகவத் ஸமாச்ரயணத்தாலே யாயிற்று ஆத்மாவலோகநம் பிறப்பது.”-என்று.

அய்யனில்லையேல் என்பதற்கு ‘பகவதுபாஸநமில்லையாகில்‘ என்று பொருள் கும்க்ஷத்தில், பயன் என்கிற சொல்லால் அதனைக் குறித்தது எங்ஙனே கூடும்? ஸாதநமான உபாஸநத்தைப் பயனாகச் சொல்ல்லாமோ? என்ற சங்கை பிறக்கும், இதற்கு ஸமாதானத்தைப் பூர்வாசார்யர்களே காட்டியுள்ளவர்கள், பகவதுபாஸநத்தை ஆழ்வார் ஸ்வயம்புருஷார்த்தமாக நினைத்திருப்பவராதலால் இவருடைய கருத்தாலே பயனென்ற தத்தனை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின், “உபாஸநந்தான் ஸுகருபமாயிருக்கையாலே பயனென்கிறது, அவனுடைய ஸாதநம் இவருக்கு ப்ரயோஜனமாயிருக்கிறது“ என்று.

சிறுக நினைவதோர் பாசமுண்டாம்-இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்: (1) கைவல்ய ஸித்திக்காகவும் எம்பெருமானை அடிபணியாமல் முயற்சி செய்பவர்களுக்கு ‘இவர்கள் மிகவும் க்ஷுத்ரர்கள்’ என்று நினைக்கும்படியான கருமபந்தமே உண்டாகும். (2) நிக்ருஷ்ட புருஷார்த்தங்களை ஸ்மரிப்பதற்குறுப்பான ஸங்கம் உண்டாகும்.

பின்னும்வீடில்லை என்பதைத் தனி வாக்யார்த்தமாக யோஜிப்பதிலுங்காட்டில் “மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில் பின்னும் வீடில்லை” என்று யோஜிப்பது சிறக்கும்: ஈட்டின் யோஜனை இதுவே. மறுகலில் என்பதை ‘மறுகல் இல்’ என்று பிரித்து ஈசனுக்கு விசேக்ஷணமாக்குதல்; அன்றியே, மறுகலில் என்று ஏழாம் வேற்றுமையாகக்கொண்டு, மறுகுகிற மையத்தில்-ப்ராணவியோக ஸமயத்திலே வரும் கலக்கத்தில் என்று பொருள் கொள்வதுமுண்டு. (‘மறுகல் இல்’ என்று பிரிக்கும்போது. அகல ஹேயப்ரத்யநீகனான ஈசன் என்றபடி. பின்னும்வீடில்லை-அந்த கைவல்ய மோக்ஷம் ஸித்தக்கமாட்டாது. அந்த அதிகாரிக்கு அந்திமஸ்மிருதி இல்லாமல் இந்தவுடலை விடநேர்ந்தால் என்றபடி.  பின்னும்வீடில்லை-அந்த கைவல்ய மோக்ஷம் ஸத்திக்கமாட்டாது.  அந்த அதிகாரிக்கு அந்தமஸ்மிருதி ஆவச்யகம் என்று காட்டினபடி.

வீடு அஃதே-“திருநாரணன்தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ” என்று முந்துறமுன்னம் நான் சொன்னதுவே புருஷார்த்தம் என்றபடி.

 

English Translation

Seers who contemplate on consciousness, giving up all else, do attain the heaven of Atman, But memory remains, and drags them back to passions, and then there is no liberation, Hold on to the feet of the deathless Lord, for that alone is liberation

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain