nalaeram_logo.jpg
(3220)

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில்,

ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத,

நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே.

பதவுரை

பலபல

-

பலபல வகைப்பட்ட

சன்மம்

-

அவதாரங்களை

செய்து

-

பண்ணி

வெளிப்பட்டு

-

ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு

சங்கொடு சக்கரம்

-

சங்கு சக்கரங்களையும்

வில்

-

சார்ங்கத்தையும்

ஒண்மை உடைய

-

ஒளி பொருந்திய

உலக்கை

-

முஸலத்தையும்

ஒள் வாள்

-

அழகிய கந்தக வாளையும்

தண்டு

-

கௌமோதகி யென்னும் கதையையும்

கொண்டு ஏந்திக்கொண்டு

புள் ஊர்ந்து

-

பக்ஷிராஜனை வாஹனமாகக்கொண்டு

உலகில்

-

உலகத்திலுள்ள

வன்மை உடைய

-

கடினமான மனமுடைய

அரக்கர்

-

அரக்கர்களும்

அசுரர்

-

அசுரர்களம்

மாள

-

மாண்டொழியும்படி

படை பொருத

-

ஆயுதப்பிரயோகம் பண்ணிப் போர் செய்து தொலைத்து

நன்மை உடையவன்

-

நன்மை மிக்கவனான எம்பெருமானுடைய

சீர். திருக்குணங்களை

பரவ பெற்ற நான்

-

துதிக்கப்பெற்ற அடியேன்

ஓர் குறையு இலன்

-

ஒரு குறையுமுடையே னல்லேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார். சன்மம் பலபல செய்து- ‘பிறப்பிலி’ என்ற பேர்பெற்றிருக்கிற தான் கர்மவச்யனாயன்றியே க்ருபாவச்யனாய்ப் பல பலயோனிகளிலும் பிறக்கிறபடியை அநுஸந்திக்கின்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கின்றார். கர்மவச்யர்களான நம்முடைய பிறவிகட்கு எல்லை காணமுடியும்; அவனுடைய அவதாரங்கட்கு எல்லை காணப்போகாது; ஏனெனில், கருமத்திற்கு அவதியுண்டு; அநுக்ரஹத்திற்கு அது கிடையாதே; ஆதலால் “சன்மம் பலபல” என்றார்.

“என்றெனும் கட்குண்ணாற் காணாத அவ்வுரு” என்றபடியே புலப்படாத திருவுருவத்தைப் புலப்படுத்துகிறபடியை அநுஸந்திக்கின்றவெனக்கு ஒரு குறையில்லையென்கிறார் வெளிப்பாட்டு என்பதனால்.

(சங்கொடு சங்கரமித்யாதி.) ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலேயுள்ள திவ்யாயுதர் சேர்த்தியழகை யனுஸந்திக்கின்ற வெனக்கு ஒரு குறையுமில்லை யென்கிறார். ஒரு தேசவிசேஷத்திலே நித்யஸூரிகளே அனுபவிக்கக் கடவதான இவ்வழகை இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி தோளிலே சுமந்து ஆங்காங்குத் திரிபவன் பெரிய திருவடிகயாதலால் “காய்சினப் பறவையூர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார்முகில்போல்” என்று அநுபவிக்க அழகியதான அந்தச் சேர்த்தியைப் புள்ளூர்ந்து என்பதனால் அநுபவிக்கிறார்.

அழகுக்கு இழக்காய் வாழமாட்டாதே அம்புக்கு இலக்காய் முடிந்து போவதற்கென்று இட்டுப்பிறந்த அஸுரராக்ஷஸர்களை ஆயுதங்களாலே முடித்தருளும் வீரத்தை அநுஸன்திக்கிறவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார் பின்னடிகளால். வன்மையுடைய = எம்பெருமானது வடிவழகுகண்டும் நெஞ்சு நெகிழமாட்டாத கடுநெஞ்சினர் என்றபடி. மாளப் படைபொருத நன்மையுடையவன் = பிறரைக்கொல்வது தீமையாயினும் ‘ஆச்ரிதவிரோதிகள்’ என்னுங்காரணத்தினால் அரக்கர்களையும் அசுரர்களையுங்கொல்வது நன்மையே யென்று காட்டுகிறபடி. ஸங்கல்ப மாத்திரத்தினால் ப்ரபஞ்சஸ்ருஷ்டி முதலிய ஸகலகாரியங்களையும் நிர்வஹிக்க வல்லவனான தான் அந்த ஸங்கல்பத்தைக் கொண்டே அரக்கரசுரர்களையும் மாளச் செய்யலாமாயிருக்க, அங்ஙனம் செய்யாது அதற்காகத் தனியே ஒரு பயணமெடுத்துவிட்டு (அவதரித்து)ச் செய்ததை நன்மையாகக் கூறுகிறாராகவுமாம். “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்பது ஸ்ரீவனபூஷணம். பாகவதர்கள் பக்கலிலே எம்பெருமான் வைத்திருக்கும் ஆசாபாசம் வியக்கத்தக்கதென்று தேறினபடி.

சீரங்பரவப்பெற்ற நான் ஓர் குறைவிலன் =ஆஸுரப்ரக்ருதிகளாய்பிறந்து முடிந்து போவாரும், மனிசர்களாயே பிறந்துவைத்து நரஸ்துதி முதலியவற்றில் இழிந்து ஸ்வரூபநாசம் பெற்றுப்போவாருமான இவ்வுலகில் நானொருவனே குறையற்றவன் என்று தம்முடைய நன்மைக்குத் தாம் உகந்து பேசினாராயிற்று.

English Translation

The Garuda-riding Lord with conch discus, bow, mace and dagger, took many Avataras in this fair world, to rid the world of the clannish Asuras.  I am fortune-favoured to praise him and lack nothing.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain