nalaeram_logo.jpg
(3225)

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற் கவே,

துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து,

துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான்,

துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே.

பதவுரை

துயர் இல்

-

துன்பமுற்றதும்

சுடர் ஒளி

-

சிறந்த தேஜோரூபமுமான

தன்னுடைய சோதி

-

தன்னுடைய விக்ரஹமானது

நின்ற வண்ணமே நிற்க

-

அங்கு இருக்கும்படியிலொன்றுங் குறையாமே நிற்கும்படியாக

துயரில் மலியும் மனிசப் பிறவியில் தோன்றி

-

துக்கத்திலே யழுந்தின மனிதருடைய னோனிகளிலே பிறந்து.

கண் காண வந்து

-

(அனைவரும்) கண்ணாற் காணும்டியாக வந்து

துயரங்கள் செய்து

-

(அனைவரையும் ) ஈடுபடுத்தி

தன் தெய்வம் நிலை

-

தன்னுடைய அப்ராக்ருத ஸ்வபாவத்தை

உலகில்

-

இவ்வுலகத்தின் கண்

புக உய்க்கும்

-

பிரசுரப்படுத்தின

அம்மான்

-

ஸ்வாமியாய்

துயரம் இல் சீர்

-

ஹேய குணங்கள் இன்றிக்கே கல்யாணகுண மயனாய்

மாயன்

-

ஆச்சர்ய சக்தியுக்தனான

கண்ணன்

-

கண்ணபிரானுடைய

புகழ்

-

கீர்த்திகளை

துற்ற யான்

-

அநுபவிக்கப்பெற்றநான்

ஓர் துன்பம் இலன்

-

ஒரு துன்பமுமுடையே னல்லேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  தன்னுடைய அப்ராக்ருதமான திவ்யமான விக்ரஹத்தை இதரஸஜாதீயமாக்கி ஸம்ஸாரிகளின் கட்புலனுக்கு இலக்காக்கி வைத்த கண்ணபிரானுடைய திருக்குணங்களை அனுபவிக்கப் பெற்றவெனக்கு ஒரு துன்பமுமில்லை யென்கிறார்.

எம்பெருமான் மத்ஸ்யகூர்மாகி அவதாரங்களயும் ராமகிருஷ்ணாதி அவதாரங்களையும் செய்தருளின காலத்து ஏற்றுக்கொண்ட திருமேனியானது நம் போன்றவர்களின் உடல்போல மாம்ஸாதிமயம்போல் தோன்றியிருந்தாலும் உண்மையில் அப்படிப்பட்டதன்று; பரமபதத்தில் அப்ராக்ருதமாகவுள்ள திவ்யமங்கள விக்ரஹத்திற்கும் விபவாவதாரங்களில் பரிக்ரஹிக்கப்பட்ட திருமேனிக்கும் சிறிதும் வேற்றுமையில்லை- என்னுமிடம் முன்னடிகளிற் கூறப்பட்டது. கீழும் (3-5-5) “ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த” என்றருளிச் செய்தது நினைக்க. பகவத் கீதையிலும் நான்காமத்தியாயத்தில் “ப்ரக்ருதிம் 1“வாமதிஷ்டாய ஸம்பவாமி” என்றது காண்க.

“மனிசர்பிறவியில்” என்றதை உவலக்ஷணமாகவுங் கொள்ளலாம்; எந்நின்ற யோனியுமாயப் பிறப்பவனாதலால்.

துயரங்கள் செய்து = துயரங்களைத் தீர்ப்பதற்காக வந்து அவதரித்திருக்கச் செய்தே ‘துயரங்கள் செய்து’ என்னலாமோ வென்னில்! இங்கே நம்பிள்ளை யீடு காண்மின்; “அநுகூலரை அழகாலே நோவுபடுத்தியும், ப்ரதிகூலரை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்.”

உலகில் தன்தெய்வநிலை புகவுய்க்கு மம்மான்=பரமபதத்திலே நடையாடுகின்ற ஸ்வபாவத்தை ஸம்ஸாரிகளுக்குத் தெரிவித்தவன் என்றபடி. தூதுபோயும் சேரோட்டியாயிருந்தும் தன்படியைத் தெரிவித்தவன் என்னவுமாம். இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை நெருங்க அனுபவிக்கப் பெற்ற எனக்கு எவ்வகைத் துன்பமுமில்லை யென்றாராயிற்று. துற்ற-துற்றிய என்றபடி.

English Translation

Without the slightest blemish on his natural radiance the Lord appeared in a mortal form on this wretched Earth, performed many a mighty task, and established his divinity.  Praising Krishna, the mountain of glory, I am freed of despair.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain