nalaeram_logo.jpg
(3227)

அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன்,

அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான்,

எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய்,

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே.

பதவுரை

அல்லல்  இல் இன்பம்

-

வருத்தம் சிறிதுங்கலசாத ஆனந்தகுணம்

அளவு இறந்து

-

அளவில்லாமல் இருக்கப்பெற்று

எங்கும் அமர்

-

எங்கும் பரம்பின

அழகு சூழ் ஒளியன்

-

ஸௌந்தர்யத்தோடு சேர்ந்த லாவண்யமத்தையுடையவனாய்

அல்லி மலர் மகள்

-

தாமரை மலரில் தோன்றிய பெரிய பிராட்டியோடு

போகம்

-

ஆனந்தானுபவத்தினாலுண்டாகிய

மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்

-

வியாமோஹமே வடிவெடுத்திருக்கின்ற பெருமானாய்

எல்லை இல் ஞானததன்

-

எல்லையில்லாத ஞான விளக்கத்தையுடையனாய்

ஞானம் அஃதே கொண்டு

-

அந்த ஞானத்øதையே கருவியாகக் கொண்டு

கருமங்கல் எல்லாமும் செய்

-

காரிவுலகங்களையெல்லாம் உண்டாக்குமவனாய்

எல்லை இல்மாயனை

-

எல்லையில்லத ஆச்சரியசேஷ்டிதங்களையுடையவனான

கண்ணனை

-

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை

தாள் பற்றி

-

திருவடி தொழுது

யான் ஓர் துக்கம் இலன்

-

நான் ஒரு துக்கமுமுடைய னல்லேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  முன்னரண்டிகளால்-திருநாட்டில் எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிருப்பையும், பின்னடிகளால்-அவன் இந்நிலத்திற் செய்தருளுஞ் செயல்களையும் பேசி, இப்படிப்பட்ட எம்பெருமானையடையப் பெற்றதனால் தமக்கு யாதொரு துக்கமுமில்லையென்கிறார்.

ஸ்வர்க்கலோகத்தில் ஸுகமுண்டு என்றாலும் அது துக்கம் கலந்து ஸுகமேயல்லது நிஷ்க்ருஷ்டமான ஸுகமன்று; ஏனெனில்; “ஸ்வர்க்கேபி பாத்பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி:” என்றகிறபடியே, மற்றொருவன் புண்யபலன்களை யனுபவிக்க முடிந்தவாறே தலைகீழாகக் கீழே தள்ளப்படுவதைக் காணுமளவில் அனுபவிக்கின்ற இன்பமும் துன்பமாகவே தோற்றுமன்றோ; ஆதலால், அல்லலோடு கூடின இன்பமே சுவர்க்கம் முதலிய உலகங்களிலுமள்ளதாம். திருநாட்டிலானந்தம் அப்படியின்றிக்கே நிஷ்க்ருஷ்டமான ஆனந்தமாமயிருக்கும்படியை “இல்லலிலின்பமளவிறந்து’ என்றதனால் கூறினர்.

எங்குமழகமர் சூழொளியன் =திருநாடடங்கலும் வெள்ளந்கோத்துப் பெருகுகின்ற காந்தியையுடையவன் என்றபடி. அவயவசோபையென்றும் ஸமுதாய சோபையென்றும் அழகு இருவகைப்படும்; அடைவே, ஸௌந்தர்யமென்றும் லாவண்யமென்றும் வழங்கப்பெறும்; இங்க அழகு ஒளி என்றவிவற்றால் அவை விவக்ஷிதம்,“எங்குமழகமர் சூழொளியன்” என்பதற்கு -திருவடி தொடங்கித் திருமுடியீறாக ஒவ்வொரு அவயவத்தையும் தனித்தனி நோக்குமளவில்‘இங்கே இங்கு குடிகொண்டது, இங்கே அழகு குடிகொண்டது’ என்னலாம்படி ஒவ்வோரிடத்திலே பரிஸமாப்தமான அõகுடையவன் என்றும் பொருள் கூறுவர்.

இவ்வழகு காட்டிலெறித்த நிலாவாகாதபடி அனுபவிப்பார் உண்டென்கிறது இரண்டாமடி. புஷ்பத்திற் பரிமளந்தானே ஒருவடிவு கொண்டாற்போலே யிருப்பவளான பிராட்டியோடே நித்ய ஸம்ச்லேஷம் பண்ணி அதனாலுண்டாகிய ஆனந்தமே வடிவெடுத்தாற் போன்றுளன் எம்பெருமான் - என்றவாறு. இயற்கையான ஆனந்தத்திற்கு மேலே இதுவும் ஒரு பரமானந்தம். ஈடு- “தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே சரிய: பதித்வத்தால் வந்த ஆனந்தத்தை யுடையனாயிருக்கும்.”

எல்லையில்ஞனாத்ததன்= அந்தப் பிராட்டியோடு கலந்து பரிமாறுவதற்குப் பர்யாப்தமான ஞானபூர்த்தியையுடையவன் என்றபடி. (ஞானமஃதே கொண்டு இத்யாதி) பிராட்டிடியும் தானுமான சேர்த்தியிலே அவள் இங்கிதம் காட்ட அதை யுணர்ந்து அவளுடைய உகப்புக்காகப் பிரபஞ்சத்தைப் படைக்கின்றானெம்பெருமான் என்று ரஸோக்தியாக அருளிச்செய்கிறபடி. “யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்.” என்று ஆழ்வானம் ஸ்ரீஸ்தவத்திலருளிச்செய்தது இப்பாசுரம் நோக்கியேபோலும்.

எல்லையில்மாயனைக் கண்ணனை = ஸங்கல்பரூப ஜ்ஞானத்தாலே ஸ்ருஷ்டி முதலிய ஸகலத்தையும் நிர்வஹிக்க வல்லவனாயிருந்துவைத்து, ஸ்ரீக்ஷஷ்ணனாய் நேர்கொடு நேரே வந்து பிறந்து அனைவரையும் மோஹப்பித்த பெருமானைப் பற்றின வெனக்கு ஒரு துக்கமுமில்லை யென்றாராயிற்று.

English Translation

Krishna the doer of all, delights in the glances of Lakshmi, Pure delight beyond measure, a spread of beautiful radiance, Lord of boundless knowledge he is self-illumined.  Praising his feet, I am freed of despair.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain